குடிச்சிட்டு உண்மையை உளறிய மலேசிய மாமா.. பரிதாப நிலையில் மனோஜ்.. கோபத்தில் விஜயா எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி 27 ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் மலேசியா மாமாவாக நடித்துக் கொண்டிருக்கும் பிரவுன் மணியிடமிருந்து உண்மையை பெற வேண்டும் என்பதற்காக முத்துவை குடிக்க வைக்க அதனால் பிரச்சனை ஏற்படுகிறது.
ரோகினியின் மாமா தான் குடித்ததோடு இல்லாமல் மனோஜ்க்கும் ஊற்றி விட மனோஜ் தெருவில் விழுந்து கிடக்கிறார். அதைத்தொடர்ந்து வீட்டில் புது பிரச்சனை வெடிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இன்றைய எபிசோடு முழுக்க கலகலப்பாகவும் இருந்தது. என்ன நடக்குது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மலேசியா மாமாவிடம் முத்துவும் செல்வமும் சரக்கு கேட்க அதற்கு அவர் நான் 5 பாட்டில் வாங்கிட்டு வந்தேன் என்று சொல்ல சரி வாங்க வீட்டுக்கு போய் எடுத்துட்டு வந்து விடலாம் என்று செல்வம் கேட்க அதற்கு அவர் நான் வெளிநாட்டிலிருந்து இரண்டு பாட்டில் தான் எடுத்துட்டு வரணும் ஆனா அஞ்சு பாட்டில் எடுத்துட்டு வந்ததால இன்கம் டேக்ஸ் ஆபிஸ் புடிங்கிட்டாங்க என்று சொல்ல,

அதற்கு செல்வம் என்னது இன்கம் டேக்ஸ் ஆபிஸ்ல இதெல்லாம் புடுங்குனாங்கலா என்று கேள்வி கேட்க, அதற்கு இல்ல டங்கு ஸ்லிப் ஆயிடுச்சு. கஷ்டம் ஆபிஸ்ல புடிங்கிட்டாங்க என்று சொல்கிறார். அதோடு தான் அஞ்சு பாட்டில் யாருக்கெல்லாம் கொண்டு வந்தேன் என்று கணக்கு சொல்லிக் கொண்டிருக்கும்போது முத்துவின் அப்பாவுக்கும் சேர்த்து தான் பாட்டில் வாங்கிட்டு வந்ததாக சொல்ல, அதற்கு முத்து கோபப்படுகிறார்.

எங்க அப்பா ரொம்ப நியாயமானவரு அவர் வேலையை மட்டும்தான் உண்மையா நேசிச்சாரு. அதனால இந்த கண்டம் கருமாந்திரத்தை எல்லாம் அவரு யோசிச்சு கூட பாக்கல என்று திட்டி விடுகிறார். பிறகு சரி அதை விடுங்க என்று பிரவுன் மணி வெளிநாட்டு சரக்கை விட நம்ம ஊர் சரக்கு தான் ரொம்ப அருமையா இருக்கும் அது கிடைக்குமா என்று சொல்ல, அதற்கு முத்து சரி ஆடு தானா சிக்கிடுச்சு என்று சொல்லி சரக்கு ஏற்பாடு செய்ய அங்கு தண்ணீர் கலக்காமல் மடக்க மடக்கு என்று பிரவுன் மணி குடிக்கிறார்.

அப்போது மனோஜ் இதெல்லாம் வேணாம் மாமா வாங்க போலாம்னு எடுத்து ரோகிணி திட்டுவார் என்று சொல்ல அதற்கு நான் பாப்பா கிட்ட சொல்லிக்கிறேன் என்று மனோஜையும் கூப்பிட்டு வைத்து அவருக்கு வலுக்கட்டாயமாக சரக்கை ஊற்றி விடுகிறார். அதனால் முத்து எதுக்குயா அவனுக்கு ஊத்துனா என்று திட்டுகிறார். அப்போது மனோஜ் தடுமாறி கொண்டு அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பி விட அந்த நேரத்தில் அங்கு ரெண்டு நபர்கள் வருகின்றனர்.

அப்போது பிரவுன் மணி அதாவது ரோகிணியின் மலேசியா மாமாவாக நடித்துக் கொண்டிருக்கிறாரே அவர்தான் அவர் தான் குடித்த டம்ளரை கசக்கி அந்த நபர்கள் மீது தூக்கி எறிய அவர்கள் இருவரும் பிரவுன்மணியை அடிக்கப் போகின்றனர். அதற்கு கோபமான பிரவுன் மணி நீ என்னையே அடிச்சிடுவியா? நான் யார் தெரியுமா? என் ஊர் என்ன தெரியுமா என்று உண்மையை உலர அப்போது முத்து சண்டை வராமல் தடுக்க பார்க்கிறார்.
ஆனால் செல்வம் இங்க வா அவரே உண்மையை உலர ஆரம்பிச்சுட்டாரு என்று பிடித்து இழுத்து வைத்துக்கொண்டு சொல்லுங்கள் மாமா என்று அவரை உசுப்பேத்திக் கொண்டிருக்கிறார். அப்போது மீண்டும் நான் யார் தெரியுமா என்னுடைய ஊர் என்ன தெரியுமா என்று பேசியபடியே பிரவுன் பண்ணி கடைசியில் மட்டை ஆகிவிடுகிறார்.
பிறகு இவரை இங்கே வச்சுட்டு இருந்தா சரியா வராது வா வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் என்று பிரவுன்மணியை கை தாங்கலாக முத்துவும் செல்வமும் கூட இருவரோடு கூட்டிட்டு வருகின்றனர். அந்த நேரத்தில் போதையில் தடுமாறி வந்த மனோஜ் தெருவில் தெரு ஓரத்தில் விழுந்து கிடக்கிறார். அவரையும் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வருகின்றனர். வீட்டிற்குள் என்ன நடக்குமோ என்ற பயத்திலேயே முத்து இருவரையும் வீட்டிற்கு கூட்டிட்டு வருகின்றனர்.

வரும் வழியில் மனோஜும் பிரவுன் மணியும் செய்யும் அலப்பறை அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்ததும் மனோஜ் அங்கிருந்த சேரில் உட்கார வைக்க மனோஜ் இருந்த சைஸை பார்த்து விஜயாவும் ரோகிணியும் பதறிப்போய் மனோஜ் என்னாச்சு என்ன ஆச்சு என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மனோஜ் எதுவுமே பேசாமல் அப்படியே சிலை போல இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications