சிறகடிக்க ஆசை: புருஷனுக்கு துரோகம் செய்த விஜயாவுக்கு சரியான தண்டனை! அண்ணாமலை எடுத்த நல்ல முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஏப்ரல் 24ஆம் தேதிக்கான எபிசோடில் விஜயாவும் மனோஜும் செய்த பித்தலாட்டங்கள் எல்லாமே மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்திருக்கிறது. இதனால் அண்ணாமலை யாரும் எதிர்பார்க்காத தண்டனையை விஜயா மற்றும் மனோஜ்க்கு கொடுக்கின்றார். அதே நேரத்தில் தன்னுடைய அப்பாவிற்காக முத்து புது பிரச்சனையில் சிக்கி இருக்கிறார் .என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயாவும் மனோஜும் குடும்பத்திற்கு தெரியாமல் சிந்தாமணி சொன்ன பைனான்சியரிடம் வீட்டு பத்திரத்தை கொடுத்து பணம் வாங்கி இருந்தனர். அதிலும் வீட்டு பத்திரம் பேங்கில் இருந்தபோது அங்கு அண்ணாமலை கையெழுத்தை போட்டு அந்த பத்திரத்தை திருப்பி பைனான்ஸியரிடம் கொடுத்திருந்தனர்.

இதுவரைக்கும் இந்த ரகசியத்தை மறைத்து வைத்திருந்த சிந்தாமணி இப்போது தன்னை முத்து ஜெயிலுக்கு அனுப்பியதால் மொத்த குடும்பத்தையும் பழிவாங்க வேண்டும் என்பதற்காக பைனான்ஸியரை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார். இதுவரைக்கும் சிந்தாமணி தான் ரொம்ப நல்லவங்க என்று நம்பிக் கொண்டிருந்த விஜயாவுக்கு இப்போதான் அடுத்தடுத்த பெரிய அதிர்ச்சியே கிடைத்திருக்கிறது.

Siragadikka Aasai serial Vijay TV

சிந்தாமணியின் சூழ்ச்சி

வீட்டிற்கு வந்த சிந்தாமணியும் பைனான்சியரும் மனோஜ் எங்ககிட்ட 40 லட்சத்துக்கு மேல பணம் வாங்கி இருக்கிறார், இப்ப இந்த பணத்தை தரலைன்னா வீட்டை ஏலத்தில் விட்டு எனக்கு பணத்தை எடுத்துக்குவேன் என்று சொன்னதும் அண்ணாமலை அதிர்ச்சியாகி நிற்கிறார். பிறகு முத்து எங்களுக்கு ஒரு வருஷம் டைம் கொடுங்க அதற்குள்ள நான் அந்த பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று கேட்கிறார்.

அதற்கு பைனான்ஸியர் உங்க அண்ணே உங்க அப்பாவுக்கு தெரியாம ஏமாற்றி கையெழுத்து போட்டு என்கிட்ட பணம் வாங்கினான். அதே மாதிரி நீயும் வேற யாருகிட்டயாவது பணம் வாங்க போறியா? என்று அசிங்கப்படுத்துகிறார். அதோடு உங்க அப்பா ஒரு ஏமாற்றுக்கார பிள்ளையையும், ஒரு ரவுடி பிள்ளையும் பெத்து வச்சிருக்கறாரு என்று மீண்டும் மீண்டும் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

முத்து எடுத்த முடிவு

இதனால் முத்துவும் அண்ணாமலையும் கோபப்படுகின்றனர். ஆனாலும் அண்ணாமலை நாங்க உங்களுக்கு எப்படியாவது பணத்தை தந்து விடுகிறோம் என்று எக்ஸ்கியூஸ் கேட்கிறார். அதற்கு பைனான்சியர் நீங்க இப்படி பேசுறதை பார்க்கும்போது எனக்கே பாவமா இருக்கு, ஆனால் ஒரு வருஷம் டைம் கொடுக்க முடியாது.. ஒரு மாதம் வரை டைம் கொடுக்கிறேன் அதற்குள் மொத்த பணத்தையும் கொடுத்தால் வீட்டு பத்திரத்தை கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.

பிறகு அங்கிருந்து எல்லாரிடமும் கையெழுத்து வாங்கிவிட்டு பைனான்சியர் போகிறார். இதுவரைக்கும் சிந்தாமணி மீது நம்பிக்கையிலிருந்து விஜயா இப்போதுதான் சிந்தாமணியின் சூழ்ச்சிகளை புரிந்து கொள்கிறார். பிறகு அண்ணாமலை மனோஜிடம் இந்த வீடு இதுவரைக்கும் 3 பங்கு, மூன்று பேருக்குமே உரிமை இருக்குன்னு சொல்லிட்டு இருந்தேன். ஆனால் இனி உனக்கு இந்த வீட்டில் உரிமை கிடையாது. உனக்கு இந்த வீட்டில் ஒரு சின்ன செங்கல் கூட கிடையாது இந்த வீடு முழுக்க முத்து முத்து ரவிக்கு மட்டும்தான் என்று திட்டுகிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

அண்ணாமலை போட்ட அடி

பிறகு விஜயா அண்ணாமலை சமாதானப்படுத்த போக அண்ணாமலை விஜயாவை அடித்து விடுகிறார். அதோடு இனிமே என்கிட்ட பேசாத மனோஜ் இவ்வளவு பெரிய தப்பு பண்ணிக்கிட்டே போக காரணமே நீதான் இன்னைக்கு உன் பிள்ளைக்காக என்னுடைய கையெழுத்து போட்டு என்னை சிக்கலில் சிக்க வச்சிருக்கே நாளைக்கு இதைவிட ஒரு பெரிய பிரச்சனை வந்துச்சுன்னா என்னை என்ன வேணாலும் நீ பண்ணுவ என்று பேச விஜயா அழுது கொண்டே இருக்கிறார்.

கடைசியாக முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஒரு மாதத்திற்குள் இந்த வீட்டு கடனை அடைத்து அப்பாவுக்கு நிம்மதி கொடுக்கணும் என்று முத்துவும் மீனாவும் ப்ளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+