Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dude, Bison, Diesel box office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பிய டியூட்.. பைசன், டீசல் வசூல் எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த தீபாவளி பண்டிகையையொட்டி இளம் நட்சத்திரங்களின் 3 படங்கள் வெளியாகின. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட தீபாவளி ரேஸில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது பிரதீப் ரங்கநாதன் நடித்த 'ட்யூட்' திரைப்படம். மூன்று நாட்களில் Dude, Bison, Diesel ஆகிய திரைப்படங்கள் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிரதீப் ரங்கநாதன், துருவ் விக்ரம் மற்றும் ஹரிஷ் கல்யாணுக்கு இந்த ஆண்டு தீபாவளி. இந்த ஆண்டு தீபாவளிக்கு உச்ச நட்சத்திரங்களின் படங்கள் எதுவும் வெளிவராத நிலையில், இந்த மூன்று பேரின் படங்கள் முதன்முறையாக தீபாவளிக்கு ரிலீஸ் ஆகின. இந்த மூன்று படங்களுக்குமே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. பைசன் என்கிற காளமாடன், டீசல் மற்றும் டியூட் ஆகிய படங்களுக்கு பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவு வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை பார்க்கலாம்.

Dude bison diesel

ட்யூட்

பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு இணைந்து நடித்த 'டியூட்' படத்திற்கு திரையரங்கில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது ஒரு பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர் படம் என்று படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். 'லவ் டுடே' மற்றும் 'டிராகன்' படங்களைப் போலவே, 'டியூட்' படத்தில் பிரதீப் ரங்கநாதன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்று திரையரங்குகளில் இருந்து வரும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்கியுள்ள டியூட் திரைப்படம், முக்கியமான சமூக பிரச்சனையையும் பேசும் வகையில் மிகச் சிறப்பாக வந்துள்ளதாக சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன. சாய் அப்யங்கர் இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்களை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

டியூட் திரைப்படம் உலகளவில் மூன்று நாட்களில் ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துவிடும் என கூறப்படுகிறது. பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே மற்றும் டிராகன் ஆகிய படங்களை தொடர்ந்து, ரூ. 100 கோடி வசூல் செய்த படங்களின் வரிசையில் Dude இணைய உள்ளது. தனது முதல் மூன்று திரைப்படங்களில் தொடர்ந்து ரூ. 100 கோடி வசூல் செய்த நாயகன் என்கிற சாதனையையும் பிரதீப் ரங்கநாதன் படைக்கப் போகிறார்.

இந்திய அளவில் டியூட் திரைப்படம் 3 நாட்களில் 30 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக சாக்.நிக் (sac.nik) தெரிவித்துள்ளது.
முதல் நாள்: ரூ. 9.75 கோடி
இரண்டாவது நாள்: Rs 10.3 கோடி
மூன்றாவது நாள்: ரூ. 10.50 கோடி
இந்தியாவில் மொத்தம்: ரூபாய் 30.35 கோடி

பைசன்

முன்னணி இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் பைசன். பசுபதி, லால், அமீர், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை மாரி செல்வராஜ் உருவாக்கியுள்ளார். இப்படத்தில் தனது பாணியில்முக்கியமான அரசியலும் பேசியுள்ளார். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு டைத்துள்ளது.

வெளியாகி மூன்று நாட்கள் ஆகியுள்ள பைசன் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பைசன் படம் உலகளவில் மூன்று நாட்களில் ரூ. 18 கோடி வசூல் செய்துள்ளது.

இந்திய அளவில் பைசன் திரைப்படம் 3 நாட்களில் 10.70 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக சாக்.நிக் (sac.nik) தெரிவித்துள்ளது.
முதல் நாள்: ரூ. 2.55 கோடி
இரண்டாவது நாள்: Rs 3.3 கோடி
மூன்றாவது நாள்: ரூ. 4.87 கோடி
இந்தியாவில் மொத்தம்: ரூபாய் 10.70 கோடி

டீசல்

தீபாவளி ரேஸில் களமிறங்கிய மற்றொரு திரைப்படம் டீசல். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி உள்ளார். வட சென்னையை கலக்கி வந்த எண்ணெய் கடத்தல் மாஃபியா கும்பலை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கும் கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. எனினும், மற்ற 2 படங்களை விட பாக்ஸ் ஆபிஸில் மந்தமான வசூலை பெற்றிருக்கிறது டீசல்.

அதன்படி, இப்படம் ரிலீஸ் ஆகி 3 நாட்களில் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் வெறும் 1.8 கோடி ரூபாய் வசூலித்தது. உலக அளவில், டீசல் திரைப்படம் 2 கோடி வசூல் என்ற அளவிலேயே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+