சிரிக்கிறதா, அழறதான்னு தெரியல! கல்யாணமாகி 8 மாதத்தில் விவாகரத்து! ‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் வெற்றி வசந்த். இவருடைய எளிமையான நடிப்புக்கும், இயல்பான பேச்சுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில், அவர் கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது தனிப்பட்ட வாழ்க்கை, திருமண வாழ்க்கை, மற்றும் கடந்த கால கஷ்டங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருந்தார்.

Siragadikka aasai serial vijay tv Vetri Vasanth

யார் இந்த வெற்றி வசந்த்

நடிகர் வெற்றி வசந்த்தின் ஆரம்ப கால வாழ்க்கை அவ்வளவு எளிதானதாக இல்லை. அவர் ஒரு வருடம் மாதம் ₹2,000 மட்டுமே வாடகை இருந்த ஒரு வீட்டிற்குக் கூட வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்பட்டதாகத் தெரிவித்தார். அந்தக் கடினமான சூழலில் அவருக்கு உதவிய வீட்டு உரிமையாளருக்கு தனது நன்றியைத் தெரிவித்த அவர், அந்தக் கஷ்டங்களை இப்போது நினைத்துப் பார்த்தால் அது ஒருவித நன்றிக்கடனை உணர்த்துவதாகவும் நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.

வெற்றி திருமண வாழ்க்கை

இப்படிப் பல சிரமங்களுக்குப் பிறகு, இன்று தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள வெற்றி வசந்த், கடந்த நவம்பர் மாதம் சின்னத்திரை நடிகையான வைஷ்ணவியை காதல் திருமணம் செய்து கொண்டார். வைஷ்ணவி 'ராஜா ராணி 2', 'பொன்னி' போன்ற சீரியல்களில் நடித்தவர். சமூக வலைதளங்களில் இருவரும் சேர்ந்து வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகின்றன.

விவாகரத்து வதந்தி

திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில், வெற்றிக்கும் வைஷ்ணவிக்கும் விவாகரத்து என்று யூடியூப் சேனல்களில் சில வதந்திகள் பரவின. இதனால் மிகுந்த வேதனை அடைந்த வெற்றி, தனது பேட்டியில் இதற்குப் பதில் அளித்துள்ளார்.

தன்னைப் பற்றி யாரும் உண்மையில் அறியாத நிலையில், யூடியூப் சேனல்கள் வருவாய்க்காக வதந்திகளைப் பரப்பி வருவதாக அவர் குறிப்பிட்டார். "விஜய் சேதுபதிக்கு வில்லன், சொகுசு பங்களாவில் வாழ்க்கை, விவாகரத்து" எனப் பல பொய்யான தலைப்புகளைச் சுட்டிக்காட்டி, இவை அனைத்தும் உண்மையற்றவை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த வதந்திகள் தன்னை விடவும் தனது பெற்றோர்கள், மாமியார் மற்றும் உறவினர்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக அவர் கூறினார். இருப்பினும், நடிகராக இருக்கும்போது இதுபோன்ற வதந்திகளையும், மக்களின் அன்பையும் ஒரே நேரத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார். மேலும், தனது மனைவி இதுபோன்ற வதந்திகளைப் பார்த்துச் சிரித்துவிடுவார் என்றும், அதனால் அது தன்னை அவ்வளவாகப் பாதிப்பதில்லை என்றும் அவர் கூறினார்.

மொத்தத்தில், வதந்திகளுக்குப் பயந்து ஓடாமல், அதனை நேருக்கு நேராக எதிர்கொண்டு, தைரியமாகப் பேசிய வெற்றி வசந்த், ரசிகர்களின் மத்தியில் மேலும் உயர்ந்துள்ளார். அதுபோல சமீபத்தில் வெற்றி வசந்த் மற்றும் அவருடைய மனைவி வைஷ்ணவி இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொண்டனர். அந்த ப்ரோமோ இணையத்தில் வைரலானது. அதை பார்த்த சிலர் வெற்றி வசந்த்க்கு ஏற்ற ஜோடி வைஷ்ணவி இல்லை என்று ட்ரோல் செய்திருக்கிறார்கள்.

Siragadikka aasai serial vijay tv Vetri Vasanth

வைஷ்ணவி வேதனை

இதனால் கடுப்பான வைஷ்ணவி அது பற்றி கண்கலங்கி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் என்னுடைய மூக்கு இப்படித்தான் இருக்கும், என்னுடைய வாய் இப்படித்தான் இருக்கும். நான் இப்படித்தான் சிரிப்பேன். உங்களுடைய பார்வைக்காக என்னால் நடிக்கவோ அல்லது மாற்றி அமைக்கவோ முடியாது. எனக்கு எப்படி இருக்க பிடித்திருக்கிறதோ அதேபோல இருப்பேன்.

நானும் என்னுடைய கணவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை வைத்து சிலர் ட்ரோல் செய்கிறார்கள். அதை பார்த்து சிரிப்பதற்காகவும் ஒரு கூட்டம் இருக்கின்றனர். இதனால் எங்களுடைய மனம் எவ்வளவு வேதனை அடையும் என்று ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?. அதுபோல நான் சும்மா இருந்து சாப்பிட்டேன் என்று சிலர் சொல்கிறார்கள். அப்படி சாப்பிட்டால் உங்களுக்கு என்ன கஷ்டம்? நான் என்னுடைய புருஷன் சம்பாத்தியத்தில் சாப்பிடுகிறேன். அதனால் உங்களுக்கு என்ன வந்தது? என்று பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+