சிறகடிக்க ஆசை: முத்து மீடியாவில் சொன்ன விஷயம்! அருணுக்கு பறிபோன வேலை! சீதா கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், இப்போது அண்ணா நகர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் காரணமாக முத்துவுக்கும் அருணுக்கும் இடையே புதிய மோதல் வெடித்திருக்கிறது. கடமையில் கவனமில்லாமல் சென்றதாக அருண் சஸ்பெண்ட் (Suspend) செய்யப்பட்டதால், அவர் முத்து மீது உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார்.

மனிதாபிமான முத்து
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அண்ணா நகர் பகுதியில் டிராஃபிக் போலீஸாக பணியில் இருந்த அருண், வழக்கம் போல வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது போலீஸுக்குப் பயந்து ஒரு இளைஞர் பைக்கில் அதிவேகமாக செல்ல, அந்த இளைஞர் எதிரே வந்த ஒரு பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றுவிட்டார்.
அருணின் கவனம்
பணியில் இருந்த அருண், கீழே அடிபட்டுக் கிடந்த பெண்ணைக் கண்டுகொள்ளாமல், சட்டத்தை மீறிய அந்த இளைஞரைத் துரத்திச் சென்று பிடிப்பதிலேயே குறியாக இருந்தார். அப்போது அதே வழியாக வந்த முத்து, அடிபட்டுக் கிடந்த பெண்ணை பார்த்து பதறிப் போகிறார். அக்கம்பக்கத்தினர் கூட யாரும் உதவி செய்யாமல் அந்த பெண்ணை வீடியோ எடுத்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் கோபமான முத்து அங்கு இருப்பவர்களை திட்டி விட்டு உடனடியாக அந்தப் பெண்ணை காப்பாற்றி, தன் காரில் ஏற்றிக் கொண்டு, சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தார். இதனால் அருணுக்குக் கெட்ட பெயர் வருகிறது
முத்து செய்த இந்த மனிதாபிமானச் செயலை, அங்கிருந்த பொதுமக்கள் ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட, அது ஒரே இரவில் வைரலானது. அனைத்துச் செய்தி சேனல்களிலும் அந்த வீடியோ ஒளிபரப்பானது.
மக்கள் அனைவரும் முத்துவின் மனிதாபிமானத்தைப் பாராட்டினார்கள். அங்கிருந்த பொதுமக்கள், "முத்துவை மாதிரி எல்லாரும் இருக்கணும்!" என்று புகழ்ந்ததுடன், "அடிபட்ட பெண்ணைக் கண்டுகொள்ளாமல் போன அந்தப் போலீஸ்காரரை (அருண்) சஸ்பெண்ட் செய்ய வேண்டும்" என்றும் கோரிக்கை வைத்தார்கள். இதன் விளைவாக, அருணுக்கு பொதுமக்கள் மத்தியிலும், மீடியாவிலும் கெட்ட பெயர் ஏற்பட்டது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட அருண்
இந்த வீடியோ வைரலானதால், உயர் அதிகாரி வரை விஷயம் சென்றது. கடமையில் கவனக்குறைவாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அருண் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வீட்டுக்கு வந்த அருண் இந்த விஷயத்தைச் சீதாவிடம் சொல்ல, சீதா அதிர்ச்சி அடைகிறார். "மூன்று நாள் தானே?" என்று சீதா சமாதானப்படுத்த முயன்றபோது, அருண் மிகுந்த வருத்தத்துடன் பேசுகிறார்:
"மூன்று நாளோ, முப்பது நாளோ... அது என் ரெக்கார்டில் ஒரு பிளாக் மார்க் ஆகிவிடும். அதனால் என்னுடைய புரமோஷனும் பாதிக்கும். கடைசி வரை அடுத்த பதவிக்கு போகவிடாமலே செய்துவிடுவார்கள்!" என்று வேதனையுடன் புலம்புகிறார்.
ஆவேசத்தில் அருண்
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைவிட, அவர் மீது அதிகக் கோபம் இருப்பதோ முத்துவின் மீதுதான். ஆவேசத்துடன் பேசிய அருண், முத்துவை சாடுகிறார்: "இப்பவும் அவனால்தான் நான் சஸ்பெண்ட் ஆகி இருக்கேன். முத்து பேசியது சோசியல் மீடியாவில் வைரலாகிவிட்டது. அதுவும், நான் தப்பு செய்தது போலச் சாமர்த்தியமாகப் பேசி இருக்கிறான். எல்லாரும் என்னைத் தப்பா நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவன் அப்படிச் செஞ்சிருக்கான். என்னுடைய உண்மையைவிட, அவனுடைய தந்திரம் ஜெயிச்சிடுச்சு. நான் என்னுடைய வேலையைத் தான் செஞ்சேன்!" என்று கத்துகிறார்.
ஏற்கனவே ரோகிணியால், முத்து மற்றும் அருண் குடும்பங்களுக்கு இடையேப் பல பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், இந்தச் சஸ்பெண்ட் விவகாரம் இந்த அண்ணன் - தம்பி உறவில் மேலும் பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் எபிசோடுகளில் முத்து, அருண் மீதான குற்றச்சாட்டுக்கு எப்படிச் சமாளிப்பார், அருணின் சஸ்பெண்ட் விவகாரம் என்ன ஆகும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!












Click it and Unblock the Notifications