மீனாவை பழிவாங்க துடிக்கும் விஜயா..மனம் மாறும் முத்து..கடைசியில் வைத்த செக்.. பரபரப்பான திருப்பம்
சென்னை: முத்து தன்னுடைய அண்ணன் மனோஜை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை மூடுகிறார்.
மனோஜ்க்கு சாதகமாக விஜயா முதல்முறையாக முத்துவிடம் நான் உன்னுடைய அம்மா என்று உரிமை கொண்டாடுகிறார்.

இத்தனை பிரச்சனைக்கும் காரணம் மீனா தான் என்று விஜயா பழிவாங்க நினைக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் 25ஆம் தேதிக்கான எபிசொட்டின் ஆரம்பத்தில் வீட்டிற்கு வந்த மனோஜிடம் முத்து பணம் கேட்க, மனோஜ் பணம் இல்லை என்று சொல்ல, இந்த ட்ராமா எல்லாம் என்கிட்ட போடாதீங்க என்று திட்டுகிறார். மனோஜ் காதலித்த பொண்ணு பணத்தை எல்லாம் திருடிட்டு போயிட்டா என்று சொல்ல, இது புது கதையா இருக்கு என முத்து கேட்க, அதற்கு அப்பா அவன் சொல்றது உண்மைதான் என நடந்த விஷயங்களை பற்றி சொல்கிறார். மேலும் மீனாதான் அவன் ஹாஸ்டலில் இருந்து விஷயத்தையும் கூறுகிறார்.
மொத்த பணமும் போய்விட்டதா? அப்படின்னா உனக்கு இந்த வீட்டுல இடம் கிடையாது என்று மனோஜை வெளியே தள்ளி முத்து கதவை பூட்டுகிறார். இதனால் விஜயா செய்வதறியாது திகைத்து நிற்க, சீக்கிரம் கதவை திறந்து உள்ள கூட்டிட்டு போமா வெளியே இருக்கவங்க பார்த்தா அசிங்கமாக போய்விடும் என்று மனோஜ் புலம்புகிறார்.
பிறகு முத்து ரூமுக்குள் கதவை சாத்திக் கொள்ள அங்கு வரும் விஜயா அவன் பாவம் டா கதவு திற என்று கெஞ்சி கேட்க முதலில் முத்து கதவை திறக்காமல் இருக்கிறார். பிறகு தயவு செய்து கதவை திறந்து விடுடா நான் அம்மா கேட்கிறேன் என்று கெஞ்ச, மனம் மாறும் முத்து கதவை திறந்து சாவி எடுத்துக் கொடுக்கிறார். பிறகு விஜயா கதவை திறந்து உள்ளே அழைத்து வருகிறார். அப்போது முத்து நில்லுடா என நிற்க வைத்து ஆறு மாதத்தில் எனக்கான பணத்தை தர வேண்டும் அப்படின்னா உனக்கு இந்த வீட்டில் இடம் இல்லனா கிளம்பி போயிட்டே இரு என்று சொல்ல விஜயா அவன் பணம் கொடுத்து விடுவான் என கூறுகிறார்.
அப்போது மனோஜ் நான் வேலைக்கு போய் பணம் கொடுத்து விடுகிறேன் என சொல்ல, உன்னை எல்லாம் நம்ப முடியாது அவனுக்கு நீங்க தான் கேரண்டி எனக்கு விஜயா மேல சத்தியம் பண்ணி சொல்லு என சொல்ல, இருவரும் ஷாக் அடைகின்றனர். பிறகு வேறு வழி இல்லாமல் மனோஜ் அம்மா மீது சத்தியம் செய்து ஆறு மாதத்தில் பணத்தை திருப்பி தந்து விடுகிறேன் என சொல்கிறார்.

பிறகு முத்து அவரை உள்ளே விடுகிறார். விஜயா மனோஜ்க்கு பால் கொண்டு போய் கொடுத்து சீக்கிரம் ஏதாவது ஒரு வேலைக்கு போயிட்டு அப்பதான் நீ பணம் கொடுப்பனு இவனுக்கு நம்பிக்கை வரும். அம்மா மேல சத்தியம் பண்ணி இருக்க என்று கூறுகிறார். பிறகு அந்தப் பூக்கடைகாரி நம்மளை இப்படி அசிங்கப்பட வச்சிட்டா இந்த வீட்டில் அவா எப்படி வாழ்கிறாள் என்று நானும் பார்க்கிறேன் என்று சவால் விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications