Samantha: சமந்தாவுக்கு இரண்டாவது கல்யாணம் முடிந்தது! அதுவும் ஈஷா மையத்தில்! வெளியான தகவல்
கோவை: நடிகை சமந்தாவிற்கும் இயக்குனர் ராஜ் நிடிமோருவிற்கும் இன்று இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் ஈஷா மையத்தில் வைத்து எளிமையாக நடந்திருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகை சமந்தா பற்றி அடிக்கடி சர்ச்சைகள் வலம் வந்து கொண்டே இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அவர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. ஆனாலும் இவருக்கான ரசிகர்கள் குறையவில்லை. கடந்த 2017 ஆம் ஆண்டு சமந்தாவும் நாக சைதன்யாவும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களுடைய திருமணம் 2021 ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்தது.

இருவரும் பிரிந்து வாழ தொடங்கிய பிறகு விவாகரத்து செய்து விட்டனர். இதில் நாக சைதன்யாவிற்கு திருமணம் நடந்து விட்டது. ஆனால் சமந்தா தனியாக இருந்து வந்தார். அதனால் சமந்தா அடுத்த கல்யாணம் செய்து கொள்வாரா? என்ற கேள்விகள் எழுந்து வந்தது. சிங்கிளாக வலம் வந்த சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். அவர் நடித்த சில திரைப்படங்களும் தோல்வி அடைந்தது.
#SamanthaRuthPrabhu wedding Video 🔽 😊 #Samantha
— சுரேகா 🦋💕 (@Puravi12) December 1, 2025
Courtesy: ai pic.twitter.com/xL0DimLW8y
இந்த நிலையில் சில மாதங்களாக இவர் இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவரை காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்தது. இருவரும் சோசியல் மீடியாவில் புகைப்படங்களையும் போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சமந்தா மற்றும் நிடிமோரு திருமணம் நடந்திருக்கிறது, இதில் ஒரு சில உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சமந்தாவின் திருமண புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்தாலும் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் தி ஃபேமிலி மேன் சீசன் 2வில் ராஜ் நிடிமோரு இயக்கத்தில் சமந்தா நடித்திருந்தார்.
அந்த சீசனில் அவர் அதிகமான கவர்ச்சியாக நடித்ததால் சமந்தாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் இடையே பிரச்சனை வந்தது என்றும் அதனால் தான் இருவரும் பிரிந்தார்கள் என்றும் சில கிசுகிசுப்பு எழுந்து வந்தது. இந்த நிலையில் அந்த வெப் சீரிஸில் நடித்த பிறகு ராஜ் நிடிமோரு மற்றும் சமந்தா இருவரும் காதலிக்க தொடங்கியதாகவும் செய்திகள் வலம் வருகிறது. இதுகுறித்து சமந்தா அதிகாரப்பூர்வமாக விளக்கம் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications