சிறகடிக்க ஆசை; பணம் வந்ததும் மனோஜ் இப்படி மாட்டிக்கிட்டாரே! ரோகிணிக்கு இந்த அவமானம் தேவையா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் 30ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ஜீவாவிடம் இருந்து 30 லட்சம் பணம் வாங்கிய மனோஜ் மற்றும் ரோகிணி அதை ரோகிணியின் அப்பா கொடுத்ததாக ஏமாற்ற முத்துவிற்கு சந்தேகம் வந்திருக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் ஜீவா கொடுத்த பணத்தை ஷாப்பிங் செய்துவிட்டு வீட்டிற்கு வந்த மனோஜ் மற்றும் ரோகிணி தனக்காக தன்னுடைய அப்பா 15 லட்சம் அனுப்புனதாக சொல்கிறார். மேலும் இன்னும் 15 லட்சம் வர இருப்பதாகவும் சொல்ல இதை நம்பிய விஜயா சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். விரதம் இருந்தது வீணா போகல வேற எதுவும் முடியறதுக்கு முன்னாடி நல்லது நடந்துடுச்சு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஆனாலும் உங்க அப்பா ஜெயில்ல இருக்கிறாரு எப்படி பணம் அனுப்புவார் என்று முத்து, அண்ணாமலை, ஸ்ருதியும் கேட்க அதற்கு ரோகிணி அப்பா ஜெயிலுக்கு போறதுக்கு முன்னாடி மாமா கிட்ட கொடுத்துட்டு போய் இருக்காரு என்று சொல்ல, அதற்கு முத்து அவருக்கு ஜெயிலுக்கு போறது முன்னாடியே தெரியுமா? என்று கேட்க ரோகிணி சமாளிக்கிறார்.
அப்போது காசு வந்த சந்தோஷத்தில் விஜயாவும் சேர்ந்து முத்துவின் வாயை அடைக்கிறார். ஆனாலும் விடாத முத்து மனோஜிடம் இது அப்பாவுக்கு சேர வேண்டிய பணம். அவர்கிட்ட கொடு நீ தூக்கிட்டு போன 27 லட்சத்தை கொடுத்திடுவேனு அம்மா மேல சத்தியம் பண்ணி இருக்க என்று சொல்ல, அண்ணாமலை இல்லை இது ரோகிணிக்கு வந்த பணம். அவங்க அப்பா அனுப்புனது அவங்களுக்கு தான் சொந்தம் என்று சொல்கிறார்.

அதற்கு மனோஜ் நான் இந்த பணத்தை வைத்து பிசினஸ் பண்ண போறேன். பிசினஸ் பண்ணி அந்த காசை தருகிறேன் என்று சொல்கிறார். மறுநாள் முத்து மீனாவிடம் இந்த பணம் வந்ததில்ல எனக்கு எதுவும் சந்தேகமா இருக்கு என்று சந்தேகப்பட்டு சொல்ல, அதற்கு மீனா இனி அவங்க விஷயத்துல தலையிடாதீங்க. அவங்க என்னமோ பண்ணட்டும் என்று சொல்கிறார்.
அதற்கு பிறகு எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க மீனா சாப்பாடு எடுத்து வைக்கிறார். விஜயா ரோகிணியை கூட்டி வந்து தனது கையாலே பரிமாறுகிறார். அப்போது அவருக்கு இரண்டு முட்டை வைக்க அதை பார்த்து முத்து பார்லர் அம்மா இன்னும் விரதத்தை முடிக்கலையே அதுக்கு முன்னாடி அவங்க எப்படி முட்டை சாப்பிடலாம்? என்று சொல்ல,
அதற்கு மனோஜ் முட்டை நான் வெஜ் கிடையாது. வெஜ் தான் என்று சொல்ல வழக்கம் போல மனோஜை முத்து நக்கல் அடிக்கிறார். அப்போது விஜயா நானும் மறந்துட்டேன் என்று சொல்லி ரோகிணிக்கு வைத்த முட்டையை எடுத்து விடுகிறார். அதோடு வெறும் சட்னியும் தோசையும் கொடுக்கிறார். அதைத்தொடர்ந்து விஜயா ரோகிணியின் அப்பா பணம் அனுப்பியதை சொல்லி மீனாவை குத்தி காட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications