சிறகடிக்க ஆசை: அண்ணாமலையிடம் வீடியோ காலில் சிக்கிய ரோகிணி.. உளறிய க்ரிஷ்.. முத்துக்கு தெரிந்த உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி 22ஆம் தேதிக்கான எபிசோடில் க்ரிஷ் ஸ்கூலில் பேரன்ட்ஸ் மீட்டிங் நடக்கும் நிலையில் வீடியோ காலில் ரோகிணி பேச அதை அண்ணாமலை பார்த்து விடுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அருண் காய்கறி கடையில் காய் வாங்கிக் கொண்டு இருக்க, அங்கு வந்த முத்து கீரை இருக்கா என்று கேட்கிறார். கடைக்காரர் இல்லை என்று சொல்லிவிட்டு சீக்கிரம் வரும் என்று சொல்கிறார். அப்போது முத்து அருணி டம் வம்பு இழுப்பது போல பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் கோபமான அருண் முத்துவின் சட்டையை பிடித்து இழுத்து கடையை விட்டு வெளியே கூட்டிக்கொண்டு வருகிறார்.

Siragadikka aasai serial vijay tv

அப்போது முத்து அவரைப் பிடித்து தள்ளிவிட அருண் கீழே விழப்போகிறார். உடனே முத்து அவரைப் பிடிக்க போகும்போது சட்டை கிழிந்து விடுகிறது. இதை அங்கு இருக்கும் மக்கள் எல்லோரும் பார்க்கிறார்கள். இதனால் அருண் டென்ஷனாக, முத்து நீ கீழ விழக்கூடாதுன்னு தான் நான் புடிச்சேன். நீ சட்டையை பிடிக்காமல் இருந்திருந்தால் எதுவும் நடக்காது என்று சொல்லிவிட்டு போகிறார்.

மறுபக்கத்தில் மீனா இட்லியும் வடகறியும் வைத்து சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்கும் போது அண்ணாமலை எனக்கு இன்னொரு இட்லி வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகிறார். அந்த நேரத்தில் விஜயா வந்து அவருக்கு எதுக்கு கூட ஒரு இட்லி வச்ச எப்பவுமே மூணு தான சாப்பிடுவாரு என்று கேட்டதும், முத்து எல்லாரும் புருஷன் கூட அதிகமா சாப்பிடணும் என்று நினைப்பாங்க இவங்க மட்டும் தான் வித்தியாசமா நினைக்கிறாங்க என்று கேட்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அதற்கு அண்ணாமலை வயசாயிடுச்சு இல்ல அதனால நான் நிறைய சாப்பிடக்கூடாதுன்னு நினைக்கிறா என்று சப்போர்ட் செய்கிறார். அதைத் தொடர்ந்து விஜயா மீனாவிடம் இன்னைக்கு என்ன சமைச்சு இருக்க நான் இனி டயட் ஃபாலோ பண்ணுறேன். அதுக்கு தகுந்த மாதிரி தான் சாப்பிடுவேன் என்று சொல்லிவிட்டு நான் ப்ளாக் காபி போட்டு குடிக்கிறேன் என்று கிச்சனுக்கு வருகிறார்.

சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு புது பெண்ணால் வரும் ஆபத்து.. மனம் மாறும் மனோஜ்.. முத்து கோபத்தில் செய்த செயல்
அப்போது ரவியும் ஸ்ருதியும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். கிச்சனுக்கு வந்த விஜயா வடகறி வாசத்தையும் இட்லியையும் பார்த்து இதை எப்படி மிஸ் பண்ண முடியும் என்று அதை திருட்டுத்தனமாக கிச்சனில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இங்கு வந்த மனோஜ் என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்க, நானும் டயட்டு இருக்கலாம் என்று நினைத்தேன்.

ஆனால் இந்த மீனா இருக்க விடமாட்டா போல என்று சொல்ல அதற்கு மனோஜ் கவலையை விடுங்கம்மா எனக்கு தெரிஞ்ச டயட்டீஷன் ஒருத்தங்க இருக்காங்க அவங்க கிட்ட சொல்றேன் என்று மனோஜ் சொல்கிறார். பிறகு நான் சாப்பிட்ட விஷயத்தை வீட்டில் யாரிடமும் சொல்லாத பிறகு எல்லாரும் என்னை கிண்டல் பண்ணுவாங்க என்று விஜயா சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அடுத்ததாக அண்ணாமலை ஸ்கூலுக்கு போயிட்டு வரேன் என்று கிளம்ப, ரோகிணி நீங்க எப்பவுமே புதன்கிழமை தான போவீங்க இன்னைக்கு என்ன போறீங்க என்று கேட்க அதற்கு அண்ணாமலை இன்னைக்கு பேரன்ட்ஸ் மீட்டிங் இருக்கு அதனால வர சொல்லி இருக்காங்க என்று கிளம்புகிறார்.

சாப்பாட்டை தடுக்க முயற்சி! வெளியே அனுப்பிடாதீங்க.. மகாநதி சீரியல் நடிகை வெளியிட்ட திடீர் பதிவு
உடனே முத்து நான் உங்களை விடுறேன் என்று சொல்லிவிட்டு மீனா நீ கோவிலுக்கு போகணும்னு சொன்னியேவா போயிட்டு வந்துரலாம் என்று வெளியே கூப்பிட்டு விட்டு மீனா விடம் மட்டும் நீ க்ரிஷை பார்க்கணும்னு சொன்னியே வா பாத்துட்டு வந்துடலாம் என்று சொல்கிறார்.

பிறகு மீனாவும் கிளம்புகிறார். அடுத்ததாக அண்ணாமலையை ஸ்கூலில் விட்டு விட்டு க்ரிஷை பார்ப்பதற்காக முத்துவும் மீனாவும் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது க்ரிஷ் அவருடைய பாட்டியோடு அங்கு வருகிறார். ரோகிணி அம்மா முத்து மற்றும் மீனாவை பார்த்ததும் இவங்க வேற இருக்காங்களே எப்படி சமாளிக்க என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

மீனா ரோகிணி அம்மாவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க அதற்கு அவர் நான் மிஸ்ஸை பாக்கணும் போயிட்டு வரேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். அதை தொடர்ந்து ரோகிணி வித்யா வீட்டில் மாறுவேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார். வித்யா இது மாறுவேஷமா விக் மட்டும் வைத்தால் மாறுவேஷமாகிடுமா என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்.

ஆனாலும் விக் வைத்து கண்ணாடி போட்டு மாஸ்க் எல்லாம் அணிந்து வித்தியாசமாக ரோகிணி மாறி வீடியோ காலில் வருகிறார். பேரன்ட்ஸ் மீட்டிங் நடக்கும் இடத்தில் அண்ணாமலை உட்கார்ந்திருக்கிறார். அப்போது வீடியோ காலில் கூட கூலிங் கிளாஸ் மாஸ்க்கும் போட்டுக்கொண்டு ரோகிணி பேசுவதை பார்த்து அங்கிருக்கும் டீச்சர் வீடியோ காலில் கூட இப்படியா வருவீங்க என்று கேட்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அதற்கு ரோகிணி இங்க உள்ள ரூல்ஸ் படி இப்படித்தான் வரணும் என்று சமாளிக்கிறார். அண்ணாமலை ரோகிணியின் வாய்ஸை கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக வித்தியாவை வைத்து ரோகிணி பேச வைக்கிறார். அப்போது அண்ணாமலைக்கு ரோகிணி மீது சந்தேகம் வருகிறது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+