Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயகாந்த் போலவே மகன் சண்முக பாண்டியன் செய்த செயல்.. படைத்தலைவன் வெற்றியை தொடர்ந்து அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடித்த படைத்தலைவன் திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் சண்முக பாண்டியன் அடுத்ததாக நடித்து வந்த கொம்பு சீவி என்ற திரைப்படத்தின் சூட்டிங் முடிவடைந்து இருக்கிறது. தன்னுடன் நடித்த நடிகர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து புது ஆடை வாங்கி கொடுத்து மகிழ்ந்திருக்கிறார்.

விஜயகாந்த் மறைந்தாலும் அவருடைய புகழ் இன்னும் மறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவரிடம் உதவி பெற்றவர்கள் பலர் அவரைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டே இருக்கிறார்கள். சினிமா துறையில் இருக்கும் பலரும் விஜயகாந்த் இடம் சாப்பிட்டதாக பல பேட்டிகளில் பேசுவதை பார்த்திருக்கிறோம். அவரைப் போலவே அவருடைய மகனும் என்று செய்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Vijayakanth Shanmuga Pandian

கொம்பு சீவி திரைப்படம்

விஜயகாந்த் தான் இறந்தாலும் தன்னுடைய மகன்கள் சினிமா துறையினருக்கு சாப்பாடு போட வேண்டும் என்று சொன்னதாக விஜயகாந்தின் மகன்கள் பேசியிருக்கிறார்கள். விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் இறங்கி இருக்கிறார். அதுபோல இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே மூன்று படங்களில் நடித்திருந்தாலும் இப்போது பல வருடங்களுக்குப் பிறகு படைத்தலைவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சண்முக பாண்டியன் நடிக்கும் அடுத்த படம்

இந்த திரைப்படம் நேற்று தான் திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு நல்ல பாராட்டு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சண்முக பாண்டியன் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து நடித்த "கொம்பு சீவி" என்ற திரைப்படத்தின் சூட்டிங் முடிவுக்கு வந்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சண்முக பாண்டியன் பெருந்தன்மை

படைத்தலைவன் திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி இருக்கிறார். விரைவில் அடுத்த திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் தன்னுடன் நடித்த நடிகர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து அவர்களுக்கு புது ஆடை வாங்கி கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் சின்ன சின்ன வேலைகள் செய்தவர்கள் முதல் இயக்குனர் வரை அனைவருக்கும் சரிசமமாக சாப்பாடு மற்றும் உடை வாங்கி கொடுத்திருக்கும் சண்முக பாண்டியனை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

ரசிகர்களின் வாழ்த்து

அதேபோல படை தலைவன் திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் ஏஐ மூலமாக மீண்டும் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். அதை பலரும் பாராட்டி வருகிறார்கள். சண்டை காட்சிகளில் சண்முக பாண்டியன் அவருடைய அப்பாவை நினைவுபடுத்துகிறார் என்றும் பலரும் பாராட்டி வருகிறார்கள். படைத்தலைவன் படத்தைப் போலவே கொம்பு சீவி திரைப்படமும் வெற்றி பெற வேண்டும் என்பது சண்முக பாண்டியனின் ரசிகர்கள் மற்றும் விஜயகாந்தின் தொண்டர்களின் வாழ்த்தாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+