மதுரை முழுக்க திரிஷாவுக்கு போஸ்டர்.. எதுக்கு தெரியுமா? விஜய், தனுஷுக்கு போட்டி! நெட்டிசன்கள் கலகல!
சென்னை: தமிழக அரசியலில் சினிமா பிரபலங்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது நடிகை திரிஷாவையும் அரசியலுக்கு வரவேற்று மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன.
தமிழ் சினிமாவில் 20 வருஷங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தி மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் திரிஷா நற்பணி மன்றம் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் "அன்பு அக்கா திரிஷாவுக்கு வரவேற்பு.. மீனாட்சி தாய் ஆசீர்வாதத்தால் அரசியலுக்கு வாருங்கள்" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் தமிழகத்தில் திரிஷா பெயரில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல் நற்பணி மன்றம் மதுரையில் தான் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே விஜய் அரசியலுக்கு வந்த பிறகு நடிகர் ராகவா லாரன்ஸ், தனுஷ், சூர்யா என பலரும் அரசியலுக்கு வருவது போலவே செயல்பாடுகளை தொடங்கி விட்டார்கள். அதில் ஒரு சிலர் அரசியலுக்கு வரப்போகிறேன் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் விட்டார்கள். இந்த நிலையில் திரிஷாவின் அரசியல் வருகைக்காக ஒட்டப்பட்ட போஸ்டர் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.

திரிஷாவின் அரசியல் ஆசை
சில வாரங்களுக்கு முன்பு முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு திரிஷா வெளியிட்ட வாழ்த்து பதிவு இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து திரிஷா அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல்களும் சோசியல் மீடியாவில் வேகமாக பரவின. அப்போது கூட சில வருடங்களுக்கு முன்பு நான் அரசியலுக்கு வருவேன் என்று விளையாட்டாக திரிஷா பேசிய வீடியோவை எல்லாம் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்தார்கள்.

மதுரையில் போஸ்டர்
இப்போது மதுரையில் திடீரென அரசியல் வரவேற்பு போஸ்டர்கள் ஒட்டி இருப்பது மீண்டும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இது குறித்து திரிஷா எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் இதை பார்த்த நெட்டிசன்கள் தமிழக அரசியலில் இப்போது நடிகர்களுக்கு ஆடிஷன் கூட தேவையில்லை, ரசிகர்கள் நேரடியாக போஸ்டர் அடிச்சு அழைப்பு கொடுத்துறாங்க என்று கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள்.
ரசிகர்கள் கருத்து
இன்னும் ஒரு சிலர், திரிஷா ஒரு வார்த்தை கூட பேசல, அதற்குள்ள அரசியல் வரவேற்பு, நற்பணி மன்றம், ஆசிர்வாதம் எல்லாமே ரெடி ஆயிடுச்சு என்றும் சொல்கின்றனர். சிலர் இது திரிஷாவுக்கு தெரியாமல் நடக்குதா? அல்லது திரிஷாவின் சம்மதத்துக்கு பிறகு இது போல போஸ்டர்கள் ஒட்டப்படுகிறதா? என்றும் சந்தேகத்தோடு கமெண்ட்களை முன் வைக்கிறார்கள்.
44 வயதில் தான் வாழ்க்கையே தொடங்குகிறது.. நடிகை திரிஷா போஸ்ட்.. அவரின் கமெண்ட் கவனிச்சீங்களா?
ஆனால் இன்னும் ஒரு சிலர், இப்போது தனுஷ் அரசியலுக்கு வருவதற்காக தன்னுடைய சமூக சேவையை மீண்டும் தூசி தட்டி தொடங்கி வைத்திருப்பதால் அவருக்கு போட்டியாக திரிஷாவும் களம் இறங்கி விட்டார் போல, ஏற்கனவே அவருடன் நடித்த விஜய் முதலமைச்சர் ஆகி இருப்பதால் இனி எதிர்க்கட்சி தலைவராக திரிஷாவே வரலாம் என்று முடிவெடுத்து விட்டாரா? என்றும் கலாய்க்கிறார்கள். சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் திரிஷா இதற்கு என்ன பதில் சொல்வார் என்ற எதிர்பார்ப்புடன் அவருடைய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
