கடல் அலையையே ஆர்ப்பரிக்க வைத்த ஷிவானி...கலகலக்கும் ரசிகர்கள்
சென்னை: அந்த ஈசிஆர் கடலோரம் ஒரு அழகை கண்டேனே என்று ரசிகர்கள் ஷிவானியை பார்த்து ஆர்ப்பரித்து வருகின்றனர்.
வானம் சிவந்திருக்கும் அழகை பார்க்கும் போது ஷிவானியின் அழகை பார்த்து தான் இவ்வளவு அழகாக மாறி இருக்கிறதோ என்று சிலருக்கு எண்ணத் தோன்றுகிறதாம்.
கடல் அலையோடு கொஞ்சி விளையாடும் ஷிவானியை பல நாளுக்குப் பிறகு பார்த்த ரசிகர்களால் லைக் பட்டன் தெறித்து வருகிறது.

கடல் அலையில் விளையாட்டு
இன்ஸ்டாகிராமில் ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்ட பிறகு ரசிகர்களுக்கு எந்தவித தரிசனத்தையும் காட்டாமல் இருந்த ஷிவானி தற்போது கடல் அலையில் குழந்தை போல துள்ளிக் குதித்து விளையாடும் அழகை ரசிகர்களுக்காக வெளியிட்டிருக்கிறார். இவர் விளையாடும் அழகை பார்த்து பலருக்கும் குழந்தை பருவ நினைவுகள் எல்லாம் எட்டிப் பார்க்கிறது. நாமும் இப்படி ஒரு இடத்திற்கு சென்று விடலாமா? என்று சிலர் யோசித்து வருகின்றனர். எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் வீட்டுக்குள்ளயோ முடங்கி இருக்கும் பெண்கள் பலரும் இந்த மாதிரி ஒரு இடத்திற்கு சென்றால் நன்றாக இருக்குமே என்று எண்ணி வருகிறார்களாம்.

பகல் நிலவில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலின் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ஷிவானி அதற்குப் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா என்று தொடர்ச்சியாக சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். முதல் சீரியலில் இவர் எதிர்பார்க்காத வகையில் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பெருகிவிட்டது. அதற்கு காரணம் இவருடைய பாவாடை தாவணியில் க்யூட்டாக அழகாக இருந்தாலும், பக்கத்து வீட்டு பெண் போன்ற முக அழகும், அந்த துறுதுறு பார்வையும் தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் பிரபலமான நபராக தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இன்ஸ்டா இளவரசி
சின்னத்திரையில் இருக்கும்போதே வெள்ளித்திரை கதாநாயகிகளுக்கு போட்டியாக இவர் வீடியோக்களும் போட்டோசூட் போட்டோக்களும் செம வைரலாக மாறிவிடும். இதனாலேயே ஷிவானி நாராயணன் என்னும் பெயரைச் சொன்னாலே பட்டிதொட்டியெல்லாம் பிரபலம்தான். அதுமட்டுமல்லாமல் இளைஞர்களின இன்ஸ்டா இளவரசியாக வலம் வந்து கொண்டிருந்தார். சீரியலில் தொடர்ந்து பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பள்ளி கல்வியையும் சிறப்பாகத்தான் முடித்துக் கொண்டிருந்தார். இவர் பள்ளி படிக்கும் போது சீரியலில் கதாநாயகியாக மாறிவிட்டார் என்று சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள். அதுமட்டுமல்லாமல் டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பட்டையை கிளப்பியிருக்கிறார்.

நாலு மணி ஷிவானி
சின்னத்திரையில் இருந்து திடீரென்று இவர் விலகியதும் என்ன காரணமாக இருக்கும் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு பதிலளிக்காமல் இவர் தினமும் 4 மணிக்கு போஸ்ட் போட்டு 4 மணி ஷிவானியாக வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் நன்றாக போய்க் கொண்டிருந்த ரசிகர்களின் கனவுகளில் திடீரென்று இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ரசிகர்கள் பலர் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாதியிலே வெளியில் வந்துவிட்டார். ஆனால் அதற்குப் பிறகு இவர் முன்பு மாதிரி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவதில்லை. இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் வருத்தம் தான். இந்த நிலையில் இவர் கடற்கரையில்கடல் அலையோடு கொஞ்சி விளையாடிய வீடியோஸ் மீண்டும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications