சிறகடிக்க ஆசை: கிரிஷ் அம்மா நான்தான்! உளறிய ரோகிணி.. அதிர்ச்சியில் மயக்கம் போட்ட விஜயா! மனோஜ் கேட்ட கேள்வி
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூலை 22ஆம் தேதிக்கான எபிசோடில் கிரிஷிடம் உன்னுடைய அம்மா யார் என்று கேட்க, அவன் கல்யாணி என்று சொல்கிறார். அதே நேரத்தில் ரோகிணி கல்யாணி என்று கையெழுத்து போடுவதை பார்த்து மனோஜ் கேள்வி கேட்கிறார். அதுபோல விஜயாவிற்கு முக்கியமான விஷயம் ஒன்று தெரிய வருகிறது இதனால் அவர் அதிர்ச்சியில் மயக்கம் போடுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில் நடக்கவிருக்கும் சில முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்க்கலாம். ரோகிணி தன்னுடைய தாயிடம், முத்துவை உடனடியாக கிரிஷை அழைத்து வரச் சொல்லும்படி கூறுகிறார். அதற்கு அவரது அம்மா இன்னும் பத்து நாட்கள் கிரிஷ் இங்கே தான் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அவனை என்ன செய்வது என்று கேட்கிறார். அதற்கு ரோகிணியோ நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார்.

நள்ளிரவில் கிரிஷை எழுப்பி தனது அறைக்கு அழைத்து வருகிறார் ரோகிணி. யாரிடமும் அம்மா பற்றி எதுவும் சொல்லக் கூடாது என்று கிரிஷிடம் கூறுகிறார். கிரிஷ் அம்மா நான் உங்களுடனே படுத்துக்கொள்கிறேன் என்று சொல்ல, மீனா கிரிஷை தேடி வருகிறார். கதவு மறைவில் நின்று கிரிஷை போகச் சொல்லி விடுகிறார் ரோகிணி. கிரிஷும் சமாளித்து விடுகிறான். மீனா தண்ணீர் எடுத்து வரச் சொல்லி கேட்கிறார். என்ன வேண்டும் என்றாலும் என்னிடம் கேள் என்று மீனா கிரிஷிடம் கூறுகிறார்.
மறுநாள் காலையில் முத்துவும் மீனாவும் கிரிஷிற்கு சாப்பாடு ஊட்டுகிறார்கள். கிரிஷை உட்கார வைத்து குடும்பத்தினர் அவன் அம்மா பற்றி கேட்கிறார்கள். ரோகிணியைப் பற்றி வெளியே சொல்லாமல் கிரிஷ் சமாளிக்கிறான். ஒரு கட்டத்தில் கிரிஷின் பள்ளிக்கு லீவ் லெட்டர் எழுதி கொடுக்கிறார் ரோகிணி. அதில் கல்யாணி என்று கையெழுத்திடுகிறார். மனோஜ் அதை வாங்கிப் பார்க்கிறார். ரோகிணி உன் பெயரை எழுதி கையெழுத்து போட்டு இருக்கிறாயே என்று கேட்கிறார். அவங்க அம்மா எழுதின மாதிரியே இருக்கணுமே என்று சமாளிக்கிறார் ரோகிணி.
விஜயா நடன வகுப்பில் ரதி திடீரென மயங்கி விழுகிறார். மருத்துவரை அழைத்து வந்து பரிசோதிக்கிறார்கள். அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறார். விஜயா அதிர்ச்சியடைகிறார். பின்னர் வெளியில் வந்த விஜயா மயங்கி விழுகிறார். ரதி தன்னுடைய காதலனிடம் நான் அப்போதே சொன்னேன். நீதான் கேட்கவில்லை. இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கூறிவிட்டு செல்கிறாள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications