என்னாது ஒன் சைட் லவ் ஃபெயிலால் நான் தற்கொலை முயற்சியா?..ஏன்ங்க இப்படி.. விஜய் டிவி பிரபலம் விளக்கம்
சென்னை: நான் தற்கொலை முயற்சி ஏதும் செய்யவில்லை. தவறான தகவலை பரப்பாதீர்கள் என விஜய் டிவி சீரியல் நடிகர் விளக்கமளித்துள்ளார்.
Recommended Video
1990 கிட்ஸ்களின் ஆல் டைம் ஃபேவரைட் சீரியலாக இருந்தது கனா காணும் காலங்கள். இதில் நடித்த பல நடிகர், நடிகைகள் இன்று சீரியல்களிலும் சினிமாவில் சிறிய ரோல்களிலும் நடித்து வருகிறார்கள்.
முழுக்க முழுக்க பள்ளி மாணவர்களை மையப்படுத்தியே எடுக்கப்பட்ட இந்த சீரியல் 2006 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இதில் நடித்த 12 மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து அவர்களுக்குள் நடக்கும் விஷயங்கள், அன்றாட நிகழ்வுகள், போட்டி, பொறாமைகள், சண்டை சச்சரவுகள் நட்பு உள்ளிட்டவற்றை அழகாக சொல்லி வந்தது.

சீரியல்
இந்த சீரியலில் ஹேமலதா, மோனிஷா ரவிசங்கர், ஷேவா, முகமது இர்பான், யுதன் பாலாஜி, லிங்கேஸ்வரன், ஹரிஹரன், வாசுதேவ கிருஷ்ணன், பூர்ணிமா, ராகவேந்திரன் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த சீரியலில் நடித்த ராகவேந்திரன் புலிகேஷி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

ராகவேந்திரன் புலி
இதனால் அவர் ராகவேந்திரன் புலி என்றே அழைக்கப்படுகிறார். இந்த சீரியலில் நடித்தவர்களின் ரீயூனியன் நிகழ்ச்சியும் விஜய் டிவியில் நடந்தது. இதில் வந்திருந்த நடிகர், நடிகைகளை பார்த்த ரசிகர்கள், யாரு நம்ம புலியா இப்படி வளர்ந்துட்டாரே, நம்ம வினீத்தா இது என சொல்லும் அளவுக்கு வளர்ந்திருந்தார்கள்.

விஜய் டிவி
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஒரு சிறிய ரோலில் புலி நடித்து வந்தார். அவர் திடீரென அந்த தொடரிலிருந்து வெளியேறினார். தனது ரோலுக்கு முக்கியத்துவம் இல்லை, ஊதியமும் மிகவும் குறைவு என குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.

தற்கொலை முயற்சி
அதன் பின்னர்தான் அவர் மன அழுத்தத்தில் இருப்பதாக இன்ஸ்டாவில் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். இதற்கு வேலையின்மை ஒரு காரணமாக இருந்தாலும் ஒரு தலை காதல், தோல்வியானதும் ஒரு காரணம் என புலி கூறியிருந்தார். இந்த நிலையில் ராகவேந்திரன் புலி தற்கொலை முயற்சி செய்ததாக தகவல்கள் பரவின.

புலி விளக்கம்
இதை மறுத்த ராகவேந்திரன் விளக்கமளித்துள்ளார். அவர் மீண்டும் வெளியிட்ட வீடியோவில் நான் பாசிட்டிவாக இருக்கிறேன். உடல்நிலை மோசமடைந்ததாக மட்டுமே நான் வீடியோ பதிவிட்டிருந்தேன். ஆனால் அதை தற்கொலை முயற்சி என தவறாக செய்தி பரப்பாதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

சாரி
நான் காமெடிக்காக போட்ட வெளியிட்ட வீடியோவை தற்கொலை முயற்சி என சொல்லிவிட்டீர்கள். எனக்கு நிறைய செய்திகள் பகிரப்படுகின்றன. நான் ஏன் தற்கொலை முயற்சி செய்ய போகிறேன்? என் வீட்டிலிருந்தவர்கள் பயந்துவிட்டார்கள். நான் அந்த பதிவை போட்டதற்கு மன்னித்துவிடுங்கள். நான் மிகவும் நன்றாக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications