Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரிகமப நிகழ்ச்சியில் இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல! கண்ணீரோடு பேசிய பவித்ரா.. ஸ்ரீநிவாஸ் வெளியிட்ட வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சரிகமப சீனியர் சீசன் 5' நிகழ்ச்சி, இறுதிச் சுற்றை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த வாரம் போட்டியாளர்கள் பாடிய பழைய பாடல்களின் ரவுண்டு, ரசிகர்களுக்கு மட்டுமல்ல... போட்டியாளர்களுக்கும் மறக்க முடியாத உணர்வுபூர்வமான தருணங்களைக் கொடுத்திருக்கிறது. இதில், போட்டியாளர் பவித்ரா கண்கலங்கி அழுத வீடியோதான் இப்போது இணையத்தில் வைரலாகி, அனைவரின் மனதையும் தொட்டுள்ளது.

SaReGaMaPa Zee Tamil

கணவரின் ஆசை - மகளின் துணை

பவித்ரா இந்த 'சரிகமப' மேடையில் பாடுவதற்குக் காரணம், அவருடைய மறைந்த கணவரின் ஆசைதான். பவித்ரா பாடுவதைக் கேட்டு, அவரை ஒரு பெரிய பாடகி ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்த அவருடைய கணவர், எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் காலமாகிவிட்டார். இப்போது, தன் குழந்தையுடன் தனியாக வசித்து வரும் பவித்ரா, தன்னுடைய கணவரின் அந்தக் கனவை நிறைவேற்றுவதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். இந்த உணர்வுபூர்வமான பின்னணிதான், அவர் பாடும் ஒவ்வொரு பாடலுக்கும் கூடுதல் ஆழத்தைக் கொடுக்கிறது.

உன்னை காணாத கண்கள்

இந்த வாரப் பழைய பாடல்கள் சுற்றில், பவித்ரா, 'உன்னை காணாத கண்கள் கண்ணில்லை' என்ற பாடலை மிகவும் அழகாகப் பாடினார். அவருடைய உணர்வுபூர்வமான குரலில் அந்தப் பாடல் ஒலித்தபோது, நடுவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

அவரைப் பாராட்டிப் பேசிய பின்னணிப் பாடகர் மகாராஜன், பவித்ராவுக்கு உடனடியாக ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸைக் கொடுத்தார்! தன்னுடைய அடுத்த பாடலில் பாடுவதற்குப் பவித்ராவுக்கு வாய்ப்பு வழங்குவதாக மேடையிலேயே அறிவித்தார்!

இந்த அறிவிப்பைக் கேட்டதும், பவித்ரா மகிழ்ச்சியில் கண்ணீருடன் உறைந்து போனார். "நான் 'சரிகமப' நிகழ்ச்சிக்கு வரும்போது இப்படி எல்லாம் நடக்கும்னு நினைக்கவே இல்லை! பாடினால் அடுத்தடுத்து மேடைகள் கிடைக்கும்னு நினைச்சுதான் வந்தேன். ஆனா, இங்கே வந்த பிறகு இவ்வளவு பெரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கு. ரொம்ப நன்றி மகாராஜா சார்!" என்று பவித்ரா நெகிழ்ச்சியுடன் சொல்ல, அதற்கு மகாராஜன் கையெடுத்துக் கும்பிட்டுத் தன் அன்பைத் தெரிவித்தார்.

சாதனா சர்கத்தின் ஆசீர்வாதம்

அடுத்து, பாடகர் ஸ்ரீநிவாஸ் கொடுத்த சர்ப்ரைஸ், பவித்ராவைச் சந்தோஷத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது!. பவித்ரா இதற்கு முன்பு பாடிய 'அக்கம் பக்கம் யாரும் இல்லா' பாடல் வீடியோவை, ஸ்ரீநிவாஸ் பாடகி சாதனா சர்கத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த வீடியோவைப் பார்த்த சாதனா சர்கர், நிகழ்ச்சிக்கு வீடியோ கால் மூலம் இணைந்தார்!

சாதனா சர்கத், பவித்ராவிடம் பேசியபோது:

"பவித்ரா! உங்க பாட்டைக் கேட்டு நான் மெய்மறந்து போனேன். உங்களுடைய குரல் ரொம்பவும் அருமையாக இருந்தது. நீங்கள் பாடிய 'அக்கம் பக்கம்' பாடல், மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தூண்டுகிறது! நீங்கள் ரொம்பவும் திறமையானவர்களாக இருக்கீங்க. ரொம்ப தைரியமான பொண்ணாகவும் இருக்கீங்க. உங்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்து வெற்றி வரும்!" என்று மனம் உருகி வாழ்த்தினார்.

இந்த எதிர்பாராத ஆசீர்வாதம் பவித்ராவின் கண்களை மீண்டும் கண்ணீரில் நிரப்பியது. கணவரின் கனவு நிறைவேறும் நாள் வெகுதூரம் இல்லை என்ற நம்பிக்கையும், இந்த மேடை கொடுத்த அங்கீகாரமும் அவரைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த 'பழைய பாடல்கள்' சுற்றில், பவித்ராவால் இறுதிப் போட்டியாளர் லிஸ்டில் நேரடியாகத் தேர்வாக முடியாமல் போனது ஒரு சிறிய வருத்தத்தைக் கொடுத்திருந்தாலும், இந்த மேடையில் அவருக்குக் கிடைத்த வாய்ப்பும், வாழ்த்துகளும், அவருடைய மறைந்த கணவரின் கனவுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். பவித்ரா பாடுவது ஒரு வெறும் பாடலாக இல்லாமல், கணவருக்கான அவருடைய நித்திய அன்பின் வெளிப்பாடாகவே ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+