பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் கண்ணம்மா...என்னாச்சு என பதறும் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியின் டி ஆர் பி யில் முதலிடத்தில் இருக்கும் சீரியலின் கதாநாயகி மாறுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகமாக ஆதரவு கொடுத்திருக்கும் நிலையில் திடீரென ஏன் இப்படி ஒரு முடிவு என்று பலர் புலம்பி வருகின்றனர்.
சீரியலின் விறுவிறுப்பு அதிகரித்திருக்கும் இந்த நேரத்தில் இந்த மாதிரி ஒரு முடிவு சீரியலுக்கு பின்னடைவை ஏற்படுத்தி விடும் என சீரியல் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இரண்டாவது சீசன் தொடக்கம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முதன்மையான சீரியல்களில் ஒன்றாக பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து வருகிறது இந்த சீரியல் 2019 பிப்ரவரியில் ஒளிபரப்பாக தொடங்கியது. அதற்குப் பிறகு 2020இல் சீசன் இரண்டும் தொடங்கப்பட்டது. முதல் சீசனில் பாரதி, கண்ணம்மாவின் திருமண வாழ்க்கை அதற்கு பிறகு அவர் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அவருக்கு ஏற்படும் பல கஷ்டங்கள் போன்ற துயரமான கதைகளையும் விறுவிறுப்பாக சொல்லி ரசிகர்களின் மத்தியில் பிரபலமானதை தொடர்ந்து இந்த சீரியலை திடீரென்று முடித்து இரண்டாவது பாகத்தை தொடங்கிவிட்டனர். எட்டு வருடங்களுக்குப் பிறகு என்று இவர்கள் இரண்டாவது சீசனை தற்போது விறுவிறுப்பாக கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர்.

முதல் சீரியலில் எதிர்பாராத வெற்றி
இந்த சீரியலில் கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல் நகர்ப்புறங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதனாலேயே டிஆர்பியில் முதலிடத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலின் கதாநாயகி ரேஷ்மி ஹரிப்ரியன் முதல் சீரியலில் நடித்து இருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பை பெற்று விட்டார். இவர் சமூக வலைத்தளத்தின் மூலமாக இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பை விட்டு விடாமல் கெட்டியாக பிடித்து இவர் இன்று பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார்.

மீம்ஸ்களில் வைரல்
முதல் சீரியலின் வெற்றியை இவர் கூட இந்த அளவிற்கு எதிர்பார்த்திருக்க மாட்டார். அந்த அளவிற்கு ரசிகர்கள் கொடுத்து விட்டனர். சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் செம வைரலாக வலம் வந்துகொண்டிருந்தார். காரணம் இந்த சீரியலின் கதாநாயகியாக அதுவும் கண்ணம்மா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் ரோஷினியை நெட்டிசன்கள் தங்களுடைய இஷ்டத்துக்கு கலாய்த்து ட்ரோல்ஸ்களிலும், மீம்ஸ்களிலும் கலாய்த்து இவரை மேலும் பேமஸ் ஆக்கி விட்டனர். தற்போது இந்த சீரியல் மூன்றாவது சீசன் தொடங்கப் போவதாக ஒரு சில செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

என்னாச்சி கண்ணம்மாவுக்கு
ரோஷ்னி ஹரிப்ரியன் தற்போது சூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் அடிக்கடி சமூக வலைத்தளத்திலும் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார். அதுவும் இன்ஸ்டாகிராமில் இவருக்கு அதிகமான பாலோவர்ஸ் இருக்கின்றனர். அவர்கள் இவரிடம் அடிக்கடி போஸ்ட் போட சொல்லி கெஞ்சி வருகின்றனர். ரசிகர்களின் ஆசைக்காக இவரும் மாடர்ன் உடையிலும் சரி, டிரடிஷனல் உடையிலும் சரி, எப்போதுமே அழகழகான போட்டோக்களை அப்லோட் செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் திடீரென்று இவர் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகப் போகிறார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது. இதைப்பற்றி இவரிடம் ரசிகர்கள் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

இதுதான் காரணமா??
அதற்கு அவர் தொடர்ந்து சில வாரங்களாகவே எனது நடிப்புத் திறமையை வெளிக்காட்ட முடியாத வகையில்தன் இருந்து வருகிறது. தனது இரண்டாவது குழந்தையை கடத்தி விட்டீர்கள் என வெண்பாவிடமும், குழந்தையை நானே வைத்துக் கொள்வேன் என்று மாமியாரிடமும் அழுது கொண்டிருக்கும் சீன்கள் ஆகவே இருப்பதால் தொடர்ந்து மன வருத்தத்தில் இருப்பதாகவும், அதுமட்டுமல்லாமல் தனது குடும்ப சூழலும் காரணம் எனவும் கூறப்படுகிறது. இதைக்கேட்டதும் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்துவருகிறது. சீரியல் தொடங்கி இவ்வளவு நாட்களாக கண்ணம்மா என்னும் பெயரில் இவரையே பார்த்து வந்த ரசிகர்களால் இனி இவர் இந்த சீரியலில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications