நீங்களே உங்களை கலாய்ச்சிக்கிட்டா எப்படி?பாரதிகண்ணம்மாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்..இதை மறந்துட்டீங்களா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலை குறித்து நெட்டிசன்கள் இப்போது கலாய்த்து வருகிறார்கள்.
பாரதி கண்ணம்மா சீரியலில் நவீன திருவிளையாடல் நாடகம் நடத்தப்பட்டது பற்றி பல்வேறு கருத்துக்கள் குவிந்து வருகிறது.
திருவிளையாடல் நாடகத்தில் பாரதி கண்ணம்மா சீரியலை அப்பட்டமாக நடித்துக் காட்டி அவர்களை அவர்களே கலாய்த்து கொண்டதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

கண்ணம்மாவின் புதிய பிடிவாதம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் பாரதி டி என் ஏ டெஸ்ட் எடுத்ததும் அதில் லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் தன்னுடைய குழந்தைகள் என்பது பாரதிக்கு தெரிய வந்ததும், பாரதி கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சி கூத்தாடினார். ஆனால் கண்ணம்மா இத்தனை வருடங்களாக தன்னை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தியதற்காக, தான் இனி உன்னோடு சேர்ந்து வாழ முடியாது என்று மீண்டும் பேக்கை தூக்கிக் கொண்டு தனியாக கிளம்பி விட்டார் .கண்ணம்மா ஆரம்பத்திலிருந்து பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்த நிலையில் தற்போது பாரதி திருந்தி வந்தாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று வீம்பாக தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார்.

பாரதியின் முயற்சி
இந்த நிலையில் பாரதியும் நான் வந்தால் கண்ணம்மாவோடு என் குழந்தைகளை கூட்டிக்கொண்டு தான் ஊருக்கு வருவேன் என்று கண்ணம்மாவின் சொந்த ஊருக்கு வந்து கண்ணம்மாவின் மனதை மாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதில் கண்ணம்மாவின் அம்மாவின் நினைவு நாளை விமர்சனமாக கொண்டாடி இருக்கிறார். ஊரை எல்லாம் கூப்பிட்டு ஒப்பாரி வைத்து அழுது கூப்பாடு போட்டுக்கொண்டு பின்பு தன்னுடைய மாமியாருக்கு தான் மகனாக மாறி திதி கொடுத்து கண்ணம்மாவையும் அதில் கலந்து கொள்ள வைத்திருக்கிறார்.

அவங்களே சிரிச்சிட்டாங்களே
அதோடு மட்டுமல்லாமல் கண்ணம்மாவின் மனதை மாற்ற வேண்டும் என்றால் ஒரு நாடகத்தை போட்டு விட வேண்டும் என்று நவீன திருவிளையாடல் என சீரியல் நடிகை காயத்ரியும் அவருடைய கணவரையும் வைத்து சிவன் பார்வதியாக கண்ணம்மாவின் மொத்த சீரியல் கதையையும் இதில் கொண்டு வந்து விட்டனர். அதுவும் ஹைலைட்டாக சிவனோடு சண்டை இட்டுக்கொண்டு பார்வதி அவருடைய அப்பா வீட்டுக்கு போகும் போது கையில் பேக்கோடு கிளம்புவதை வைத்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாரதியும் கண்ணம்மாவும் இந்த சீனை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றனர். இதை வைத்து தான் தற்போது மீண்டும் ரசிகர்கள் கலாய்க்க தொடங்கி இருக்கின்றனர்.

நீங்களே கலாய்ச்சி கிட்டா எப்படி
அதுமட்டுமில்லாமல் பார்வதி கையில் ஹேண்ட் பேக்கை தூக்கிக்கொண்டு கோபமாக செல்லும்போது, "ஒரு தென்றல் புயலாகி வருதே" எனும் பாடல் ஒலிக்கிறது .இதை பார்த்து தாமரை இது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே என்று கண்ணம்மாவை பார்த்து நக்கல் அடிக்கிறார். இதை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். இதுவரைக்கும் பாரதிகண்ணம்மா சீரியலை பார்த்து ரசிகர்கள் கிண்டல் அடித்துக் கொண்டிருந்தனர். நெட்டிசன்கள் ட்ரோல்ஸ்கள் மூலமாக கலாய்த்து கொண்டிருந்தனர். ஆனால் இப்போது அந்த சீரியலை பற்றி அவர்களே கலாய்த்து கொள்வது புதுமுறையாக இருக்கிறது என்று ரசிகர்கள் வியந்து போய் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications