• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Pandian Stores Serial: இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல... ஜீவாவை வீட்டோடு மாப்பிள்ளையாக்க...!

|

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், ஆனந்தம் பட பாணியில் பயணித்து வருதுன்னு எல்லாருக்கும் தெரியும். அதுல கிளைமேக்ஸ் காட்சியில்தான் அபாஸை வீட்டோட மாப்பிள்ளையாக்க முயற்சிப்பாங்க. ஆனால், இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே அண்ணன் தம்பி ஒற்றுமையை காண்பிச்சு வந்தவங்க, இப்போ புதுசா ஜீவா கதையைத் துவக்கி இருக்காங்க.

இதிலும் ஆனந்தம் பட பாணியில் வீட்டோடு மாப்பிள்ளையாக்கும் முயற்சி இப்போது நடந்து வருகிறது. இதையும் தானடி இப்போது 500 எபிசோடுகளைத் தொட்டு இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்னும் சில நூறுகள் என்று எட்ட வாய்ப்பு இருக்கிறது. வசதியான வீட்டு பெண் மீனாவை ஜீவா காதலிச்சு கல்யாணம் செய்துக்கறான்.

மீனா உண்டாகி இருக்கும் இந்த நேரத்தில் அவள் அப்பா வீட்டோடு சேர்ந்துவிடுகிறார்கள். மாமனார் வீட்டுக்கு விருந்துக்கு வந்து இருக்கும் ஜீவாவை வீட்டோடு மாப்பிளையாக்க தூண்டில் போடுகிறார் மீனாவின் அப்பா. இதை ஜீவா எப்படி முறியடிக்கிறான் என்பதும் பல எபிசோடுகள் நீளும் கதையாக இருக்கும்.

கதிர் முல்லை

கதிர் முல்லை

ஆரம்பத்தில் ஜீவாவுக்கு என்று இருந்த முல்லையை விட்டு, ஜீவா மீனாவை காதலித்து வருவதை பல எபிசோடுகள் நீட்டித்து வந்தார்கள். முல்லைக்கும், கதிருக்கும் கல்யாணம் முடிவாகி கடைசி நேரத்தில் ஜீவா மீனாவை கல்யாணம் செய்துக்க, அண்ணன் ஜீவாவின் வாழ்க்கை காதலியுடன் சேர்ந்து வாழ்வதுதான் என்று அண்ணனுக்கு ஆதரவாக இருந்த கதிருக்கு முல்லையுடன் கடைசியில் கல்யாணம் முடிந்தது. ஜீவா வாழ்க்கை ஒருவிதத்தில் சந்தோஷமாக சென்று கொண்டு இருக்க, அப்போதும் முல்லை, கதிரின் பிடிக்காத வாழ்க்கை ஹைலைட் காட்சியாக காண்பிக்கப்பட்டது.

kodeeswari: கலக்கும் கோடீஸ்வரி.. அதிரடியாக நடத்தும் ராதிகா.. இது கலர்ஸ் தமிழ் டிவியின் பிக் பாஸ்!

காதல் ரசம்

காதல் ரசம்

இப்போதும் முல்லை கதிரின் காதல் ரசம் சொட்டும் காட்சிகளே ஹைலைட் கட்சிகளாகி காண்பிக்கப்பட்டு வருகிறது. இருவரும், சந்தோஷமாக இருக்கிறார்களா, இல்லையா என்று கவலையில் இருக்கும் முல்லையின் அப்பா இருவரும் பைக்கில் ஒன்றாக போவதை பார்த்து உள்ளம் குளிர்ந்து போகிறார். காதல் வாகனமான பைக்கில், கதிரின் வயிற்றில் கையை வளைத்துப் பிடித்துக்கொண்டு, ஆனந்தத்தில் மூழ்கி முல்லைத் திளைக்க, அதற்கு சற்றும் சளைத்தவன் இல்லாமல் கதிரும் ஆனந்தத்தில் திளைக்கிறான்.

மூர்த்தி தனம்

மூர்த்தி தனம்

அண்ணன் மூர்த்தி அண்ணி தனத்துக்கு எப்படியாவது பிள்ளை பேறைத் தர வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் தம்பி கதிரும், அவன் மனைவி முல்லையும் என்று கதையின் முக்கிய அம்சமாக இருக்கிறார்கள். எனவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதை ஜீவாவை வீட்டோடு மாப்பிள்ளையாக்க முயற்சிப்பதோடு நின்றுவிடப் போவதில்லை, இன்னும் இன்னும் என்று எபிசோட் நீள பல கதைகள் இருக்கு. அதை சோர்வில்லாமல் கொண்டு செல்வதில் கதாசிரியருக்கும் முக்கிய பங்கு இருக்கு.

ஜனார்த்தனம் முயற்சி

ஜனார்த்தனம் முயற்சி

ஜீவா, மீனா இருவரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்க, தானும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் ஜனார்த்தனம் மெதுவாக தனது வேலையை ஆரம்பிக்கிறார். மாப்பிள்ளை மீனா பேரில் ஒரு சூப்பர் மார்க்கெட் வச்சு தரேன். அதை நீங்களே பார்த்துக்கோங்க என்று ஆரம்பிக்கிறார். குடும்பமா இருந்தாலும் சரி, தொழிலாக இருந்தாலும் சரி... பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தோடதான் என்று சொல்லி கடுப்பாக எழுந்து போகிறான் ஜீவா. அப்பா நானும் உங்களை பார்க்க அவரை அழைச்சுட்டு வந்தேனே தவிர அவரை பிரிச்சு அழைச்சுட்டு வர நினைச்சதே இல்லைப்பா என்று மீனாவும் பாதி சாப்பாட்டில் எழுந்து விடுகிறாள்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Jeeva and Meena are eating and Janardanam is slowly starting his job. The groom gave me a supermarket at Meena name. He starts to take care of it yourself. Whether it is family or business ... Jeeva is getting upset by saying that Pandian Stores is with family. Meena wakes up at half-eaten, as Daddy and I invite him to see you.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more