சிவகார்த்திகேயனுக்கு டப் கொடுக்கும் கெட்டப்பில் ரக்ஷன்...அசந்து போன ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிப்பு என்று வந்ததும் அதில் மூழ்கி போய்விட்டார் ரக்ஷன் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வெள்ளித்திரைக்கு சென்றாலும் சின்னத்திரையில் இவர் வெளியிட்டிருக்கும் போட்டோக்கள் வேற லெவல் வைரலாகி விடுகிறது.

ரசிகர்கள் பார்த்ததும் ரெமோ படத்தின் இரண்டாவது வர்ஷனா என்று கேட்டு வருகின்றனர்.

விஜய் டிவியில் அறிமுகம்

விஜய் டிவியில் அறிமுகம்

சின்னத்திரையின் மூலமாக பல நடிகர்கள் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கின்றனர். இதில் ரக்ஷனும் ஒருவர். இவர் தொகுப்பாளராக கலக்கி தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் விஜய்டிவி தனக்கு ஏற்படுத்தித் தந்த பெரும் புகழையும் இவர் மறந்து விடவில்லை. அதனால்தான் மீண்டும் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளில் எளிமையாக கலந்து கொண்டு வருகிறார். இவர் தொகுத்து வழங்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சி வேற லெவலில் வைரல் ஆகி விட்டது.

கலக்கும் தொகுப்பாளர்

கலக்கும் தொகுப்பாளர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தாலும் சக போட்டியாளர்களுடன் ஜாலியாக இவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். அதிலிருந்து கலக்கப்போவது யாரு சீசன்6, 7 சீசன் களை தொடர்ந்து இவர்தான் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

ரெடி ஸ்டெடி போ

ரெடி ஸ்டெடி போ

இளம் சீரியல் நடிகைகளோடு ரெடி ஸ்டெடி போ என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மேலும் வைரல் ஆகி விட்டார். அதோடு நிற்காமல் தற்போது காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இவருடைய அல்டிமேட் காமெடியை பார்த்து பலர் சிரித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவரை பல போட்டியாளர்கள் கலாய்த்து வந்தாலும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய அந்த அமைதியான சிரிப்பால் அதனை கடந்து விடுவது மட்டுமல்லாமல் தானும் கிடைக்கும் வாய்ப்புகளில் அவர்களை கலாய்த்து தள்ளி விடுகிறார்.

நர்ஸ் கெட்டப்

நர்ஸ் கெட்டப்

தற்போது காமெடி ராஜா கலக்கல் ராணி சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்கள் ஒரு நிமிடம் திகைத்து போயிருக்கின்றனர். இது சிவகார்த்திகேயன் தானா?? என்று நினைத்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு தத்ரூபமாக ரெமோ படத்தில் நர்ஸ் கெட்டப்பில் சிவகார்த்திகேயன் வருவது போலவே மாறி இருக்கிறார்.பார்த்ததும் ரசிகர்களால் கண்டுபிடிக்க முடியவில்லையாம். இவருடைய அந்த சிரிப்பும் அப்படியே பெண் கெட்டப்புக்கு செட் ஆகிவிடுவதால் அவருடைய ரசிகர்கள் பலர ரெமோ பார்ட்2 வா என்று கேட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+