பாண்டியன் ஸ்டோர் 2 ராஜிக்காக நிஜ கணவர் செய்ததை பாருங்க! இப்படி ஒரு துணை இருந்தால் வாழ்க்கையே வசந்தம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் "ராஜி" கேரக்டரில் நடிகை "ஷாலினி" நடித்து வருகிறார். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் திருமணம் நடைபெற இருக்கிறது.
அதற்கான ரிசெப்ஷனில் ராஜி டான்ஸ் ஆடுவதற்கு ராஜியாக நடிக்கும் ஷாலினியின் நிஜ கணவர் டான்ஸ் ஸ்டெப் சொல்லிக் கொடுத்திருக்கும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணத்திற்கு பிறகு பல பெண்களின் கனவுகள் முடக்கப்படுவதை அதிகமான வீடுகளில் பார்க்க முடிகிறது. ஆனால் ஷாலினியின் கணவன் அவர் ஆசைப்பட்ட மாதிரி ஷாலினிக்கு வாழ்க்கை வெற்றி அடைய அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறாராம். ஷாலினியின் கணவர் மட்டுமல்லாமல் அவருடைய மாமியாரும் ஷாலினிக்கு உதவியாகத்தான் இருக்கிறாராம். இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் ஷாலினி உருக்கமாக பேசியிருந்தார்.
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியலின் ராஜியாக பலருக்கும் தெரிந்த ஷாலினி ஆரம்பத்தில் சின்ன திரையில் அறிமுகமானது கதாநாயகி என்ற நிகழ்ச்சியில் தான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவர் தன்னுடைய திறமையை காட்டி பலருக்கும் பரிச்சயமாக இருந்தார். ஷாலினி தமிழ் பொண்ணு அதுவும் தமிழில் சரளமாக பேசக்கூடியவராக இருந்தாலும் இவருக்கு சீரியலில் டப்பிங் குரல் தான் பேசி இருக்கின்றனர். ஷாலினியின் சொந்த ஊர் கோயம்புத்தூர் தானாம்.

அங்கு தான் பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாமே. சின்ன வயசுல இருந்து ஆடுவது, பாடுவது போன்றவற்றில் ஆர்வமாக இருந்த ஷாலினிக்கு வீட்டில் இதற்கெல்லாம் அனுமதி கிடையாதாம். அதனால் படித்து முடித்து ஐடியில சாப்ட்வேர் டெவலப்பராக இருந்து போது தான்
ஷாலினிக்கு இது நம்முடைய லைஃபே கிடையாது. நம்ம கேரியரை நாம் தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவுக்கு வந்திருக்கிறார். அந்த நேரத்தில் பிரபு என்பவரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்.
பொதுவாக பல நடிகைகள் நடித்து ஓரளவிற்கு பிரபலமான பிறகுதான் திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகுவார்கள். ஆனால் ஷாலினி திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்திருக்கிறார். தன்னுடைய மனைவிக்கு நடிப்பில் அதிக ஆர்வம் இருப்பதை தெரிந்து கொண்ட கணவர் பிரபு, ஷாலினியை பல இடங்களுக்கு ஆடிசனுக்கு கூட்டிட்டு போயிருக்கிறார். அப்படி ஆடிஷனுக்கு போய் கிடைத்த வாய்ப்பு தான் கதாநாயகி நிகழ்ச்சி. கோயம்புத்தூரில் நடந்த அந்த ஆடிஷனில் பல ஆயிரம் பேர் கலந்து இருக்காங்க.

அதில் முதலில் 80 பேரை செலக்ட் பண்ணி, அப்புறம் அதுல 50 பேரை செலக்ட் பண்ணி, அதுல இருந்து 30 பேரை செலக்ட் செய்து பிறகு 20 பேரை செலக்ட் செய்து கடைசியா அதுல எட்டு பேரை தான் செலக்ட் பண்ணி இருக்காங்க. அதில் எட்டு பேர்ல அடுத்தடுத்த பெர்ஃபார்மன்ஸ் பண்ணி அந்த நிகழ்ச்சிக்கு நடுவராக வந்த கே. எஸ் ரவிக்குமார், நடிகை ராதிகா இருவருடைய மனதிலும் இடம் பிடித்து கதாநாயகி நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்று இருந்தார்.
அதுபோல ஷாலினி கதாநாயகி நிகழ்ச்சியில் பருத்தி வீரன் ப்ரியாமணி, சின்னதம்பி குஷ்பூ போன்ற பல கெட்டப்களில் நடித்து அங்கிருந்தவர்களை வியக்க வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஷாலினியின் கணவர் பிரபு நடத்திய ஸ்டுடியோவில் ஷாலினி நடன பயிற்சி வகுப்பில் சேர்ந்துதான் அவரை காதலித்திருக்கிறார்.

நம்பிக்கை ரொம்ப முக்கியம்.. ரிலேஷன்ஷிப்ல நான் செஞ்ச பெரிய தப்பு.. நடிகை கௌதமி ஓப்பன் அப்
காதலித்ததை நேரடியாக பிரபுவின் அம்மாவிடம் ஷாலினி கூறி, உங்க பையனை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் ஆனால் அவர் ஷை டைப்பாக இருக்கிறார் என்று பேசி இருக்கிறார். அதுபோல ஷாலினிக்கு கணவர் மட்டும் இல்லாமல் ஷாலினியின் மாமியாரும் அவருடைய கனவு நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருக்கிறாராம்.
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ராஜி டான்ஸ் ஆடுவதற்கு மாஸ்டராக அவருடைய கணவர் பிரபு டான்ஸ் ஸ்டெப் சொல்லிக் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவை ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் நிலையில் அதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

பொதுவாக நடிகைகளாக மட்டுமல்லாமல் எந்த துறையில் வேலை பார்க்கும் பெண்களாக இருந்தாலும் சரி அவர்களுடைய கணவர் அவர்களுக்கு துணையாக இருந்தால் அவர்களுடைய சாதனை வளர்ந்து கொண்டே இருக்கலாம். அதற்கு எடுத்துக்காட்டாகத்தான் இப்போது பிரபுவும் ஷாலினியும் இருக்கிறார்கள்.
இதுபோல ஒரு கணவர் அமைந்தால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை வசந்தமாகத்தான் இருக்கும் என்று பலர் கமெண்ட்களை குவிக்கிறார்கள். அதே நேரத்தில் கணவன் மட்டுமல்லாமல் மனைவியும் ஒரு கணவரின் திறமை மற்றும் அவருடைய கனவுக்கு துணையாக இருந்தால் அந்த கணவராலும் அடுத்தடுத்த வெற்றிகளை தனதாக்க முடியும் என்பதற்கு இந்த அழகான தம்பதிகள் எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றனர்.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications