குட் நியூஸை சொன்ன சின்னத்திரை காதல் தம்பதி.. அடுத்தகட்ட வளர்ச்சி.. குவியும் வாழ்த்துக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் நடிகையான வைஷாலி தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தன் புது மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.

சீரியல்களில் குணச்சித்திர வேடத்திலும் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கும் வைஷாலி சமீபத்தில் தான் காதல் திருமணம் செய்து கொண்டிருந்தார். தற்போது மாலையும் கழுத்துமாக கணவரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

விஜய் டிவியில் அறிமுகம்

விஜய் டிவியில் அறிமுகம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை சீரியல் மூலமாக சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த வைஷாலி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்தான். இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் ஒன்றில் சஞ்சய்வின் தங்கையாக இவர் நடித்திருந்தார். அதுபோல பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஆரம்பத்தில் கண்ணனுக்கு ஜோடியாக இவர் தான் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்திருந்தார். பின்பு அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

அதிகமான சீரியல்களில் இவர் நடித்து ஒரு சில எபிசோடுகளிலே வெளியேறி இருக்கிறார். குறிப்பாக ராஜா ராணி சீசன் 1,பாண்டியன் ஸ்டோர் போன்ற பல சீரியல்கள் அதில் அடங்கும் அதுமட்டுமல்லாமல் ஜீ தமிழில் ஒளிபரப்பான கோகுலத்தில் சீதை, நம்ம வீட்டு பொண்ணு போன்ற சீரியல்களிலும் இவர் நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் இவர் தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார்.

புதிய பிசினஸ்

புதிய பிசினஸ்

இந்த நிலையில் தனது கணவர் தேவ் உடன் இணைந்து மகிழ்ச்சியான செய்தி ஒன்றை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். அடிக்கடி போட்டோ சூட் நடத்தும் வைஷாலி இப்போது கணவரோடு ஹோமிலியாக எடுத்த புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் என்ன விசேஷம் என்று கேட்டு வந்தனர். அந்த போட்டோவில் இருவரும் மாலையும் கழுத்துமாக இருப்பதை பார்த்ததும் ஏதோ கோவிலுக்கு சென்று தரிசனம் செய்திருப்பார்கள் என்று நினைத்த ரசிகர்களுக்கு இவர் புதியதாக ஜிம் ஒன்றை தொடங்கியிருப்பதாகவும், அதற்கு திறப்பு விழா புகைப்படங்கள்தான் இது என்று கூறி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

புதிய பயணத்திற்கு வாழ்த்துக்கள்

புதிய பயணத்திற்கு வாழ்த்துக்கள்

ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்ன திரை பிரபலங்கள் பலரும் இவர்களுடைய புதிய பயணத்திற்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இவர்களுடைய புது ஜிம்மில் பூஜை செய்து கணவரும், மனைவியும் மாலை மாற்றிக் கொண்டு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. அதுவும் மேக்கப்பே இல்லாமல் இவரை பார்த்த ரசிகர்கள் சீரியலில் வருபவரா? இவர் என்று சிலர் கலாய்த்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+