Pandian Stores: மாமா ஒன்னும் நல்லவர் இல்ல, மீனா சொன்ன விஷயம்! ஆடிப்போன கோமதி! பாவம் பாண்டியன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 டிசம்பர் 19ஆம் தேதிக்கான எபிசோடில், தங்க மயில் மீண்டும் பாண்டியன் வீட்டு வாசலில் வந்து நின்று அழுது கொண்டிருக்கிறார். அப்போது கோமதி அவரை அசிங்கப்படுத்தி வீட்டை விட்டு துரத்துகிறார். அதேபோல பாண்டியன் பற்றி ராஜி, மீனா சொன்ன விஷயத்தை கேட்டு கோமதி அதிர்ச்சியில் இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்ப்போம்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், வீட்டில் நடந்த பிரச்சனைகளால் எல்லோரும் தூங்காமல் இருக்கின்றனர். அப்போது மாடியில் செந்தில் கதிருடன் தூங்காமல் இருக்கும் சரவணன் எல்லாம் என்னோட தலைவிதி என்று புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது தம்பிகள் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கத்தில் மீனா, ராஜி, அரசியுடன் கோமதியும் படுத்துக் கொண்டிருக்கிறார்.

கோமதி, நீங்க ஏதாவது என்கிட்ட பொய் சொல்லி இருக்கீங்களா? என்று கேட்க, மருமகள்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது நீ உண்மையாக காலேஜ்க்கு தான் போறியா ராஜி? என்றும், மீனாவிடம் நீ கவர்மெண்ட் வேலைக்கு தான் போறியா? என்றும் கேட்கிறார். இதனால் என்ன அத்தை இப்படி எல்லாம் கேட்கிறீங்க என்று மருமகள்கள் கேட்கின்றனர்.
அதற்கு கோமதி எனக்கு யாரை நம்புவது என்றே தெரியவில்லைடி. அவளை எப்படி எல்லாம் பார்த்துக்கிட்டோம். என் புருஷன் அவளை அவ்வளவு தாங்குனாரு. ஆனா அவ இப்படியெல்லாம் ஏமாத்தி இருக்காளே.. அவ எல்லா பொய்யும் சொல்லிக்கிட்டு என் பையன் மேல குறை சொல்லிட்டாடி என்று புலம்பி கொண்டு இருக்க, அதற்கு மீனா ஆமா அத்த மாமா எங்களை ஒரு மாதிரியும் அக்காவை ஒரு மாதிரி தானே பார்த்தாரு என்று சொல்கிறார்.
என்னடி சொல்லுறீங்க? என் புருஷன் அப்படியே என்னடி பண்ணுனாரு என்று கோமதி கேக்க, அதற்கு ஆமா நானும் ராஜியும் நாங்களாக வந்த மருமகள்கள். ஆனா மயில் அக்கா அவங்க கூட்டிட்டு வந்த மருமகள்னு ஒரு மாதிரி நடத்துனாரு என்று தங்கள் மனதில் வைத்திருந்த விஷயங்களை உடைக்கின்றனர். மறுபக்கத்தில் பாண்டியன் தூங்காமல் மாடிக்கு வந்து மகனை பார்க்கிறார்.
சரவணன் நடுவில் படுத்து இருக்க செந்தில் மற்றும் கதிர் இருவரும் அண்ணனுடன் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அப்போது உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு உன் வாழ்க்கை கெடுத்துட்டேன் என்று பாண்டியன் மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த பக்கம் மயிலும் தூங்காமல் அழுது கொண்டிருக்க, அதற்கு அவருடைய அம்மா வந்து ஆறுதல் சொல்லி உனக்காக உன்னுடைய வாழ்க்கையை சரி பண்ணுறேன் என்று வாக்கு கொடுக்கிறார்.
அடுத்த நாள் காலையில் மீனாவும் ராஜியும் வீட்டு வாசலில் கோலம் போடுவதற்காக வெளியே வருகின்றனர். அப்போது மயில் வீட்டு வாசலில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார். மயிலை பார்த்ததும் என்னக்கா இங்க பண்ணுறீங்க என்று கேட்க, இது என் வீடு தானே? நான் இங்க இருந்து தானே என்ன வேணும்னாலும் பண்ணனும். நான் அழுத ஈரம் கூட காயல. அதுக்குள்ள கோலம் போட வந்துட்டீங்களா? என்று திட்டி விட்டு மாமியாரை கூப்பிடுகிறார்.
இதனால் கோபமாக வாசலுக்கு வந்த கோமதி உனக்கு வெக்கமா இல்லையா? நேத்து தானே உன்னை அவமானபடுத்தி துரத்தினோம். அப்புறம் எதுக்கு இங்க வந்து எங்க நிம்மதியை கெடுக்கிற என்று திட்டுகிறார். அதற்கு மயில் நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க என்னை வீட்டுக்குள்ள விடுங்க என்று கெஞ்சி கொண்டிருக்கிறார். உடனே கோபமாக வீட்டுக்கு போன கோமதி, மயில் அம்மாவுக்கு ஃபோன் போட்டு உன் பொண்ணை இங்க வர வச்சு நாடகம் போடுறியா? என்று சண்டை போடுகிறார். இப்படியாக இன்றைய முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications