டயட்டால் உயிரிழந்த மனைவி.. நடிகர் பரத் கல்யாண் குழந்தைகளோடு வெளியிட்ட போஸ்ட்.. குவியும் லைக்குகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் நடிகர் பரத் கல்யாண் தன்னுடைய மனைவியின் இறப்பிற்கு பிறகு தன்னுடைய குழந்தைகளோடு தான் வெளியே செல்லும் இடங்களில் புகைப்படங்களை எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் மறைந்த கல்யாண் குமாரின் மகனான பரத் கல்யாண் தனது தந்தையை போலவே சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்று அதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து இருந்த நேரத்தில் தான் அவருக்கு கன்னடத்தில் ஒரு சில வாய்ப்புகள் வர கன்னடத்தில் முக்கிய நடிகராக மாறி இருக்கிறார்.

Serial actor Bharath Kalyan took pictures of his outings with his children

பிறகு தமிழில் ஜென்டில்மேன், ஆதிலட்சுமி புராணம் போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் தான் எதிர்பார்த்த அளவிற்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரையை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கிறார்.

அதிலும் தமிழில் அபூர்வ ராகங்கள், வம்சம் போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதுபோல விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலிலும் பாரதியின் தந்தையின் பிரண்டாக அறிமுகம் ஆகி இருந்தார். இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியலில் இலக்கியாவின் அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த 2022 அக்டோபர் மாதத்தில் பரத் கல்யாண் மனைவி திடீரென காலமானார். அப்போது அவருடைய வயது 43 தான் அதற்கு காரணம் அவர் உடல் எடையை குறைப்பதற்கான டயட்டில் இருந்த போது சர்க்கரை நோய் அதிகரித்திருந்த நிலையில் அதன் காரணமாக சில நாட்கள் கோமாவில் இருந்து கோமாவிலேயே மரணம் அடைந்து இருக்கிறார்.

Serial actor Bharath Kalyan took pictures of his outings with his children

அந்த நேரத்தில் பரத் கல்யாணின் மனைவியின் இறப்பு பெரிய அளவில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. போலியோ டயட் காரணமாக திடீரென உடலில் டயாபட்டிக்கு அதிகமானதால் பரத் கல்யாணின் மனைவி பிரியதர்ஷினி கோமா வரைக்கும் சென்றது குறித்து பலரும் அதிர்ச்சியோடு பேசிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தன்னுடைய மனைவியின் மறைவுக்கு பிறகு அந்த சோகத்தில் இருந்து மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டிருக்கும் பரத் கல்யாண் தன்னுடைய மகள் மற்றும் மகனோடு சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் பலரும் பரத் கல்யாணத்துக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+