ரவீந்தர் மகாலட்சுமி ஜோடிகளுக்கு வாழ்த்துக்களை மிஞ்சும் உருவ கேலி..எல்லாத்துக்கும் காரணம் அதுதானா!!??
சென்னை: தற்போது திருமணம் முடிந்த தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமிக்கு ஒரு புறம் வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில் நெகட்டிவ் கமெண்டுகளும் அதிகரித்து வருகிறது.
ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து பலருக்கும் பரிச்சயம் ஆனவர். அவர் ரிவ்யூ செய்யும் நேரங்களில் போட்டியாளர்கள் பலரையும் கலாய்த்து கிழித்து எடுத்து வருகிறார். அதனால் தான் அவரைப் பற்றி தற்போது ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

வம்பு இழுக்கும் பேச்சு
தற்போது உருவ கேலி என்பது பல இடங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. திரைத்துறையில் இருப்பவர்களும் அதற்கு தப்புவதே இல்லை. சாதாரண மக்களாக இருந்தாலும் சரி திரைத்துறையில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி அனைவரும் இதில் பாதிக்கப்பட்டு தான் வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருமணம் முடிந்த தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக மீம்ஸ்களால் கலாய்க்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் மனது ஒத்து திருமணம் செய்து இருந்தாலும் உடல் அளவில் பெரிய மாற்றம் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வைரலாகும் மீம்ஸ்
ரவீந்தர் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் ரிவ்யூ கொடுத்து வருவதால் பல நேரங்களில் நிறை குறைகளை சுட்டிக்காட்டி வருகிறார். ஆனாலும் அவர் பேசும் வார்த்தைகள் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும் விதமாக இருந்து வருகிறது என்று ஆரம்பத்தில் இருந்தே இவருக்கு எதிராக கமெண்ட்களை போடும் ரசிகர்கள் தற்போது இவருடைய சைசுக்கும் இவருடைய மனைவியின் சைஸுக்கும் பொருத்தம் இருக்கிறதா? ? இப்படி ஒரு திருமணமா!!?? என்றெல்லாம் கலாய்த்து மீம்ஸ்களை பரப்பி வருகிறார்கள்.

கொஞ்சம் பொறாமையா தான் இருக்குது
சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி தொகுப்பாளராக பலருக்கும் பரிச்சயம் ஆனவர். அதுவும் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொகுப்பாளர்களில் மகாலட்சுமியும் ஒருவர். இவருடைய படபட பேச்சு மற்றும் கண் அசைவு பலருக்கும் கவர்ந்ததாக இருந்துள்ளது. இந்த வகையில் தங்களுக்கு பிடித்த ஒரு நபர் அவருக்கு பொருத்தம் இல்லாத நபரை திருமணம் செய்து விட்டார் என்று பலரும் வேதனையோடு தங்களுடைய ஃபீலிங்கை கொட்டி வருகிறார்கள். 90ஸ் கிட்ஸ் பலர் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கும் நிலையில் இவருடைய இரண்டாவது திருமணமும் பலருக்கு பொறாமையை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

இதுதான் அதுவா
தயாரிப்பாளர் ரவீந்தர் ஏற்கனவே பலரை கலாய்த்ததால் தான் தற்போது இவரை பலரும் கலாய்த்து வருகின்றனர். இதுதான் கர்மாவா...! !??என்றெல்லாம் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் ஒரு சில ரசிகர்கள் உருவ கேலி என்பது தவறான செயல் அதனால் இப்படி யாரையும் மனதை புண்படுத்தும் விதமாக பேசக்கூடாது என்று அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர். ஆனாலும் சில நெட்டிசன்கள் தங்களுடைய மனக்குமுறல்களை மீம்ஸ்களில் கொட்டி வருகிறார்கள். நெட்டிசன்கள் தன்னை கலாய்ப்பதை விடவும் ரவீந்தர் தனக்குத்தானே பேட்மேன் என்று பெயர் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications