அம்மி அம்மி அம்மி மிதிச்சு.. ஆடி ஓய்ந்த கால்கள்.. சீரியலில் கலக்கும் ஸ்நேக் சாந்தி!
சென்னை: சன் டிவியின் மெட்டி ஒலி சீரியலை யாராலும் மறக்க முடியாது. சீரியலில் வரும் அம்மி அம்மி அம்மி மிதிச்சு, அருந்ததி முகம் பார்த்து ஒரு குலமகள் வீட்டுக்குள்ள கொண்டு வரும் சீதனம் மெட்டி மெட்டி ஒலிதான் பாடலுக்கு குழுவுடன் நடனமாடியவர் டான்ஸ் மாஸ்டர் சாந்தி.
இவர் பிரபு தேவா குழு, ராஜு மாஸ்டர் குழு, தினேஷ் மாஸ்டர் குழுன்னு மாறி மாறி நடனமாடியவர். ஒரு காலத்தில் தானே நடன மாஸ்டர் ஆனார். தெலுங்கு பட உலகில் நிறைய படங்களில் பாடல்களுக்கு மிக சிறப்பாகவே கோரியோகிராப் பண்ணியிருந்தார்.
தமிழ் படங்களிலும் நிறைய கோரியோகிராப் பண்ணி இருந்தார். அர்ஜுன், ரீமா சென் நடிப்பில் வெளிவந்த கிசு கிசு மனுஷா கிக்கான மனுஷா கிச்சு கிச்சு பண்ணலாம் வர்றியான்னு ஒரு கவர்ச்சி பாடலை ரொம்ப அழகா கோரியோகிராப் பண்ணி இருப்பார்.

பிள்ளைகளுக்கு
அக்கா பிள்ளைகளுக்காகவே ரொம்ப நாள் திருமணம் செய்துக்காம டான்சில் கவனம் செலுத்தி வந்தார். அக்கா, அக்கா பிள்ளைகளுக்கு என்று சம்பாதிக்க ஆரம்பிச்சவர், அவர்களை கரை ஏற்றிய பின்னர்தான் தனக்கான ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார் சாந்தி.

திருமுருகன்
கல்யாணத்துக்குப் பிறகு நடனம் தனக்கு ஒத்து வராது என்று நினைத்தவர் சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். ஒரு கட்டத்துக்கு பிறகு திருமுருகனிடம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கேட்டதும், அதிர்ச்சி அடைந்தாராம் திருமுருகன்.

உங்க ஃபேன்
என்னங்க நீங்க.. நான் படங்களில் உங்க டான்ஸ் பார்த்து அசந்து போனவன். உங்க ஃபேன்... அதனாலதான் மெட்டி ஒலியிலே டைட்டில் சாங் உங்களுக்கு முக்கியத்துவம் இருக்க மாதிரி கோரியோகிராப் பண்ண சொன்னேன். தாராளமா என் சீரியலில் நீங்க நடிக்கலாம்னு நெகிழ்ந்து போய் சொன்னாராம்.

குலதெய்வம்
உடனடியாக குலதெய்வம் சீரியலில் வாய்ப்பு கிடைச்சு சாந்தி தனது நடிப்பு வாழ்ககையைத் துவங்கினார்.இப்போ, சன் டிவியின் கல்யாணபரிசு சீரியலில் நடிச்சுட்டு வர்றார். இத்தனை வருட டான்ஸ் மாஸ்டர் வேலையில் இவர் சம்பாதித்தது அதிகம்னாலும், பாவம் சேமிப்பு என்று பெரிதாக ஒன்றுமில்லை.

சாந்தி
கவர்ச்சி நடன நடிகை டிஸ்கோ சாந்தி கூட அப்படித்தான், தம்பி, தங்கைகளை தந்தை இடத்தில் இருந்து கரை சேர்க்கவே கவர்ச்சி நடனங்களை ஆடி வந்தார். எல்லாரையும் கரை சேர்த்த பின்னரே தனக்கு ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார் டிஸ்கோ சாந்தி.
மெழுகுவர்த்தியாக இன்னும் சில பெண்கள் தன்னலமின்றி வாழ்வதால்தான் இந்த பூமி சுத்திகிட்டு இருக்கு.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications