என் சொந்த அம்மாவை தவிர்த்து நீங்க தான்.. ஸ்ரீபிரியா பற்றி உருக்கமாக போஸ்ட் போட்ட ராதிகாவின் மகள்
சென்னை: நடிகை ராதிகா சரத்குமாரின் மகளான ரேயான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று நடிகை ஸ்ரீ பிரியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இன்று பல சினிமா பிரபலங்கள் தங்களுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். அதிலும் இயக்குனராகவும் நடிகராகவும் இருக்கும் செல்வராகவன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள். அதுபோல நடிகை வரலட்சுமிக்கு இன்று தான் பிறந்தநாள். அவர் தன்னுடைய பிறந்தநாளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகளோடு நேரத்தை செலவிட்டு இருக்கிறார்.

பிரபலங்களின் பிறந்தநாள்
பிறகு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். வரலட்சுமி பற்றி நடிகை ராதிகா நீண்ட பதிவு வெளியிட்டிருந்தார். அதில் வரலட்சுமி முன்பு போல இப்போது இல்லை திருமணத்திற்கு பிறகு ரொம்பவும் பிஸியான நபராக மாறிவிட்டார். ஆனாலும் தன்னை சுற்றி இருக்கும் நபர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுபவர். இதுபோல எப்போதும் இருக்க வேண்டும் என்று வாழ்த்து கூறினார்.
ராதிகா சரத்குமார் போஸ்ட்
அதேபோல ராதிகா சரத்குமார் இன்னொரு பதிவும் போட்டு இருக்கிறார். அது அவருடைய சிறுவயதில் இருந்தே தோழியாக இருக்கும் ஸ்ரீபிரியா பற்றிதான். நடிகை ஸ்ரீபிரியா தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடிகையாக கலக்கி இருக்கிறார். ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீப்ரியா சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்திருக்கிறார்.
நடிகை ஸ்ரீபிரியா பிறந்தநாள்
பல சீரியல்களை இயக்கியும் இருக்கிறார். தற்போது சினிமா மற்றும் சீரியல் என்று எதிலும் தலை கட்டாமல் இருக்கும் ஸ்ரீபிரியாவோடு ராதிகா எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதில், "ஸ்வாக் அண்ட் பியூட்டிஃபுல் ஆலோ ஸ்ரீபிரியா. பல வண்ணங்களுடன் இணைந்த பயணம்.. நட்பை விட உங்களை சிரிக்க வைப்பது மிகப்பெரிய சவால்.

ஸ்ரீபிரியாவிற்கு வாழ்த்து
நாங்கள் பகிர்ந்து கொண்ட சிரிப்புகள் எண்ணற்றவை. உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அதிக பயணம், அதிக கைப்பைகள், பைத்தியக்காரத்தனமான ஷாப்பிங், அதிக நல்ல ஆரோக்கியம், அதிக மகிழ்ச்சி மற்றும் நிறைய அமைதி உங்களுக்கு கிடைக்கட்டும் என்று பகிர்ந்து இருக்கிறார்.
நடிகை ராதிகா மகள் பதிவு
அவரை தொடர்ந்து ராதிகாவின் மகள் ரேயான் ஸ்ரீபிரியா குறித்து ஒரு பதிவு போட்டு இருக்கிறார். அதில் ஹாப்பி பர்த்டே அம்மா என்று ஆரம்பித்திருக்கிறார். பிறகு, "என் சொந்த அம்மாவை தவிர்த்து நான் அம்மா என்று அழைக்கிற ஒரே ஒரு நபர் இந்த உலகில் நீங்கள் மட்டும்தான் பிரியா அம்மா. நான் பிறந்தவுடன் என்னை முதன் முதலில் கைகளில் ஏந்தியவர் நீங்கள் தான். அப்படி ஏந்திய உங்களைத்தான் என்னுடைய மனதின் முக்கியமான இடத்தில் நான் எப்போதும் வைத்திருக்கிறேன்.
அம்மா பொண்ணு பாசம்
என் மீதான உங்கள் அன்பும் அசைக்கவே முடியாத வலிமையான உங்களுடைய ஆதரவும் எனக்கு எல்லாவற்றையும் சாத்தியப்படுத்தி உள்ளது. என் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் நீங்கள் எப்போதும் என்னுடனே இருந்ததற்காக உங்களுக்கு என் நன்றி. நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். அது உங்களுக்கு தெரியும். அதிகபட்ச மகிழ்ச்சியில் இன்னும் பல பயணங்களும், முடிவே இல்லாத சிரிப்பும் உங்கள் வாழ்வில் நிறைய வரட்டும் பிரியா அம்மா என்று அந்த பதிவில் ஸ்ரீபிரியா மீது தனக்கு இருக்கும் பாசம், அன்பு, காதல் என எல்லாவற்றையும் பகிர்ந்து இருக்கிறார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீபிரியாவிற்கு வாழ்த்துக்களை குவிக்கிறார்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications