பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்: முத்துவேல் பற்றி தெரிய வந்த பெரிய உண்மை.. அதிர்ச்சியில் கதிர்! உடையும் குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஏப்ரல் பத்தாம் தேதிக்கான எபிசோடில், முத்துவேல் பற்றிய உண்மை கதிருக்கு தெரிய வருகிறது. அதைக் கேட்டு அவர் அதிர்ச்சியில் இருக்கிறார். அதே நேரத்தில் சக்திவேலுக்கு முத்துவேல் பற்றி சந்தேகமும் வருகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய அப்டேட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், ராஜியின் அம்மா வடிவு கோலம் போட்டு கொண்டிருக்கிறார். அப்போது எதிர் வீட்டில் இருந்து கோமதி வெளியே வர அவரிடம் உடம்பு இப்போ எப்படி இருக்கு என்று நலம் விசாரிக்கிறார். மேலும் வீட்டில் நடந்ததை எல்லாம் பழனி சொன்னாரு ஆனா நீ எதற்காக வீட்டை விட்டு வெளியே போன? இதெல்லாம் ரொம்ப தப்பு எந்த விஷயமா இருந்தாலும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியதுதானே பிரச்சனையை வெளியே வரைக்கும் கொண்டு போகணுமா என்று அட்வைஸ் செய்கிறார்.
கோமதியின் கோபம்
மேலும் நீங்க சமாதானம் ஆகிட்டீங்களா என்று கேட்க அதற்கு கோமதி சமாதானம் ஆகிட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் சக்தி வேல் அங்கு வருகிறார். அவர் கோமதியை பார்த்து ஜாடையாக ஹாஸ்பிடலில் இருந்து வந்தியே உடம்பு எப்படி இருக்கு என்று கேட்க கேட்கிறார். அதற்கு கோமதி அதிர்ச்சியடைகிறார் ஆனாலும் ரொம்ப தான் அக்கறை என்று நக்கலாகவே பேசுகிறார்.
பிறகு சக்திவேல் நீ எப்படித்தான் அந்த பிச்சைக்காரன் கூட வாழ்ந்துகிட்டு இருக்கியோ... அவன் உன்னை வீட்டை விட்டு வெளியே துரத்தி இருக்கான் என்று கோபப்பட்டு திட்ட, அதற்கு கடுப்பான கோமதி என்னுடைய புருஷன் ஒன்னும் உன்னை மாதிரி அம்மாவை வீட்டை விட்டு துரத்தி விடுற ஆளு கிடையாது. நானாக தான் வெளியே போனேன்.
கோமதி கொடுத்த பதிலடி
ஆனாலும் என் புருஷன் ஒரு நாள் முழுக்க என் பின்னாடியே சுத்தி, என்ன சமாதானம் பண்ணி மீண்டும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்காரு. ஆனா நீ பெத்த அம்மாவையே வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டா.. நீ என் புருஷனை பத்தி பேசுவியா என்று கோபப்பட்டு திட்டுகிறார். மேலும் நீ என்னை பத்தி எதுவும் அக்கறை படம் வேண்டாம். எனக்கு எதுவும் நடந்தா புருஷன் இருக்காரு, என் பிள்ளைங்க இருக்காங்க அவங்க பாத்துக்குவாங்க என்று பதிலடி கொடுக்கிறார்.
சந்தோஷத்தில் பாண்டியன்
இதனால் கடுப்பான சக்திவேல் அங்கிருந்து போகிறார். இதையெல்லாம் பாண்டியன் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு மனதிற்குள் சந்தோசமாக இருக்கிறது. பிறகு அவர்கள் கடைக்கு போய் கோமதிக்கு போன் செய்து சாப்டியா, மாத்திரை போட்டியா? என்று நலம் விசாரிக்கிறார். இதைக் கேட்டு கோமதிக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது.
இத்தனை வருஷம் ஆகி என் புருஷன் இப்பதான் போன் பண்ணி நீ சாப்பிட்டியானு கேட்டிருக்கிறார். இதுவரைக்கும் பணம் கொடுத்து விடு, அதை செய் இதை செய்என்று சொல்றதுக்கு தான் எனக்கு போன் பண்ணுவாரு என்று அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் முத்துவேல் சோகமாக வீட்டில் இருந்து கிளம்புகிறார். அதை பார்த்த சக்திவேல் சாப்பிட்டுட்டு போங்க அண்ணே... எங்க போறீங்க என்று விசாரிக்கிறார்.
முத்துவேல் மறைக்கும் உண்மை
ஆனால் முத்துவேல் எதையும் சொல்லாமல் எனக்கு ஒரு வேலை இருக்கு, நீங்க சாப்பிடுங்க... இன்னைக்கு இருக்கிற எல்லா வேலையும் நீங்களே பாத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். முத்துவேலின் நடவடிக்கையில் ஏதோ தப்பு இருக்கிறது, சந்தேகமா இருக்கு என சக்திவேல் சொல்லிக் கொண்டிருக்கிறார். முத்துவேல் நடவடிக்கை பற்றி வீட்டில் யாருக்கும் தெரியாததால் இது பற்றிய எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
கதிருக்கு தெரிந்த உண்மை
மறுபக்கத்தில் கதிரின் நண்பன் ஒருவருக்கு அடிபட்டதால் அவரை ஹாஸ்பிடலில் பார்த்துக் கொண்டிருக்கிறார். பிறகு அவருக்கு மாத்திரை வாங்க வேண்டும் என்பதற்காக வெளியே வருகிறார். அங்கு முத்துவேல் சோகமாக அமர்ந்திருக்கிறார். பிறகு கதிர் மாத்திரையை வாங்கிக் கொண்டு தன்னுடைய நண்பரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் முத்துவேல் டாக்டர் ரூமில் இருந்து அழுதுபடியே வெளியே போகிறார்.
அதை பார்த்ததும் கதிருக்கு சந்தேகம் வந்து, டாக்டரிடம் போய் விசாரிக்க டாக்டர் இப்படித்தான் ஒரு பேஷண்டை தனியாக அனுப்பி வைப்பீங்களா? என்று முதலில் திட்டுகிறார். பிறகு சக்திவேலுக்கு கேன்சர் இருக்கிறது என்று சொல்கிறார். இதை கேட்டு கதிர் அதிர்ச்சியாகி நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications