இதுவரைக்கும் வந்த எல்லாவற்றையும் விட இதுதான் பெஸ்ட்...ரோஜாவை சுற்றிவரும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : மஞ்சள் வண்ண ரோஜாவாக மாறி மணம் வீசிக்கொண்டிருக்கும் பிரியங்கா நல்கரியை பார்த்த ரசிகர்கள் அசந்து போய்விட்டார்களாம்.

இதுவரைக்கும் எத்தனையோ போஸ்ட் போட்டிருந்தாலும் இந்த போஸ்ட் தான் எல்லாவற்றையும்விட அசத்தி விட்டது என அசந்து போன ரசிகர்கள் உருகி வருகிறார்கள்.

மாடர்ன் உடையில் மாஸாக கையை தூக்கி கண்ணாடியை மாட்டும் பிரியங்காவை பார்த்ததும் நாங்க வேணா உதவிக்கு வரவா? என ஓடோடி வரும் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

இந்த போட்டோவில் என்னவோ இருக்கு

இந்த போட்டோவில் என்னவோ இருக்கு

மஞ்சள் உடையில் கொள்ளை கொள்ளும் அழகில் தேவதையாக மின்னும் சன்டிவியின் ரோஜாவை பார்த்து பலபேர் வாயடைத்துப் போய்விட்டார்கள். இதுதான் ரோஜா என்று சொன்னால் யாரும் நம்ப முடியாது என்று கூட ஒரு சிலர் கூறி இருக்கிறார்கள். அந்த அளவிற்கு மாடர்ன் உடையில் மாஸ் காட்டியிருக்கிறார். இவருடைய லேட்டஸ்ட் போட்டோஸ்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் கலக்கோ கலக்கு என்று கலக்கி வருகிறது. சீரியலில் இவரை புடவையில் பார்த்த ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இப்படி ஒரு தரிசனத்தை பார்த்ததும் கொஞ்சம் ஷாக்காக தானே செய்வார்கள்!!. ஆனால் இது மாடலிங் போட்டோ ஷூட் என்று அவர்களுக்கு தெரியவில்லை. என்ன இப்படி மாறிவிட்டார் ஏதேனும் புது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி விட்டாரா என்று கேட்டு வருகின்றனர்.

தினமும் பல வீட்டில் வாசம் வீசுதே

தினமும் பல வீட்டில் வாசம் வீசுதே

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் தற்போது ரசிகர்களை அதிகமாக கவர்ந்திழுத்தது எந்த சீரியல் என்று கேட்டால் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது ரோஜா சீரியல் தான். இந்த சீரியலின் விறுவிறுப்பு குறையாததும், அர்ஜுன் ரோஜாவின் காதல் காட்சிகள் அனைவருக்கும் பிடித்ததாக இருப்பதுமே இந்த சீரியலுக்கு ஒரு கூடுதல் பிளஸ் பாயிண்ட் தான். அதனாலேயே சீரியலுக்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறார்கள். அதுவும் இந்த சீரியலுக்கு பிறகு பிரியங்கா நல்கரிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது. இவர் ஒரு கன்னட நடிகையாக இருந்தாலும் முதல்முதலாக இந்த தமிழ் சீரியலில் அறிமுகமாகியிருக்கிறார்.

வாடாத ரோஜா பிரியங்கா

வாடாத ரோஜா பிரியங்கா

ரோஜா சீரியலில் இவர் அறிமுகமாகும்போது ரொம்பவே பயந்து இருக்கிறார். தனக்கு தமிழ் தெரியாது என்பது ஒரு முக்கியமான காரணமாக அவர் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது தமிழ் நடிகைகள் கூட சிலர் தமிழில் பேசாதவர்களாக இருக்கும் நிலையில் நான் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கிறது மாதிரி அழகாக கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசுகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் லைவில் வரும் போது கூட தமிழில் தான் பேசிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் எந்த இண்டர்வியூவில் கலந்து கொண்டாலும் தமிழிலேயே பேசி வருகிறார். அதனாலேயே பல ரசிகர்களுக்கு இவரை பிடித்து விட்டது. சீரியல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதுவும் இன்ஸ்டாகிராமில் இவருக்கு இதுவரைக்கும் 492 கே பாலோவர்ஸ் இருக்கின்றனர். 1 மில்லியன் பாலோவர்ஸ் வந்து விட வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் அதிவேகமாக செயல்பட்டு வருகின்றனர்.

பார்த்ததும் நம்பமுடியவில்லையாம்

பார்த்ததும் நம்பமுடியவில்லையாம்

இவர் இதுவரைக்கும் 2034 போஸ்ட் போட்டு இருக்கிறார். ஆனால் அதில் எல்லா போஸ்ட்க்களையும் தூக்கி சாப்பிடுகிற மாதிரி லேட்டஸ்டாக இவர் வெளியிட்ட போஸ்ட் தான் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்து இழுத்து விட்டதாம். அப்படி என்னதான் அந்த போஸ்டில் இவர் கலக்கியிருக்கிறார் என்று பார்த்தால் மாடர்ன் உடையில் மாஸ் பர்பாமன்ஸ் காட்டியிருக்கிறார். மொத்தமாக இவர் மாறி இருக்கும் அழகைப்பார்த்து விதவிதமாக வர்ணிக்கும் ரசிகர்கள் தங்களுடைய கவிதை திறமைகளை கமெண்டுகளில் காட்டி வருகிறார்கள். உடைக்கு மேட்ச்சாக இவர் அணிந்திருக்கும் பூ வேலைப்பாடுகள் கொண்ட நகைகளும் இவருடைய அழகுக்கு அழகு சேர்த்து இருக்கிறதாம். இந்த மாதிரி போஸ்ட் போட்டுக்கொண்டிருந்தால் ரசிகர்களின் நிலைமை என்னாகும் என்று யோசிங்க ரோஜா என்று சிலர் இவருக்கு அன்பு கட்டளையும் விட்டிருக்கிறார்கள். இவர் ஒரு நடிகை மட்டும் அல்லாமல் மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது இவருடைய மாஸான போட்டோஸ்கள் தான் இன்ஸ்டாகிராமை கதிகலங்க வைத்து வருகிறது. அடடா அம்சமான அழகுக்குள்ள இப்படி ஒரு பூகம்பமா என அழகா என்று பலர் கவிதைகளைப் பறக்க விடுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+