ஸ்டாலின் படத்தில் நடிச்சேன்.. கலைஞர் என்னிடம் சொன்னது என்ன? சிறகடிக்க ஆசை நடிகை ஓபன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பார்வதி கேரக்டரில் நடிகை பாக்கியலட்சுமி நடித்து வருகிறார். இவர் தற்போது முதலமைச்சராக இருக்கும் மு.க ஸ்டாலின் நடித்த முதல் படமான "ஒரே ரத்தம்" என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
பொதுவாக பல நடிகைகள் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்து விட்டு திடீரென்று திருமணத்திற்கு பிறகு காணாமல் போய்விடுகிறார்கள். அதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து சின்னத்திரையின் மூலமாக மீண்டும் நடிக்க தொடங்குகிறார்கள். அந்த வகையில் ஒருவர்தான் நடிகை பாக்கியலட்சுமி. இவர் 1980 முதல் 2000 வரைக்கும் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாகவும் முக்கிய கேரக்டரிலும் நடித்திருக்கிறார்.
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று பழமொழிகளிலும் நடித்திருக்கிறார்.

அதுபோல பாக்கியலட்சுமி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உறவினர்தான் என்று பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். என்னுடைய அப்பாவின் நெருங்கிய குடும்பத்தை சார்ந்தவர்தான் ஸ்ரீதேவி அவரிடம் நான் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது அவர் இந்த வயதில் நடிக்க வேண்டாம் முதலில் படிப்பை முடி அதற்கு பிறகு நடிக்கலாம் என்று சொல்லி இருந்தார். ஆனால் அவருடைய அழகு மற்றும் அவருடைய நடிப்பை பார்த்துதான் நானும் நடிக்க வேண்டும் என்று அவருக்கே தெரியாமல் அவருடைய அப்பாவின் உதவியாய் நான் நடிக்க வந்து விட்டேன் என்று பாக்கியலட்சுமி பேட்டிகளில் பேசியிருக்கிறார்.
அதுபோல பாக்கியலட்சுமி தேவியின் திருவிளையாடல் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் நடிக்க தொடங்கினார். அந்த நேரத்தில் இவர் ஒல்லியாக இருந்ததால் கதாநாயகியாக வேண்டும் என்றால் இன்னும் கொஞ்சம் மெச்சூரிட்டி முகத்தில் தெரியவேண்டும் என்பதற்காகவும் உடல் எடையை கூட்ட வேண்டும் என்பதற்காகவும் ஸ்டீராய்டு ஊசி எடுத்துக்கொண்டதாகவும் அதனால் தனக்கு உடல் எடை அதிகரித்து விட்டது என்றும் பாக்கியலட்சுமி கூறியிருக்கிறார்.

அதுபோல தமிழில் 1987 ஆம் ஆண்டு வெளியான ஒரே ரத்தம் திரைப்படத்தில் இவரும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தாராம். அந்த திரைப்படம் தான் தற்போது முதல் அமைச்சராக இருக்கும் மு.க ஸ்டாலின் நடித்த முதல் திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது மு.க ஸ்டாலின் தன்னுடைய காட்சிகள் இல்லை என்றால் கூட சூட்டிங் ஸ்பாட்டிற்கு அடிக்கடி வருவாராம். அங்கு எல்லோரும் சரியாக சாப்பிடுகிறார்களா? எல்லாருக்கும் சாப்பாடு கிடைக்கிறதா? என்று எல்லோரிடமும் பேசி கேட்டுக் கொள்வார்.
ஸ்டாலின் சாரோட நடிக்க எங்களுக்கு கிடைத்த வாய்ப்பு பாக்கியம் என்று தான் சொல்வேன் என பாக்கியலட்சுமி சொல்லி இருக்கிறார். அதுபோல அந்த திரைப்படம் முடிந்ததும் கலைஞர் மு கருணாநிதி என்னையும் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை சீதாவையும் கூப்பிட்டு நீங்கள் இருவரும் அழகாக டான்ஸ் ஆடினீர்கள் என்று பாராட்டி இருந்தார். அதெல்லாம் இப்ப கூட மறக்கவே முடியாது என்று சிறகடிக்க ஆசை சீரியலில் பார்வதியாக நடித்துக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி பேசியிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications