விஜய் டிவி கதாநாயகிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. புகைப்படத்தோடு வெளியிட்ட போஸ்ட்
சென்னை: சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்கிற்கு இன்று (மே 23) இரண்டாவது பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது பிறந்த குழந்தையின் கைகளை புகைப்படமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
ஸ்ரீதேவி அசோக் விஜய் டிவியில் மோதலும் காதலும் சீரியல் மற்றும் பொன்னி சீரியல் இரண்டிலும் நடித்துக் கொண்டிருந்த நிலையில் இரண்டிலும் அவர் கர்ப்பமாக இருப்பது போன்றே நடித்துக் கொண்டிருந்தார். கர்ப்பமான முதல் நாளிலிருந்து குழந்தை பிறக்கும் முதல் வாரம் வரைக்கும் சீரியலில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டு இருந்த ஸ்ரீதேவி மோதலும் காதலும் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக நடிகை கிருத்திகா அறிமுகம் ஆகி இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஸ்ரீ தேவி அசோக் முதல் குழந்தை கர்ப்பமாக இருக்கும் போதும் ஆரம்பத்தில் இருந்து குழந்தை பிறக்கும் வரைக்கும் அதிகமான போட்டோ சூட் எடுத்திருந்தார். அதுபோல இப்போதும் தன்னுடைய முதல் குழந்தை மற்றும் கணவரோடு அதிகமான போட்டோ சூட் எடுத்திருக்கிறார்.
"சிங்கப் பெண்ணே" சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்தது.. புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான பதிவு
அதுமட்டுமல்லாமல்சீரியல் சூட்டிங் ஸ்பாட்டிலும் பல ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இது குறித்து ஒரு சிலர் விமர்சித்து வந்தாலும் ஒரு சிலர் இவரை பார்க்கும்போது கர்ப்ப காலத்தில் ஏற்படும் பயம் குறைவதாக கருத்து கூறி வருகிறார்கள்.
ஸ்ரீதேவி புதுக்கோட்டையில் சரவணன் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். அதை தொடர்ந்து தான் இவருக்கு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான கிழக்கு கடற்கரை சாலை என்ற திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நீயா நானா: உங்க கர்ப்பகாலத்தை ஏன் ஊருக்கே காட்டுறீங்க? ஃபரீனாவை மடக்கிய பெண்.. திடீர் வாக்குவாதம்
ஒரு சில திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் பெரிய அளவில் அதைத் தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வராத நிலையில் இவருக்கு 2007 ஆம் ஆண்டு சின்ன திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலிலும் இவருடைய நடிப்பை தொடர்ந்து இருந்தார்.
அதை தொடர்ந்து கஸ்தூரி, தங்கம், இளவரசி, வாணி ராணி, செம்பருத்தி, ராஜா ராணி, அரண்மனைக்கிளி என வெளியான பல சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு பெரிய அளவில் நடிப்பில் மைல்கல்லாக அமைந்தது என்றால் ராஜா ராணி சீரியல் தான். அதிலும் இந்த சீரியலில் இவர் வில்லியாக செம்பாவை பாடாய் படுத்தி எடுக்கும்போது அதிகமான ரசிகர்கள் இவரை திட்டி தீர்த்து வந்திருந்தாலும் இவருடைய க்யூட்டான நடிப்பை பாராட்ட தவறியது இல்லை.












Click it and Unblock the Notifications