அப்பா எப்பவுமே தோற்க முடியாது.!!நிரூபித்த கோபிநாத்..நெகிழ்ச்சியாக வாழ்த்து கூறிய பிரியா பவானி சங்கர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் கோபிநாத்துக்கு தற்போது பிரியா பவானி சங்கர் வாழ்த்து கூறியுள்ளார்.

சின்னத்திரையை விட்டு வெள்ளித்திரைக்கு சென்றாலும் சின்னத்திரையின் மீது தனக்கு இருக்கும் மரியாதையை மீண்டும் பிரியா நிருபித்து விட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

பிரியா பவானி சங்கர் கோபிநாத்துக்கு நெகிழ்ச்சியான முறையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முறையில் வாழ்த்து கூறி உள்ளார்.

தொகுப்பாளராக அறிமுகம்

தொகுப்பாளராக அறிமுகம்

ஒரு தொகுப்பாளராக அறிமுகமான பிரியா பவானி சங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்னும் சீரியலின் மூலமாக இளைஞர்கள் முதல் குடும்ப பெண்கள் வரை அனைத்து தரப்பினர்களின் மனதையும் அபகரித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் நடித்த சீரியலில் கண்ணாலே பேசி பலருடைய மனதை கவர்ந்து விட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். முதல் சீரியலில் பிரியா பவானி சங்கருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.

சீரியல் கதாநாயகி

சீரியல் கதாநாயகி

கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியலில் பிரியா கேரக்டரில் படுக்கச்சிதமாக கேரக்டராக மாறி இருந்த பிரியா பவானி சங்கர் சினிமாக்களில் நடிக்கும் போதும் ஹோம்லி லுக்கில் பக்கத்து வீட்டுப் பெண் போல பலருடைய மனதிலும் புகுந்து விட்டார் .பிரியா பவானி சங்கர் ஆரம்பத்தில் துணை கதாநாயகியாக நடித்து தற்போது கதாநாயகியாக முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். தான் என்னதான் சினிமா பக்கம் சென்றாலும் சின்னத்திரையை மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தையும் கவனித்துக் கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய் டிவி நிகழ்ச்சி குறித்து வாழ்த்துக்களை தெரிவித்து கூறியுள்ளார்.

விஜய் டிவி நிகழ்ச்சி

விஜய் டிவி நிகழ்ச்சி

பிரியா பவானி சங்கர் நடித்து சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் ஃப்ரீயாக இருக்கும்போது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பேன் என்பதை நிரூபித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் பலருடைய மனதையும் பாதிக்கும் செயல் தற்போது நடந்துள்ளது. ஒரு அப்பாவின் பாசப்பினை அந்த நிகழ்ச்சி அழகாக காட்டியுள்ளது அதை குறித்து பிரியா பவானி சங்கர் பதிவிட்டுள்ளார்.

நெகிழ்ச்சியான வாழ்த்து

நெகிழ்ச்சியான வாழ்த்து

இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் படித்து அதிகமாக சம்பளம் வாங்கும் மனைவிகள் மற்றும் குறைவாக சம்பளம் வாங்கும் கணவர்கள் பற்றிய நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு பெண் தான் கணவரை விட படித்து அதிகமாக சம்பளம் வாங்கும் திமிரில் தன்னுடைய கணவருக்கு எதுவுமே தெரியாது. குழந்தையின் பிராகிராஸ் காடில் கையெழுத்து இடுவதற்கு மணி கணக்கில் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நக்கலாக கூறியிருந்தார். ஆனால் கோபிநாத் தந்தையின் பெருமையை நிகழ்ச்சியின் காட்டிவிட்டார். அது தற்போது சமூக வலைதில் வலைத்தளத்தில் பலரால் பேசப்படும் பொருளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பிரியா பவானி சங்கர், "ஒருத்தரை இகழ்ந்து அதை நகைச்சுவை என நினைத்து சிரிக்கிறது ஒரு விதமான மனநோய். உங்க பார்வையும் பேச்சும் திருப்தியா இருந்துச்சு கோபி அண்ணா, வெற்றிக்கு இந்த ஆயிரம் இலக்கணம் வச்சிருக்காங்க... ஆனா ஒரு அப்பா என்னைக்குமே தோற்க முடியாது. அவரது வெற்றியை அங்கீகரிச்சதுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். இந்த போஸ்ட் பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+