கையில் பேனா..சிந்தனை போகுது தானா... மீண்டும் அப்படி ரெடியான மணிமேகலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டிமன்றத்திற்கு ரெடியான மணிமேகலையை பார்த்ததும் ரசிகர்கள் பதறி வருகிறார்கள்.

வாயை திறந்தாலே அப்படித்தான் இருக்கிறது இதற்கு எதற்கு தனியாக நோட்ஸ் எல்லாம் என்று ரசிகர்கள் பங்கமாக கலாய்க்கவும் தவறவில்லை.

ஒரு வழியா விஜே வாக இருந்து பட்டிமன்ற பேச்சாளராக மாறிவிட்ட மணிமேகலைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பேசினாலே அப்படி தான் இருக்கு

பேசினாலே அப்படி தான் இருக்கு

நீங்க சும்மா பேசினாலே... பட்டிமன்றம் மாதிரி தான் இருக்கும்...! இதுல பேசுறதுக்குண்ணே... பட்டிமன்றத்துக்கு கிளம்பினா...? எப்படி இருக்கும் என்று விஜே மணிமேகலையை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சின்ன இடைவெளிக்குப் பிறகு ரியாலிட்டி ஷோ, மற்றும் சமூக வலைதளங்களால் மீண்டும் தற்பொழுது புகழ் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் மணிமேகலை, அதை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொள்வதற்காக சோஷியல் மீடியாக்களில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அப்லோடு செய்து லைம் லைட்டில் இருந்து வருகிறார்.

ரசிகர்களைக் கவர்ந்த விஜே

ரசிகர்களைக் கவர்ந்த விஜே

பொழுது போக்குவதற்கும், பாடல் கேட்பதற்கும், சன் மியூசிக் மற்றும் இசையருவி மட்டுமே இருந்த காலகட்டத்தில்,சினிமா கதாநாயகி களையும் தாண்டி பல இளைஞர்களின் அபிமான விஜே வாக இருந்தவர் மணிமேகலை. இவரது கேப் விடாத லொட..லொட.. பேச்சுக்கு என்று ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது.அந்த காலகட்டத்தில் எல்லாம் மக்களை எளிதில் ரீச் செய்வதற்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர்,போன்ற சோசியல் மீடியாக்கள் இருந்திருந்தால் இன்று இவர் தமிழ் சினிமாவின் முக்கியமான கதாநாயகிகளில் ஒருவராக கூட இருந்திருக்கலாம்..!

காதல் திருமணம்

காதல் திருமணம்

விஜே வாக நல்ல பிரபலமாக இருந்தாலும், ஹுசேன் உடனான காதல் திருமணத்திற்கு பின்பு சின்ன கேப் விட்டதால் அதன்பின்பு அவர் பண்ணிய நிகழ்ச்சிகள் அவரை பழைய மாதிரி பெரிதளவு ரீச் செய்யவில்லை. ரியாலிட்டி ஷோவுக்காகவே உருவாக்கப்பட்டது போல் நிகழ்ச்சிகளை வழங்கும் விஜய் டிவியில், தன் கணவருடன் இணைந்து 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை' நிகழ்ச்சிக்காக, சன் நெட்வொர்க்கில் இருந்து விஜய் டிவி பக்கம் தன் ரூட்டை மாற்றினார். அன்றிலிருந்து இவர் கேரியர் என்னவோ ஏறுமுகம் தான். 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை' ஷோவில் ரன்னர் -அப், ஆக வந்தாலும் மணிமேகலையை.. பழைய விஜே மணிமேகலையாக..... நமது ரசிகர்கள் தூசுதட்டி ரசிக்க ஆரம்பித்தனர்.

மாற்றம் தந்த குக் வித் கோமாளி

மாற்றம் தந்த குக் வித் கோமாளி

'குக் வித் கோமாளி' இந்த நிகழ்ச்சியில் பெயரில் மட்டும் தான் 'கோமாளி' ..,ஆனால் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் வாழ்க்கையில் இந்த நிகழ்ச்சி ஒரு 'கதாநாயகன்' தான். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி அதன் போட்டியாளர்களை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. இந்த நிகழ்ச்சியில் திடீரென நுழைந்து விஜே மணிமேகலையும், 'பூவோடு சேர்ந்த.. நாரும் மணப்பது போல்' நிகழ்ச்சியில் இணைந்த மணிமேகலையும்..செம ஃபேமஸ் ஆகிவிட்டார். ஆரம்பத்தில் எப்படி துருதுருவென இருந்தாரோ.., அதே எனர்ஜி கொஞ்சமும் குறையாமல் இருப்பது தான் இவரது பிளஸ்.

கடுப் படிக்காமல் இருந்தாலே போதும்

கடுப் படிக்காமல் இருந்தாலே போதும்

பொதுவாக தமிழ்நாட்டில் விஜய் டிவியில் பணியாற்றினால் சோசியல் மீடியாவில் அதிகமான பார்வையாளர்களை பெற்று விடலாம். இவரும் அதைப் பயன்படுத்தி யூடியூப் சேனல், இன்ஸ்டாகிராம் மூலம் நன்கு கல்லா கட்டி வருகிறார். தனக்கிருக்கும் பேச்சுத்திறமை மூலமே '90ஸ்'கிட்ஸ் மற்றும், 2கே'கிட்ஸ் க்கு நன்கு பரிச்சயமான செலிபிரிட்டி ஆக வலம் வரும் மணிமேகலை, பேச்சு திறமைக்கு.. பேஸிக்காண பட்டிமன்றத்தையும் விட்டுவைக்கவில்லை. கலகலவென்று பேசும் விஜே மணிமேகலைக்கு கருத்தா பேசவும் தெரியுமா..?என்ன என்று கேள்வி கேட்டு வருகின்றனர். கருத்தா பேசுறாரு..! இல்லையோ..? கடுப்படிக்காமல் பேசுவார் என்று இவரது ரசிகர்களும் முட்டுக் கொடுத்து வருகின்றனர்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+