நீங்க நினைக்கிற மாதிரி கதிர் கிடையாது..என்னை பார்த்து சொன்ன வார்த்தை! வருத்தத்தில் சாய் காயத்ரி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து சமீபத்தில் தான் சாய் காயத்ரி விலகி இருந்தார்.
இந்த நிலையில் இந்த சீரியலில் அவரோடு நடித்த நடிகர்கள் பற்றி பல தகவல்களை கூறி இருக்கிறார்.
குறிப்பாக கதிர் கேரக்டரில் நடிக்கும் குமரன் பற்றி பல தகவல்களையும் கூறியிருக்கிறார்.

சீரியலாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி அதில் நடிக்கும் கேரக்டர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று யாரும் நம்பி விடாதீர்கள். அப்படியெல்லாம் இருக்க மாட்டார்கள் என்பது பல நேரங்களில் வெளிச்சத்துக்கு வருகிறது. அந்த மாதிரி தான் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடக்கும் பல விஷயங்கள் பற்றி அந்த சீரியலை விட்டு விலகிய சாய் காயத்ரி கூறியிருக்கிறார்.
சீரியலில் கதிர் கேரக்டரில் குமரன் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருக்கு சிரிக்க தெரியுமா? என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. அந்த அளவிற்கு தான் எப்போதும் டெரராக முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார் என்றும் தங்கள் குடும்பத்துக்கு சின்ன பிரச்சனை வந்தாலும் அடிபிடி என்று கலவரத்தில் இறங்கி விடுவார்.
அதுபோல தனக்கு ஒரு அவமானம் என்றால் குடும்பத்தை விட்டு வெளியேறும் கதிர் தன்னுடைய அண்ணன் தம்பிகள் அந்த முடிவை எடுத்தால் இது தவறு என்று கூறி குடும்பத்தை சேர்த்து வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் நிஜ கேரக்டரில் கதிர் அப்படி எல்லாம் கிடையாது என்று அந்த சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்து சமீபத்தில் வெளியேறிய சாய் காயத்ரி கூறியிருக்கிறார்.
சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது இந்த ஒன்றரை வருடங்களில் நாங்கள் அதிகமாக ஜாலியாக பேசிக்கொண்டு இருப்போம். அப்போது நான் அடிக்கடி கடி ஜோக், மொக்க ஜோக் சொல்லிக்கொண்டு இருப்பேன். பல நேரங்களில் அதைக் கேட்டு கடுப்பாகும் கதிர் நான் சொல்லும் ஜோக்கை கேட்டு சிரிக்கும் லாவண்யாவை திட்டுவார்.

தயவு செய்து நீங்க சிரிச்சி பாராட்டி இவங்கள மேலும் இந்த மாதிரி மொக்க ஜோக் சொல்ல வச்சிடாதீங்க, இதை என்கரேஜ் பண்ணாதீங்க, இதை இப்படியே விட்டுருங்க என்று கலாய்ப்பார். அதே நேரத்தில் சில நேரங்களில் நான் சொல்லும் ஜோக் சூப்பராக இருக்கிறது என்று முதலில் அழகாக பாராட்டுவதும் இவர்தான். அடிக்கடி சூட்டிங் ஸ்பாட்டில் இவரை வைத்து நான் கலாய்ப்பேன்
அப்போது அதை பெரிது படுத்தாமல் இவரும் சிரித்துக் கொண்டிருப்பார். குமரன் சீரியலில் பார்ப்பதற்கும், நிஜத்தில் பார்ப்பதற்கும் ரொம்பவே வித்தியாசம். நிஜத்தில் ரொம்ப கலகலப்பானவர் எல்லோரும் நல்லா தான் பழகுவார். அதுபோல இந்த சீரியலில் என்னோடு நடித்த நடிகர்கள் எல்லோருமே நல்ல கேரிங்காக இருந்தாங்க. ஆனால் நான் அவங்க கிட்ட சீரியலை விட்டு விலகுகிறேன் சொல்லும்போது தான் கொஞ்சம் அதிர்ச்சி ஆகிட்டாங்க என பல தகவல்களை சாய் காயத்ரி கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications