தீபாவளியில் கணவர் குடும்பத்தோடு கொண்டாட்டம்! மகிழ்ச்சியோடு போஸ்ட் போட்ட ரம்யா பாண்டியன்! குவியும் வாழ்த்து
சென்னை: தமிழ் திரையுலகில் தனது இயல்பான நடிப்பாலும், தனித்துவமானத் தோற்றத்தாலும் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை ஈர்த்தவர் நடிகை ரம்யா பாண்டியன். கடந்த வருடம் திருமணம் செய்துகொண்ட இவர், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை தன் கணவர் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடிய புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த இனிமையான குடும்பக் கொண்டாட்டப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

யார் இந்த ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன் ஆரம்பத்தில் சில குறும்படங்களில் நடித்திருந்தாலும், 'ஜோக்கர்' மற்றும் 'ஆண் தேவதை' போன்ற படங்களில் அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் பெரிய வரவேற்பை பெற்றன. குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றதன் மூலம், இவர் சின்னத்திரை ரசிகர்களிடையேயும் மிகவும் பிரபலமானார்.
ரிஷிகேஷில் நடந்த எளிமையான திருமணம்
திரையுலகில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், ரம்யா பாண்டியன் கடந்த வருடம் திருமண பந்தத்தில் இணைந்தார். அவர் திருமணம் செய்து கொண்டது யோகா பயிற்சியாளர் லவ்ல் தவான் என்பவரைத்தான். இவர்கள் இருவரும் ரிஷிகேஷில் அமைந்துள்ள ஷிவ்புரி பகுதியில், கங்கை நதி கரையில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
மாமனார் - மாமியாருடன் முதல் தலை தீபாவளி
திருமணத்துக்குப் பிறகு திரைத்துறையை விட்டு சற்று விலகியிருந்தாலும், சமூக ஊடகங்களில் ரம்யா பாண்டியன் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கிறார். இந்த ஆண்டுத் தீபாவளியை அவர் தனது கணவர் குடும்பத்துடன் இணைந்து கொண்டாடியுள்ளார். அவர் மாமனார், மாமியார் மற்றும் கணவர் குடும்பத்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அழகான தோற்றம்
புகைப்படங்களில் ரம்யா பாண்டியன் பாரம்பரிய பட்டு சேலையில் மிகவும் அழகாகக் காணப்படுகின்றார். அவர், "இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! என் மாமனார், மாமியாருடன் இருக்கும் இந்த நேரம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான தீபாவளி!" என்ற பொருள் படும்படி பதிவிட்டிருக்கிறார்.
கொரோனா காலகட்டத்தில் மொட்டை மாடி போட்டோ சூட்டில் பிரபலமான ரம்யா பாண்டியனின் நடிப்புக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கும் அளவில் கதை அமையவில்லை என்பது பலருடைய வருத்தமாக இருக்கிறது. ரம்யா பாண்டியனுக்கு சோசியல் மீடியாவில் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனாலும் அவர் தொடர்ந்து சினிமாவில் ஜொலிக்காமல் போனது பலருக்கு வருத்தம் இருக்கிறதாம். தற்போதைய போஸ்டில் கூட பலர் ரம்யா பாண்டியனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தாலும் அவர் பெரிய நடிகையாகவில்லை என்று தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications