சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது டிரெண்டில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த சீரியலில் ரசிகர்கள் அதிகமாக பேசிக்கொண்டிருக்கும் கேரக்டர் என்றால் 'விஜயா'. அந்த ரோலில் நடித்து வருபவர் அணிலா ஸ்ரீகுமார்.
சீரியலில் அவர் காட்டும் நடிப்பு காரணமாக பலரும் திட்டிக் கொண்டிருந்தாலும், அவருக்கு ரசிகைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், அணிலா ஸ்ரீகுமார் பற்றிய ஒரு வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அதாவது அவருக்கு மூன்றாவது கல்யாணம் நடந்திருக்கிறது. அதுவும் அவருடைய பிள்ளைகள் கண் முன்பே நடந்திருக்கிறது. "மூன்றாவது கல்யாணம்" என்ற செய்தி முதலில் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தாலும், அதன் பின்னால் இருக்கும் விஷயம் கொஞ்சம் வேற மாதிரி தான் இருக்கிறது.

ஆரம்ப காலம் முதல் விஜயா வரை
அணிலா ஸ்ரீகுமார் கேரளாவை சேர்ந்தவர். ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'வேலைக்காரன்', 'சின்னத்தம்பி' போன்ற சீரியல்களில் நடித்தவர். ஆனால் அவருக்கு பெரிய அளவில் பெயர் எடுத்துக் கொடுத்தது 'சிறகடிக்க ஆசை' சீரியல் தான். அந்த சீரியலில் விஜயா கேரக்டரில் நடிப்பதை விட, வாழ்ந்து காட்டுகிறார் என்று ரசிகர்கள் சொல்வது உண்மை.
சாட்சி ஆன மகன்
அணிலாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகன், மகள் இருவருமே கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் இருக்கிறார்கள். இந்த வயதில் இருக்கும் குழந்தைகள் முன்னிலையில் நடந்த சம்பவம்தான் இப்போது வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
அணிலா ஸ்ரீகுமார் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் Happy Wife Happy Life நிகழ்ச்சியில் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில், அவருக்கும் அவருடைய கணவருக்கும் மீண்டும் ஒரு முறை திருமணம் நடத்தி வைத்திருக்கிறார்கள். இதுதான் "மூன்றாவது கல்யாணம்" என்று பேசப்படுகிறது.
அதாவது, இவர்களுடைய முதல் திருமணம் கோவிலில் நடைபெற்றதாம். இரண்டாவது திருமணம் சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் கோவிலில் நடந்ததாம். இப்போது மூன்றாவது முறையாக டிவி நிகழ்ச்சியில் கல்யாணம் நடக்கிறது என்று அணிலாவின் மகன் கலாய்த்து இருக்கிறார்.
மகனின் ரியாக்ஷன்
இந்த நிகழ்ச்சியில் அணிலாவின் மகன் சொன்ன ஒரு விஷயம் தான் எல்லாரையும் சிரிக்க வைத்திருக்கிறது. "என் அம்மாவுக்கு இது மூன்றாவது கல்யாணம். முதல் கல்யாணம் நடந்தப்போ நான் கைக்குழந்தை. அப்பவே பார்த்துட்டேன். அடுத்தது கோவிலில் நடந்தது. இப்போ மூன்றாவது கல்யாணம்... இதோட நிறுத்திக்கோங்கம்மா!" என்று அவர் செல்லமாக பேசினார்.
அதற்கு அவருடைய அப்பாவும் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்தார். "ஒரு முறை கோவிலுக்கு போனபோது அங்கேயே மாலை மாற்றி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அப்போது சாட்சி யாரும் இல்லையா என்று கேட்டாங்க. நாங்க 'எங்க மகன் இருக்கான்'ன்னு சொன்னோம். அந்த கல்யாணம் மறக்க முடியாதது" என்று சிரித்தபடியே கூறினார்.
ரசிகர்கள் கேள்விகள்
இந்த வீடியோ வெளியான பிறகு, பலரும் கமெண்ட்களில் "இவ்வளவு பெரிய பிள்ளைகள் இருக்காங்க... அடுத்தது அவர்கள் சினிமாவா? சீரியலா?" என்று கேள்விகள் கேட்டு வருகின்றனர்.
மொத்தத்தில், "மூன்றாவது கல்யாணம்" என்ற செய்தி முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும், அது உண்மையில் ஒரு குடும்பத்துக்குள் நடந்த இனிமையான, ஜாலியான தருணம் தான். சீரியலில் கடுமையான விஜயாவாக தெரியும் அணிலா ஸ்ரீகுமார், நிஜ வாழ்க்கையில் இப்படிச் சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த குடும்பத்துடன் இருப்பது ரசிகர்களுக்கு ஒரு புதுசான அனுபவமாகவே இருக்கிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications