சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன அதிர்ச்சி செய்தி! விஜயா மீது போலிஸ் கம்பளைண்ட், மிரட்டும் முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் நான்காம் தேதிக்கான எபிசோடில் ரோகிணிக்காக சப்போர்ட் செய்து பேசி முத்துவும் மீனாவும் அசிங்கப்படுகிறார்கள். அதே நேரத்தில் விஜயா மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தால் என்ன பிரச்சனை வரும் என்று முத்து பயம் காட்டுகிறார் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜிடம் ரவி முத்து இருவரும் ரோகிணிக்காக சப்போர்ட் பண்ணி பேச அதற்கு மனோஜ் நீங்க என்ன பிளான் பண்றீங்கன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு, அம்மா மட்டும்தான் என் மேல இந்த வீட்டில பாசமா இருக்காங்க அவங்கள பிரிக்க தான நீங்க இந்த மாதிரி பேசுறீங்க என்று சொன்னதும் முத்து டென்ஷன் ஆகி மனோஜை அடிக்கப் போகிறார்.

துரத்திவிட்ட முத்து
பிறகு அவரை அங்கிருந்து துரத்தி விட்டு இவனை கூப்பிடவே வேண்டான்னு சொன்னா யாராவது கேட்டீங்களா என்று சொல்ல ஸ்ருதி முத்துவுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். பிறகு ரவியும் ஸ்ருதியும் போன பிறகு முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நானும் உங்ககிட்ட ஏடிஎம் கார்டு கொடுத்து விடவா என்று மீனா கேட்க அதற்கு முத்து நான் ஒரு ஐடியா யோசித்து வைத்திருக்கிறேன். நான் ஏடிஎம் கார்டு கேட்கும் போது மட்டும் என் கையில் கொடு என்று சொல்கிறார்.
அண்ணாமலைக்கு தெரிந்த உண்மை
மறுநாள் காலையில் அண்ணாமலை உக்கார்ந்து இருக்கிறார். அப்போது விஜயாவும் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறார் அங்கு வரும் முத்து மீனா என்று சத்தமாக கூப்பிட்டு ஏடிஎம் கார்டு கேட்கிறார். மீனா எதுக்கு என்று கேட்க முதலில் கொடு என்று முத்து அதட்டி கேட்கிறார். உடனே மீனா ஏடிஎம் கார்டு கொண்டு வந்து கொடுக்க என்கிட்ட கொடுக்கிற அம்மாகிட்ட கொடு என்று சொன்னதும் அண்ணாமலை எதுக்கு மீனாவோட ஏடிஎம் கார்டு விஜயா கிட்ட கொடுக்கணும் என்று கேட்கிறார்.

போட்டு கொடுத்த முத்து
இந்த வீட்டோட நிதி அமைச்சர் அம்மா தான். ரோகிணி ஏடிஎம் கார்டு வாங்கி வச்சிருக்காங்க என்று சொல்லி கொடுக்கிறார். அதற்கு அண்ணாமலை சம்பாதிக்கிறவங்க உரிமை அதை எதுக்கு நீ பறித்து வைத்திருக்கிறா? இந்த வீட்டில் கீழே வாடகைக்கு இருக்கிறவங்க கிட்ட பணம் நான் வாங்குகிறேன் என்று சொன்ன நான் இதுவரைக்கும் உன்கிட்ட கேட்டு இருக்கேனா? அப்படி இருக்கும்போது நீ எதுக்காக வாங்கி வச்சிருக்க என்று திட்டிக் கொண்டிருக்கும் போது மனோஜ் இப்போ அம்மா என்ன தப்பு பண்ணிட்டாங்க என்று கேட்கிறார்.
ரோகிணி கொடுத்த அதிர்ச்சி
இதையெல்லாம் பார்த்து ரோகிணி எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருக்கிறார். அப்போது மீனா ஏற்கனவே வீட்டு செலவுக்கு காசு கொடுக்கிறார்கள் அதையும் மீறி கார்டு வாங்கி வச்சது தப்புதான் என்று சொல்ல ரோகிணி வந்து ஆன்ட்டி மேல எந்த தப்பும் கிடையாது, ஆன்ட்டி செஞ்சதுதான் சரி. இது ஒன்றும் இல்லாத பிரச்சனை இதை பெரிசு படுத்தி சிலர் குளிர் காய நினைக்கிறாங்க என்று ரோகிணி சொன்னதும் விஜயா இப்பவாச்சு எல்லாருக்கும் புரிஞ்சுதா? இனி எல்லாரும் அவங்கவங்க வேலையை பாருங்க பஞ்சாயத்து முடிஞ்சது என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
அசிங்கப்பட்ட முத்து
அப்போது முத்து இவங்களுக்கு போய் பேச வந்தேன் பாரு என்ன சொல்லணும்... பார்லர் அம்மா உனக்கு ஒரு பெரிய கும்பிடு என்று சொன்னதும் ரோகிணி உள்ளே சென்று விடுகிறார். முத்து மீனாவிடம் என் மூஞ்சில காரி துப்பு மீனா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அண்ணாமலையிடம் என்னை கன்னத்தில் இரண்டு அறை விடுப்பா, ஸ்ருதி நீ என்ன இங்கிலீஷ்ல திட்டு என்று சொல்ல அதற்கு அண்ணாமலை இந்த விஷயத்தை பெருசு பண்ணாத விடு ரோகிணியே சரின்னு சொல்லும்போது நம்ம ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லிவிடுகிறார்.
ஸ்ட்ரிக்ட் ஆபிசர்
மறுபக்கத்தில் முருகன் பைக்கில் வந்து கொண்டிருக்கும்போது டிராபிக் போலீஸ் அருணை பார்த்து வண்டிய நிறுத்தி தனக்கு லவ் சக்ஸஸ் ஆயிடுச்சு என்று சொல்ல அதற்கு அருண் பதிலுக்கு பைன் போடுகிறார். நீ ஹெல்மெட் போடாம வந்து இருக்கீங்க பைனை கட்டுங்க என்று சொன்னதும் நாம ரெண்டு பேரும் நண்பர்கள் இப்படி நீங்க பேசலாமா என்று கேட்க, முதலில் ரூல்ஸை மதிக்கணும் அதுக்கப்புறம் தான் எல்லாமே என்று அருண் ஸ்ட்ரிக்ட்டாக பேச முருகன் பைனை கட்டிவிட்டு கிளம்புகிறார்.
அருண் போட்ட பைன்
அதைத் தொடர்ந்து மீனா தன்னுடைய பிரண்டு ஒருவருடன் பைக்கில் வந்து கொண்டிருக்கும் போது இன்னொரு பெண் வந்து, தன்னை பக்கத்தில் அந்த தெருவில் இறக்கிவிடும்படி சொல்கிறார் முதலில் மீனா முடியாது என்று சொன்னாலும் அந்தப் பெண் கெஞ்சி கொண்டிருக்கிறார். அதனால் மீனா அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு வருகிறார். அந்த தெருவில் டிராபிக் போலீஸ் நிற்கிறார். அவர் இவர்கள் மூன்று பேரும் ஒரே பைக்கில் வந்ததற்காக ஃபைன் போடுகிறார்.

கோபப்பட்ட மீனா
அப்போது முத்து பற்றி அருண் பேசியதும் மீனா கோபப்பட்டு போலீஸ்காரரை திட்டிவிட்டு பைனை கட்டிவிட்டு கிளம்புகிறார். அடுத்ததாக அந்த இடத்திற்கு சீதா வருகிறார். அவரைப் பார்த்ததும் அருண் நான் டிராப் பண்றேன் என்று சொல்ல, அதற்கு சீதா வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications