OTT: ஓடிடியில் மிரட்டும் திரிஷ்யம் இயக்குநரின் ‘மிராஜ்’ படம்! கதை எப்படி இருக்கு? வாங்க பார்க்கலாம்
சென்னை: 'திரிஷ்யம்' படத்தோட டைரக்டர் ஜீத்து ஜோசப்னு சொன்னாலே, நம்ம ஆட்களுக்குக் கண்ணுல ஒருவிதப் பயமும், எதிர்பார்ப்பும் வந்துடும்ல? அவரு இப்போ கடைசியா மலையாளத்துல எடுத்த க்ரைம் த்ரில்லர் படம்தான் 'மிராஜ்'. பெரிய எதிர்பார்ப்போட செப்டம்பர் 19, 2025ல் தியேட்டர்ல ரிலீஸ் ஆச்சு. ஆனா, ஓடிடி-யில பாக்குறப்போ என்னடான்னா... ட்விஸ்ட்தான் நிறைய இருக்கு, ஆனா, அந்த 'ஜீத்து ஜோசப் மேஜிக்' மிஸ்ஸாயிருக்குன்னுதான் எல்லாரும் புலம்புறாங்க! ஆனாலும் திரில்லர் விரும்பிகளுக்கு இது செம படம் தான்.

மிராஜ் படத்தின் கதை
'மிராஜ்' படத்தோட மையக்கதை ரொம்பப் பரபரப்பானதுதான். இந்தப் படத்துல (Abhirami ஆக) அபர்ணா பாலமுரளி முக்கிய ரோல்கள்ல நடிச்சிருக்காங்க (இதில் கேரக்டர் பெயர்கள் கொஞ்சம் குழப்பமா இருக்கு, ஆனா கதை இதுதான்). அபிராமிங்கிறப் பொண்ணோட வருங்காலக் கணவர் கிரண், ஒரு ரயில் விபத்துல இறந்துபோனதா நம்பப்படுது. ஆனா, கிரண் மாயமானதிலிருந்து, சில சக்திவாய்ந்த ஆட்கள் அபிராமியைத் தேடி வந்து, ஒரு முக்கியமான ஹார்ட் டிஸ்க் பத்தி விசாரிக்கிறாங்க.
பயணம்
கிரண் செத்ததற்குப் பின்னால் ஏதோ ஒரு ரகசியம் இருக்குன்னு அபிராமிக்குத் தெரிய வருது. ஒரு பத்திரிக்கையாளரோட (ஆசிஃப் அலி) உதவியோட, அந்த ஹார்ட் டிஸ்க்கைத் தேடி, உண்மை என்னன்னு கண்டுபிடிக்கப் புறப்படுறாங்க. மொத்தக் கதையும் ஒரு நிதி நிறுவன மோசடி மற்றும் அதைச் சுத்தி நடக்குறத் திருப்பங்கள்னுப் போகுது.
விமர்சனம்
'திரிஷ்யம்' இயக்குநரின் படம்னாலே, கில்லியான ஒரு க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் இருக்கும்னு எதிர்பார்ப்பாங்க ஆனால் இந்த படத்தில் வித்தியாசமான ஒரு கிளைமேக்ஸ் இருக்கிறது. படத்துல அடிக்கடி ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்டா வச்சு நிரப்பிருக்கார் ஜீத்து ஜோசப். ஆனா, சில ட்விஸ்ட்கள் நம்மளை உணர்ச்சிப்பூர்வமாகவோ, ஆச்சரியப்படுத்தவோ இல்லை. ஆனாலும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்க முடியாத வகையில் தான் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.
காட்சிகள் வீக்
கதையோட வேகம் இன்ட்ரஸ்ட்டிங்கா ஆரம்பிச்சாலும், இடைல வசனங்கள் மூலமாவே எல்லாக் கதையையும் சொல்றதால, காட்சிகளைப் பார்க்கச் சலிப்பா இருக்குது. தேவையில்லாத, நம்பவே முடியாத திருப்பங்கள் அதிகமா இருக்குறதால, ஒரு கட்டத்துக்கு மேல எதுவுமே மனசுல ஒட்டலைன்னு பலரும் சொல்றாங்க.
நடிப்பு
ஆசிஃப் அலி, அபர்ணா பாலமுரளி போன்ற திறமையான நடிகர்கள் இருந்தாலும், ஸ்கிரீன்ப்ளே பலவீனமா இருந்ததால அவங்க நடிப்புக்குரிய மரியாதை கிடைக்கலைன்னு சொல்றாங்க.ஆனாலும் அபர்ணா பால முரளி மீது கிளைமாக்ஸில் ஒரு அனுதாபம் கலந்த பெருமையும் தெரியும் வரும் வகையில் கதை இருக்கிறது.

ஓடிடி ரிலீஸ்
இந்தப் படம் தியேட்டர்ல செப்டம்பர் 19, 2025ல ரிலீஸ் ஆச்சு. ஆனா, வசூல் எதிர்பார்த்த அளவுக்குப் போகாததால, சீக்கிரமாவே அக்டோபர் 20, 2025-ல Sony LIV ஓடிடி தளத்துல ரிலீஸ் பண்ணிட்டாங்க. தியேட்டர்ல சொதப்பினாலும், 'ஜீத்து ஜோசப் படம்'ங்கிற ஒரு பேர் இருக்கிறதால, ஓடிடியில நிறைய பேர் பாத்துட்டுதான் இருக்காங்க. ஆனால், ட்விஸ்ட்டுக்குப் பின்னாடி ட்விஸ்ட் இருப்பதால், ஒரு தரமான த்ரில்லருக்கான வரவேற்பு இந்த படத்துக்கு ஓடிடியில் கிடைத்துக் கொண்டிருக்கிறது
ஆனாலும், ஜீத்து ஜோசப்பின் பெரிய ஃபேன்ஸ், இல்லாட்டி ஒரு தடவை படத்தைப் பாத்துட்டுப் போயிடணும்னு நினைக்கிறவங்க வேணும்னா பார்க்கலாம். மத்தபடி, 'த்ரிஷ்யம்' ரேஞ்சுக்கு எதிர்பார்க்காதீங்கப்பா!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications