ஐந்து நாட்கள் பட்ட வலி, வேதனை.. இப்படி பண்ணுவாங்கன்னு நினைக்கல.. நடிகை சரண்யா எமோஷனல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் கேரக்டரில் நடிகை சரண்யா துரோடி நடித்து வருகிறார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில் பட்ட வேதனை, வலி குறித்து ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். இது பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் வெற்றியை தொடர்ந்து அதில் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. முதல் பாகத்தில் நடித்த ஒரு சில நடிகர்கள் மட்டும்தான் இரண்டாவது பாகத்தில் நடிக்கிறார்கள். அதில் தங்கமயில் கேரக்டரில் நடிகை சரண்யா துரோடி நடித்து வருகிறார். இவர் கதாநாயகியா வில்லியா என்று குழம்பும் வகையில் தான் தன்னுடைய நடிப்பை வெளிகாட்டிக் கொண்டிருக்கிறார்.

இதுவரைக்கும் அவர் பல சீரியல்களில் கதாநாயகியாக தான் நடித்திருக்கிறார் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிறகு "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி", "சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்ற இரண்டு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதற்குப் பிறகுதான் இவருக்கு "நெஞ்சம் மறப்பதில்லை" என்று சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் மூலமாக அவருக்கு சின்னத்திரையில் அதிகமான ரசிகர்கள் உருவாகி விட்டனர்.
அந்த சீரியல் முடிவுக்கு பிறகு சன் டிவியில் பெயர் வாங்கிய ரோஜா சீரியலின் தெலுங்கு ஒளிபரப்பில் ஜெமினி சேனலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். அதே வருஷத்தில் சன் டிவியில் "ரன்" சீரியலில் தெய்வமகள் சீரியல் கிருஷ்ணாவோடு நடித்திருந்தார். ஆனால் அந்த சீரியலும் திடீரென்று முடிவுக்கு வந்துவிட்டது. அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஆயுத எழுத்து சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.
அதுவும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வெற்றி அடையவில்லை. சீரியல் திடீரென்று முடிக்கப்பட்டது. அதற்கு பிறகு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த சரண்யா இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நாய்க்குட்டி வேஷம் போட்டு டான்ஸ் ஆடியது பற்றி ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில் சில விஷயங்கள் நாம வெற்றிக்காக பண்ணுவோம். சில விஷயங்கள் நாம் மனசார பண்ணுவோம். அப்படி பண்ணுனது தான் இது.. டான்ஸ் ஜோடி டான்ஸ் ஷோவுக்காக இந்த நாய்க்குட்டி வேஷம் போட்டு தொடக்கத்தில் ஒரு ஆர்வத்துல ஏத்துக்கிட்டேன் ஆனா இரண்டாவது நாளிலிருந்து முட்டி இரண்டும் வீங்க தொடங்கிடுச்சு.
நான்காவது நாள் ஸ்டேஜ் ரிகர்சலில் எழுந்து நிற்கவே முடியவில்லை. அழுத்தம் அதிகமாகி இரத்தம் வடிய தொடங்கிடுச்சு. ஐந்தாவது நாள் ஸ்டேஜ் பர்பாமன்ஸ் அன்றைக்கு நாங்கள் ஆல்மோஸ்ட் வெளியேற வேண்டிய ஜோடியாக இருந்தோம். எங்களை பொறுத்த வரைக்கும் அந்த ஸ்டேஜ்ல அதுதான் எங்களுடைய கடைசி பர்பாமன்ஸ். அடுத்து ஐந்து நிமிடங்களுக்கு நமக்கு முட்டின்னு ஒன்னு இல்லன்னு நினைச்சுகிட்டு ரெண்டு முட்டியும் அழுத்தி படும்படி ஒரு நாய்க்குட்டியாகவே மனசார நம்பி ஆடுனேன்.
ஆடி முடிஞ்சு எழுந்து நின்னு பார்த்தா அங்கு பார்வையாளர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்கள் உட்பட எல்லோரும் எழுந்து நின்று மனசார கைதட்டினார்கள். எப்பவும் ஜாலியா கமெண்ட் சொல்ற மாஸ்டர் கண்ணுல தண்ணிய பார்த்தோம். அன்னைக்கு கோல்டன் பெர்பார்மன்ஸ் ஜெயித்தோம். இந்த பர்பாமன்ஸ் எங்களை காப்பாற்றி அடுத்த ரவுண்டுக்கு இன்னும் தைரியமா கூட்டிட்டு போச்சு. வேறெந்த வேஷம் போடும் போதும் இவ்வளவு வலியை நான் அனுபவித்தது இல்ல. அதே மாதிரி மனசு எவ்வளவு திருப்தியா பீல் ஆனதும் இல்ல என்று அந்த பதிவில் சரண்யா பகிர்ந்து இருக்கிறார். இதற்கு பலரும் கருத்து தெரிவித்து அவரை பாராட்டி வருகிறார்கள்.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications