சாந்தமான சனம்.. சாய்ந்து போச்சு ரசிகர்களின் மனம்
சென்னை : அனல் பறக்கும் அழகில் அம்சமாக அசத்தும் சனத்தை பார்த்து ரசிகர்களில் மனமும் சூடாகிப் போச்சாம்.
லாவண்டர் நிற உடையில் அழகு தேவதையாக வலம் வரும் சனம் ஷெட்டியை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் இன்ஸ்டாகிராமை களோபரம் செய்து வருகின்றனர்.
அடடா சிறப்பு தரிசனம் என்றால் இதுதான் என்று மெச்சி போன ரசிகர்கள் உச்சுக் கொட்டவும் தவறவில்லையாம்.

இப்படி பார்த்து பல நாளாச்சே
பல நாட்களுக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் சனம் ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஸ் கள்தான் தற்போது செம வைரல். ரசிகர்களின் மத்தியில் இவருடைய இந்த அழகு தரிசனத்தை பார்த்து அசந்து போய் விட்டார்கள். அழகு என்றால் அதுக்கு சனம் ஷெட்டி தான் என்று பலர் புகழ்ச்சியின் உச்சிக்கு சனத்தை கொண்டு சென்று விட்டார்கள். மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருக்கும் சனம் செட்டி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரும் புகழையும் அடைந்துவிட்டார். இந்த நிகழ்ச்சியில் பலர் தன்னுடைய கேரக்டர்களை ரசிகர்களிடம் கெடுத்துவிட்ட நிலையில் இவருக்கு ரசிகர்கள் இடத்தில் நல்ல மதிப்பு ஏற்படுத்திவிட்டது.

திமிரும் அழகு தான்
திமிரும், அழகு என்று இவரை பார்த்த பின்பு பலர் புரிந்து கொண்டனர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு வரைக்கும் இவரை பற்றி தவறான கருத்தை கொண்டிருந்த ரசிகர்கள் பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய உண்மையான கேரக்டரை அறிந்து கொண்டதும் இவருக்கு ஆர்மிகளை அமைக்க ஆரம்பித்து விட்டனர். சனம் ஷெட்டி ஆரம்பத்தில் மாடலிங்கில் காலடி எடுத்து வைத்து பின்பு ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருந்தாலும் அதிலெல்லாம் வாங்காத பேரும் புகழையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக இவர் வாங்கிவிட்டார். இவருடைய பாசத்தையும், பாசத்திற்கு மட்டுமே கட்டுப்படும் குணத்தையும் பார்த்த ரசிகர்களால் இவருக்கு ரசிகர்களாக மாறாமல் இருக்க முடியவில்லையாம்.

ட்ரெண்டான ஹேஸ்டேக்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் வெற்றிகரமாக கடந்து கொண்டிருக்கிறது. அதில் நான்காவது சீசனில் கலந்துகொண்ட சனம் செட்டி ரசிகர்களின் மனதில் வேரூன்றி விட்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் போல்டாக இருந்ததை பார்த்து ஆரம்பத்தில் இவரை திட்டி தீர்த்த ரசிகர்கள் நாட்கள் செல்ல செல்ல இவருடைய கேரக்டர் நன்றாக புரிந்து கொண்டுவிட்டனர். எப்படி முதல் சீசனில் ஓவியாவை ரசிகர்கள் ரசிக்க ஆரம்பித்தார்களோ அது போலவே இவருக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் உருவாகி விட்டனர். ரசிகர்களின் அன்போடு ஒவ்வொரு வாரமும் இவர் செலக்ட் ஆகி கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகிறார் என்ற செய்தி கேட்டு ரசிகர்கள் பலர் பீல் பண்ணி விட்டனர். இவர் இந்த நிகழ்ச்சியில் இருக்க வேண்டுமென்று இவருக்காக சமூக வலைத்தளத்தில் பல ஹேஸ்டேக்களை ட்ரண்ட் செய்து வந்தனர்.

அழகோ அள்ளுதே
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ் ஆக மாறிவிட்டார். அடிக்கடி இவர் எடுக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் டுவிட்டரில் பதிவிடவும் ரசிகர்கள் அதனை நன்றாக ரசித்து விட்டு எப்போது திரைப்படத்தில் வருவீர்கள் என்று கேள்வி கேட்டு வருகின்றனர். அதைப்பார்த்து மிக விரைவில் வருவேன் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு தரிசனமாக இவர் லாவண்டர் நிற லெகங்காவில் கலக்கிவிட்டார். இவர் எடுத்த ஒரு சில போட்டோக்கள் தான் தற்போது சமூக வலைத் தளத்தை பதற விட்டு வருகிறது. இந்த போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் கமெண்டுகளை குவித்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒருசில கமெண்ட்களுக்கு மட்டும் சனம் செட்டி பதிலளித்திருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை, சிக்கும் விஜயா! மீனாவுக்கு இனி தான் கம்பேக்.. செம சம்பவம் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்: ஒன்று சேர்ந்த மருமகள்கள்.. கோமதி குடும்பத்தில் பெரிய குழப்பம்! பாவம் பாண்டியன் -
Pandian Stores 2 promo: பாண்டியன் வீட்டிற்குள் நடந்த விபரீதம்.. மயில் எடுத்த முடிவு! சரவணனுக்கு 2வது கல்யாணம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications