ரசிகர்கள் கொண்டாடும் “சிறகடிக்க ஆசை” எபிசோடு.. சிலருக்கு தான் இப்படி அமையுது.. இதை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

இதில் முத்து மற்றும் மீனா குடும்ப வாழ்க்கையை தொடங்கி இருக்கும் நிலையில் அது குறித்து ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

siragadikka aasai serial August 23th promo and Episode Highlights

அதே நேரத்தில் முத்து மற்றும் மீனா நடவடிக்கையை பார்த்து விஜயா அதிர்ச்சியாகி இருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

நடிகர் கவினை தொடர்ந்து தோழியை மனைவியாக ஆக்கிய சின்னத்திரை நடிகர்.. குவியும் வாழ்த்துக்கள்
அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் மீனா முத்துவின் கையை பிடித்து எழுந்து அவரை கட்டிக் கொள்ள முத்துவும் மீனாவை கட்டிக்கொள்ள பிறகு இருவரும் கட்டுப்பாட்டை இழந்து தாம்பத்ய வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர்.

siragadikka aasai serial August 23th promo and Episode Highlights

அடுத்த நாள் காலையில் மீனா சந்தோஷமாக எழுந்து புடவையை சரி செய்ய, அப்போது புடவை முத்துவின் முதுகிற்கு கீழே மாட்டிக்கொள்கிறது. முத்து தான் புடவை பிடித்து இழுப்பதாக நினைத்து மீனா வெட்கப்பட்டு திரும்பி பார்க்க அங்கே நடந்ததை பார்த்து வெட்கப்பட்டு கொண்டே புடவை இழுத்து குளித்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வர இதை பார்த்து விஜயா குழப்பம் அடைகிறார்.

நேராக மீனா விளக்கேற்ற போக அதை தடுத்த விஜயா காலங்காத்தாலே தலைக்கு குளிச்சிட்டு விளக்கேத்த போற, உங்க அம்மா இத தான் சொல்லிக் கொடுத்தாளா? என்று கேள்வி கேட்க, எங்க அம்மா எல்லாம் சரியா தான் சொல்லிக் கொடுத்திருக்காங்க என்று மீண்டும் விளக்கேத்த போக, அதற்கு நீ விளக்கேற்றக்கூடாது ரோகிணி வந்து தான் விளக்கை ஏற்றனும் என்று விஜயா மீனாவை தடுக்க அதற்கு மீனா ஏன் நானும் இந்த வீட்டு மருமகள் தான் எனக்கும் வீட்டில் விளக்கு ஏத்த உரிமை இருக்கு என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்.

siragadikka aasai serial August 23th promo and Episode Highlights

அந்த நேரம் ரோகிணி கதவை திறந்து பல்லை துலக்கி கொண்டு வெளியே வர இதை பார்த்து மீனா இவங்கதான் விளக்கேத்தணுமா? என்று நக்கலாக சிரிக்க, விஜயா ரோகிணியை பார்த்து ஷாக் ஆகிறார். ரோகிணி நான் இப்பதான் எழுந்தேன் என்று சொல்ல நீ போய் சீக்கிரம் ரெடி ஆகிட்டு வாமா என்று விஜயா அனுப்பி வைக்கிறார்.

அதற்கு மீனா இப்பவும் அவங்க தான் விளக்கு ஏத்தனுமா? மாமா வாக்கிங் போயிட்டு வர நேரமாகுது. விளக்கேற்றாமல் இருக்கிறதை பார்த்தா கோபமாக சத்தம் போடுவார் என்று மிரட்ட, அதற்கு விஜயா சரி நீயே போய் ஏத்து என்று சொல்ல, மீனா சந்தோஷத்தோடு விளக்கேற்ற அதை பார்த்த விஜயாவுக்கு இவங்க ரெண்டு பேருக்குள்ள நடக்க வேண்டியது எல்லாம் நடந்து இருக்குமோ என்று குழப்பம் அடைகிறார்.

siragadikka aasai serial August 23th promo and Episode Highlights

அடுத்ததாக மீனா கர்ப்பமாகி பிரசவ வழியில் ஹாஸ்பிடலில் அழைத்து சென்று அவருக்கு நான்கு குழந்தைகள் அடுத்தடுத்து பிறக்க, அந்த குழந்தைகளைக் கொண்டு முத்து கையில் நர்ஸ் கொடுத்ததும் எனக்கு நான்கெல்லாம் வேண்டாம். எனக்கு நிறைய கடன் இருக்கு. எனக்கு நிறைய கமிட்மெண்ட் இருக்கு என்று முத்து சத்தம் போட, அந்த நேரம் வரும் அண்ணாமலை முத்துவின் சத்தம் கேட்டு ரூமிற்கு வர இதை பார்த்து மீனா வெட்கப்பட்டு நிற்கிறார். பிறகு அண்ணாமலை மீனா விடம் முத்துவை எழுப்ப சொல்ல மீனா எழுப்புகிறார்.

முத்து எழுந்ததும் நீ அதுக்குள்ள டிஸ்சார்ஜ் ஆகிட்ட?, அப்பா நீ எப்ப ஹாஸ்பிடலுக்கு வந்த? என்று இருவரையும் மாறி மாறி கேள்வி கேட்க அண்ணாமலை கனவு கண்டியா என்று, முத்துவுடன் கேட்க முத்து தான் கண்ட கனவை பற்றி அண்ணாமலையிடம் சொல்கிறார். பிறகு அண்ணாமலை வெளியே போனதும் மீனாவிடம் இனி இந்த மாதிரி தப்பு நடக்காது ஏதோ தெரியாம நடந்துச்சு என்று கேட்டு பாத்ரூமுக்குள் ஓடிவிடுகிறார். பிறகு மீனா வெட்கப்பட்டு கொண்டே வெளியே வர விஜயா மணி என்ன ஆச்சு இன்னும் காபி கொடுக்கல என்று சத்தம் போட மீனா எல்லோருக்கும் காபி கொண்டு வந்து கொடுக்கிறார்.

siragadikka aasai serial August 23th promo and Episode Highlights

சந்தோஷத்தில் மீனா சர்க்கரையை அள்ளி போட்டு விட்டதால் அது குடித்து பார்த்த விஜயா என்ன இப்படி சர்க்கரையை கொட்டி வச்சிருக்கே என்று சத்தம் போட, ரவியும் அண்ணாமலையும் இல்லையே சரியாதான் இருக்கு என்று சொல்கின்றனர். அண்ணாமலை அப்போ உனக்கும் அது வந்துடுச்சா என்று கேட்க விஜயா அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.

தற்போது இந்த எபிசோட்டை அதிகமான ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். காரணம் பொதுவாக சீரியலில் லீட் ரோலில் நடிக்கும் கதாநாயகி கதாநாயகன் கடைசி வரைக்கும் சேர்வது போன்று வைக்கவே மாட்டார்கள் என்று கருத்து நிலவி வருகிறது. இந்த நிலையில் இவ்வளவு சீக்கிரமாக இந்த சீரியலில் இவர்கள் இருவரும் சேர்ந்து விட்டார்களே? என்றும் இதை எதிர்பார்க்கவில்லையே என்றும் பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+