வடிவேலுவின் கெட்டப்பில் திரும்பி நின்று...கண்டுபிடிங்க பார்ப்போம்..கெத்து காட்டும் சின்னத்திரை நடிகை
சென்னை: நாய் சேகர் கெட்டப்பில் கலக்கும் சின்னத்திரை நடிகையின் போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது
யார் என்று கண்டுபிடிங்க பார்ப்போம் என்று அவரே வெளியிட்ட போஸ்ட் பார்த்து ரசிகர்கள் கொஞ்சம் குழம்பிப் போயிருக்கின்றனர்.
பின்னாடி திரும்பி நின்னா எப்படி தெரியும் அந்த திருமுகத்தை ஒரு முகமாக காட்டுங்க என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தான் கொடுத்த பட்டம்
சின்னத்திரையில் தான் நயன்தாரா என்று தானே பட்டம் கொடுத்துக் கொண்ட அறந்தாங்கி நிஷா தான் தற்போது வடிவேலின் கெட்டப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறார். நான் காமெடியில் மட்டுமல்லாமல் ஆட்டத்திலும் கெட்டிக்காரி என்பதை பிபி ஜோடி டான்ஸில் காட்டியிருக்கும் இவர் மீண்டும் தன்னுடைய நகைச்சுவை திறமையை காட்டுவதற்காக ரெடியாகிவிட்டார். எப்போதும் வாயை திறந்தால் தான் இவர் நகைச்சுவைக்கு பலர் சிரித்து வயிறு வலிக்கும், ஆனால் இப்போது இவருடைய கெட்டப் சும்மா அல்லு விடுகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வடிவேலு கெட்டப்
நாய் சேகர் வடிவேலுவின் கெட்டப்பில் தத்துரூபமாக மாறி இருக்கும் இவர் அவருடைய லேட்டஸ்ட் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இது யாரென்று தெரிகிறதா என்று கேப்ஷன் போட்டு கேள்வி கேட்டிருக்கிறார். அதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் அப்படியே வடிவேலுவின் பன்ச் டயலாக்கில் இவரை கலாய்த்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர், அம்மா சத்தியமா நானும் ரவுடி தான் டா, அதே நாய் சேகர் தான் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இன்னொருவர் நானும் ரவுடி தான்...நானும் ரவுடி தான்..நான் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன் என்று ஒரு கமெண்ட்டை தட்டிப் விட்டிருக்கிறார். இன்னொரு ரசிகர் இந்தப் போஸில் உங்களைப் பார்ப்பதற்கு வடிவேலு பாலாஜி மாதிரி இருக்கீங்க என்று கூறியிருக்கிறார்.

காமெடியில் கலக்கல்
காமெடி நடிகர்கள் பலர் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் பல கஷ்டங்கள் இருந்தாலும் அடுத்தவர்களை சிரிக்க வைப்பதில் கவனமாக இருந்து வருகின்றனர். அடுத்தவர்கள் சிரிப்பதை பார்க்கும்போது இவர்களுக்குள் தங்களை அறியாமலேயே ஒரு சந்தோஷம் எட்டிப் பார்க்கிறது. அதனாலேயே பலர் தங்களைப் பற்றி என்னதான் கமெண்ட் பண்ணினாலும் நெகட்டிவாக பேசினாலும் அதனை கண்டுகொள்ளாமல் தங்களால் பல சோகங்களை மறந்து சிரித்துக் கொண்டு இருந்தாலே போதும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் நிஷாவும் ஒருவர். அவரைப் பற்றி எவ்வளவோ நெகட்டிவ் கமெண்டுகள் வந்தாலும் அவர் கண்டுகொள்வதே இல்லை.

சின்னத்திரை கோவை சரளா
சின்னத்திரையில் ஒரு கோவை சரளா போன்று அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்து விட்டார். இவர் காமெடி நிகழ்ச்சியில் அறிமுகமானதாலோ என்னவோ பலருடைய மனதிலும் காமெடி இளவரசியாக தான் வளர்ந்து கொண்டிருக்கிறார். தங்களுடைய சோகங்களை மறக்க இவர்களுடைய காமெடிகளை பலர் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இவர் பிக்பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை நிரூபித்து கொண்டிருப்பார். திறமைக்கு முன்பு வயது எல்லாம் ஒரு காரணமே இல்லை என்று பலருக்கு ரோல்மாடல் ஆகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் தன்னுடைய கலக்கலான காமெடி மூலமாக சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications