பேத்தி பிறந்தால் இதை எல்லாம் செய்ய போறோம்! ஆசையாக பேசிய ரோபோ சங்கர்.. மனைவி சொன்ன எதிர்பாராத பதில்
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரா சங்கர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் தன்னுடைய மகளுக்கு பெண் குழந்தை பிறந்தால் என்னவெல்லாம் செய்ய ஆசைப்படுகிறோம் என்று ரோபோ சங்கர் மற்றும் அவருடைய மனைவி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்கள். இந்த வீடியோஸ் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் ரோபோ சங்கர் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்து இப்போது அங்கும் கலக்கிக் கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ரோபோ சங்கர் இப்போது முன்னணி நடிகர்களோடு காமெடி கேரக்டரிலும் குணச்சித்திர கேரக்டர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ரோபோ சங்கரின் குடும்ப செய்திகள் அடிக்கடி இணையத்தில் பேசப்படுவதை பார்த்திருப்போம். சில மாதங்களுக்கு முன்பு ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டு அவர் உடல் எடை குறைந்து இருந்தது பார்க்கும் ரசிகர்களை பெரிய அளவில் அதிர்ச்சி அடைய வைத்தது.
இனி இவருடைய நிலைமை அவ்வளவுதான் என்று சிலர் பேசி வந்தாலும் அதை எல்லாம் பொய்யாக்கும் வகையில் ரோபோ சங்கர் பழைய நிலையில் மீண்டும் வந்தார். அவருடைய குடும்பத்தினரின் விடாமுயற்சி மற்றும் அன்பின் காரணமாக ரோபோ சங்கர் பழைய நிலைக்கு திரும்பி இருந்தார்.
இந்த நிலையில் தான் அவருடைய மகளுக்கு திருமணத்தையும் பிரம்மாண்டமாக நடத்தி வைத்தார். இந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது. எந்த அளவிற்கு வாழ்த்துக்கள் வந்ததோ அதே அளவிற்கு நெகட்டிவ் வந்தது. ரோபோ சங்கரின் ஒரே மகளான இந்திரஜா சங்கர் பிகில் திரைப்படத்தில் விஜயுடன் நடித்திருக்கிறார்.

அதுபோல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தான் அவருடைய மாமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தம்பதியாக இந்திரஜாவும் அவருடைய கணவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அந்த நேரத்தில் இந்திரஜா கர்ப்பமானதும் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தனர். இந்த நிலையில் ரோபோ சங்கரின் மகளுக்கு ஏழாவது மாத வளைகாப்பு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு இருக்கிறது. அதற்குப் பிறகு ரோபோ சங்கர் பேட்டி ஒன்றில் பேசும்போது என்னுடைய வீட்டிற்கு விரைவில் ஒரு பேரனோ பேத்தியோ வரப்போகிறார்.

எனக்கு பேரன் வருவார் என்று தோன்றுகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது பக்கத்தில் இருந்த அவருடைய மனைவி இவர் இப்படித்தான் என்னுடைய வயிற்றில் இந்திரஜா இருக்கும்போது கூட இவர் ஆம்பள பிள்ளை என்று தான் வாடா போடா என்று பேசிக்கொண்டு இருந்தார்.
புதுக்கோட்டையில் கோலாகலமாக நடந்த வெற்றி வசந்த்- வைஷ்ணவி ரிசப்ஷன்.. குவிந்த விஜய் டிவி பிரபலங்கள்
ஆனால் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. எனக்கு இதுபோல பேத்தி பிறக்க வேண்டும் என்பதுதான் ஆசை. பேத்தி பிறந்தால் அடுத்தடுத்து ஃபங்ஷன் வந்து கொண்டு இருக்கும். அந்த குழந்தையை அழகாக சீராட்டி பாராட்டி வளர்க்கலாம். ஆனால் ஆண் குழந்தையாக இருந்தால் அவருக்கு ஒரு சில உடைகள் மட்டும்தான் போட முடியும்.

அதுபோல சில வருடங்களில் அவர் டக்கென்று வளர்ந்து வந்து விடுவார், பெரிய அளவில் விசேஷமாக வைக்க முடியாது. இரண்டு மூன்று ஹேர் ஸ்டைல் தான் செய்ய முடியும். ஆனால் பேத்தியாக இருந்தால் நான் அவளை அணு அணுவாக அழகுப்படுத்தி ரசித்து பார்க்கலாம்.
பேத்தியோ பேரனோ எது வந்தாலும் சந்தோஷம் தான். ஆனால் பேத்தி வந்தால் இன்னும் சந்தோஷப்படுவேன். அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்.. என்று எமோஷனலாக அந்த பேட்டியில் ரோபோ சங்கரின் மனைவி பேசியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications