ரூ.150 கோடியில் சுருண்ட ஆண்டாள் அழகர்.. விஜயகாந்தே ஃபீஸ் கட்டிடுவாரே? அப்படியென்ன பண கஷ்டம்: பிரபலம்
சென்னை: விஜயகாந்தின் அப்பா அம்மா பெயரை கொண்ட ஆண்டாள் அழகர் கல்லூரியை விற்பதற்கு எப்படி மனம் வந்தது? என்று கேட்டு பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். கல்லூரியை விற்கும் அளவுக்கு என்ன நிதி நெருக்கடியா? என்றும் கேட்டு வருகிறார்கள். இதற்கு இன்னமும் பிரேமலதா தரப்பிலிருந்து சரியான பதில் இன்னும் வெளிவரவில்லை" என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
King Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், "மாமண்டூரில் 75 ஏக்கர் நிலப்பரப்பில் ஆண்டாள் அழகர் கல்லூரியை தொடங்கி நடத்தி வந்தார் விஜயகாந்த்.. ஆரம்பத்தில் விஜயகாந்தும், அவரது மகன் விஜய பிரபாகரனும், கல்லூரியை கவனித்து வந்தார்கள்.. அதற்கு பிறகு அந்த கல்லூரியை நிர்வகித்தவர் பிரேமலதாவின் தம்பி சுதீஷ்.. அவர்தான் எடுத்து நடத்தினார்..

கொட்டிய காசு
இந்த கல்லூரி தொடங்கும்போது சில பிரச்சனைகள் இருந்தது.. அதை சுதிஷ் எதிர்கொண்டார்.. ஆனால், விஜயகாந்த்துக்கு இப்படியொரு கல்லூரியை தொடங்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை..
ஆனால், குடும்பத்தினர் வற்புறுத்தினார்கள்.. ஏனென்றால், கல்லூரி தொடங்குவது, அதிலும் குறிப்பாக இன்ஜினியரிங் கல்லூரி தொடங்கும்போது, காசு நல்லாவே வந்துட்டு இருந்தது.. அதாவது இன்ஜினியரிங் கல்லூரியை தொடங்கினால், காசை அள்ளலாம் என்ற நினைப்பில் அவருடைய குடும்பத்தினர் கல்லூரியை தொடங்கும்படி நிர்ப்பந்தித்து வந்தார்கள்.. எனவே, தன்னுடைய அம்மா, அப்பா பெயரில் ஆண்டாள் அழகர் இன்ஜினியரிங் கல்லூரியை மாமண்டூரில் தொடங்கினார் விஜயகாந்த்.
ஆனால், அந்த கல்லூரி மாணவர்கள் பிரச்சனை செய்தார்கள்.. அதேபோல சுதீஷூக்கும் அதை மேற்கொளளக்கூடிய திறமை இல்லை.. இதனால் சுதீஷ் மீது கோபம் கொண்டார் விஜயகாந்த் என்பது எல்லாருக்குமே தெரியும்.
ரூ.5 கோடி கடன்
தற்போது இன்று அந்த கல்லூரியை, தனலட்சுமி பொறியியல் கல்லூரி நடத்தி வரும் சீனிவாசன் என்பவர் விலைக்கு வாங்கிவிட்டார். என்று சொல்லப்படுகிறது. தினமும் ஆண்டாள் அழகர் கல்லூரி பற்றி விளம்பரம் கொடுத்து வருகிறார் தனலட்சுமி பொறியியல் கல்லுரி உரிமையாளர் தனலட்சுமி சீனிவாசன். அந்த கல்லூரியில் ஏற்கனவே 5 கோடி ரூபாய் பேங்கில் கடன் நிலுவையில் இருந்தது.. இப்போது அந்த கல்லூரியை 150 கோடிக்கு விற்றிருக்கிறார்கள் விஜயகாந்த் குடும்பத்தினர்.
ஆண்டாள் அழகர் கல்லூரியில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் ஏழு பிரிவுகள், முதுகலை படிப்புகளில் நாலு பிரிவுகள், மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியிருந்தது.. இதற்கிடையில், 150 கோடி ரூபாய்க்கு கல்லூரியை சீனிவாசனிடம் விற்றுவிட்டார் பிரேமலதா. இதற்கு விஜயகாந்த் கட்சியினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்..
அவ்வளவு நிதி நெருக்கடியா?
ஏழை மாணவர்களின் இலவச படிப்புக்காக இன்ஜினியரிங் கல்லூரியை தொடங்கினார் விஜயகாந்த். ஆனால், அவருடைய மறைவுக்கு பிறகு, அவரது அப்பா அம்மா பெயரை கொண்ட ஆண்டாள் கல்லூரியை விற்பதற்கு எப்படி மனம் வந்தது? என்று கேட்டு பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். கல்லூரியை விற்கும் அளவுக்கு என்ன நிதி நெருக்கடியா? என்றும் கேட்டு வருகிறார்கள். இதற்கு இன்னமும் பிரேமலதா தரப்பிலிருந்து சரியான பதில் இன்னும் வெளிவரவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
ஃபீஸ் கட்டிய விஜயகாந்த்
2 நாட்களுக்கு முன்பு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றில் பேசும்போது, "கல்லூரி கட்டியும் பெரிய தொகையை விஜயகாந்த் ஈட்டவில்லை.. காரணம் அரசு கோட்டாவில் வரும் மாணவர்களுக்கு மட்டுமே அட்மிஷன் போடுவாராம் விஜயகாந்த். அப்போதுதான் ஏழை பிள்ளைகள் வந்து படிக்க முடியும் என்பதால், அரசு கோட்டா மாணவர்களுக்கே முன்னுரிமை தந்துள்ளார்..
அரசு எந்த கட்டணத்தை விதிக்கிறதோ அந்த கட்டணத்தை மட்டுமே வாங்கியிருக்கிறார்.. அதுமட்டுமல்ல, அந்த கட்டணத்தைகூட செலுத்த முடியாத மாணவர்களுக்கு விஜயகாந்த்தே ஃபீஸை கட்டிவிடுவாராம். அப்படிப்பட்ட கல்லூரி இன்று கைமாறுவதை கேள்விப்படும்போது வருத்தமாக உள்ளது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications