நடிகை சரண்யா பொன்வண்ணன்னா இப்படி? சினிமாவில் அப்படி நடிச்சிருப்பாரே? மகள் எங்கேஜ்மெண்டில் செய்த செயல்
சென்னை: நடிகை சரண்யா பொன்வண்ணனின் மகள் சாந்தினி எங்கேஜ்மென்ட் சில மாதங்களுக்கு முன்பே நடைபெற்றது. அப்போது எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் இப்போது சோஷியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதில் ஒரு வீடியோவில் சரண்யா செய்த செயல்தான் பலருடைய கவனத்தைப் பெற்று வருகிறது.
சினிமாவில் ஒரு சிலரை பார்க்கும்போது மட்டும் இவங்க மாதிரி ஒருத்தங்க நம்ம வீட்டில் இல்லையே என்று நினைக்கத் தோன்றும். அந்த வரிசையில் நடிகை சரண்யா பொன்வண்ணனும் ஒருவர். ஆரம்பத்தில் கதாநாயகி ஆக சினிமாவில் அறிமுகமானாலும் அதற்கு பிறகு அம்மா, அக்கா, மாமியார் கேரக்டரில் நடித்து வருகிறார். அதிலும் சில படங்களில் வில்லியாக கூட நடிக்க தொடங்கி இருக்கிறார்.

ஹீரோவுக்கு அம்மாவாக நடித்தால் இதுபோல ஒரு மாமியார் நமக்கு வைக்காதா? என்று பல பெண்கள் நினைக்கத் தூண்டும் அளவிற்கு பாச மழை பொழிகிறார். ஜாலியாகவும் அதே நேரத்தில் பாசமாகவும் இவர் நடிப்பதை பார்த்து இவருடைய நிஜ கேரக்டரே இதுதானா? என்று நினைக்க வைக்கிற மாதிரி கேரக்டருடன் செட் ஆகி விடுகிறார். நான் சினிமாவில் வருவது போல தான் ஜாலியான டைப் என்று சில பேட்டிகளிலும் நிரூபித்திருக்கிறார்.
நடிகை சரண்யா கமலுக்கு ஜோடியாக நாயகன் படத்தில் தான் அறிமுகமானார். அதற்குப் பிறகு மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது, கருத்தம்மா, மீண்டும் சாவித்திரி என அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். அந்த நேரத்தில் தான் இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் பொன்வண்ணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
சரண்யா தன்னை போல தன்னுடைய மகள்களை நடிக்க வைக்காமல் அவர்களுக்கு பிடித்த மாதிரி டாக்டருக்கு படிக்க வைத்து விட்டார். மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இப்போது இரண்டாவது மகளுக்கு சமீபத்தில் எங்கேஜ்மென்ட் நடைபெற்றது. இந்த எங்கேஜ்மென்ட் குன்னூரில் ஒரு ரெசார்ட்டில் பிரம்மாண்டமாக நடந்தது. ஆனால் அதில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டும்தான் கலந்து கொண்டனர்.
சுற்றிலும் இயற்கை சூழல் சூழ்ந்திருக்க மலைகள் மற்றும் மரங்களுக்கு நடுவே பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு இடத்தில்தான் தன்னுடைய மகளுக்கு எங்கேஜ்மென்ட் நடத்தி வைத்திருந்தார். அப்போது எடுத்த சில வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. சாந்தினிக்கு கடந்த மாதமே எங்கேஜ்மென்ட் முடிவடைந்த நிலையில் இந்த எங்கேஜ்மென்ட் பற்றி சரண்யா மற்றும் பொன்வண்ணன் எந்த பதிவுகளையும் வெளியிடவில்லை.

அதே நேரத்தில் ஒரு மாதம் கழித்து மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருந்த ஒருவர் பகிர்ந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அதைத்தொடர்ந்து இப்போது ஒரு புகைப்படம் மற்றும் வீடியோஸ் வெளியாகி இருக்கிறது. அதில் தன்னுடைய மகளுக்கு எங்கேஜ்மென்ட் முடிந்த சந்தோஷத்தில் சரண்யாவும் துள்ளி குதித்து ஆட்டம் போட்டு இருக்கிறார். இவர் சினிமாவில் தான் இப்படி என்று பார்த்தால் நிஜத்திலும் இப்படித்தானே இருக்கிறார் என்று சிலர் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications