சிறகடிக்க ஆசை: பார்வதி சொன்ன ரகசியம்.. முத்து போட்ட பிளான்.. உதவிக்கு வரும் அருண்! சிக்கும் விஜயா!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் 26 ஆம் தேதிக்கான எபிசோடில் விஜயா மற்றும் சிந்தாமணி பற்றி முக்கிய விஷயத்தை பார்வதி முத்துவிடம் சொல்கிறார். அதனால் முத்து புது ப்ளான் போட்டு இருக்கிறார். அதற்கு பார்வதி உதவி செய்வதாக கூறி இருக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சீதா அருணுக்கு ஃபோன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது இன்னும் பணம் தருவதற்கு சில நாட்கள் ஆகும் என்று சீதா சொன்னதும் நான் இப்போ உன்கிட்ட பணத்தை பற்றி பேசல, ஆனா உங்க அக்கா கிட்ட இருந்து பணத்தை யார் திருடிட்டு போனாங்கன்னு நான் கண்டுபிடிக்க சொல்றேன் என்று சொல்ல, அதற்கு வேண்டாம் எங்க மாமா பாக்குறாங்க ஏற்கனவே போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கு நீங்க போலீஸ் ட்ரைனிங் முடிச்சிட்டு வாங்க என்று சொல்ல, எனக்கு நீ மட்டும் இல்ல உன்னுடைய குடும்பமும் முக்கியம். நான் அதற்காக உதவி செய்கிறேன் என்று அருண் சொல்லி இருக்கிறார்.

முத்துவின் நாடகம்
அதை தொடர்ந்து முத்து பார்வதி வீட்டுக்கு சென்ற பார்வதி இடம் மீனாவின் நிலைமையை சொல்லி அழுவது போன்று நடிக்கிறார். மீனாவை இந்த மாதிரி ஒரு நிலைமையில் பார்க்கவே முடியல. அவளுடைய பணம் மட்டுமல்ல அவளுடைய தங்கச்சி நண்பரிடம் இருந்து வாங்கி கொடுத்த பணமும் போயிடுச்சுன்னு சொல்றா என்ன பண்றதுன்னு தெரியல என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது சிந்தாமணியும் விஜயாவும் தான் மீனாவை பழிவாங்கனும்னு பேசிகிட்டு இருந்தாங்க என்ற விஷயத்தை பார்வதி சொல்கிறார்.
உண்மையை சொன்ன பார்வதி
இதனால் முத்துவுக்கு சிந்தாமணி பற்றிய சூழ்ச்சிகள் தெரிய வருகிறது. இதனால் சிந்தாமணி விஷயத்தில் நான் ஒரு முக்கிய முடிவு எடுத்து இருக்கிறேன். நீங்க நாளைக்கு மட்டும் அவங்களை இங்க வர வச்சு ஒரு மூணு மணி நேரம் வீட்டை விட்டு வெளியே போகாம பாத்துக்கோங்க என்று சொல்ல, பார்வதி சரி என்று சொல்கிறார். பிறகு முத்து செல்வத்திடம் நாம சந்தேகப்பட்ட மாதிரியே தான் பார்வதி ஆண்டியும் சொல்றாங்க. இதனால இதுக்கு நாம வேற ஒரு பிளான் பண்ணனும் என்று தன்னுடைய வீட்டிற்கு செல்வத்தை வர சொல்கிறார்.
மீனா செய்த உதவி
மறுபக்கத்தில் மீனா ரோட்டில் போய்க்கொண்டிருக்கும் போது ஒரு ஆட்டோ டிரைவர் மீனாவின் வண்டியை நிறுத்தி நான் ஒருத்தங்கள சவாரிக்கு கூட்டிட்டு வந்தேன் அவங்க ஹாஸ்பிடலுக்கு போகணுமாம் ஆனால் வண்டி திடீரென்று ரிப்பேர் ஆகி நின்னுடுச்சு. அவங்கள கூட்டிட்டு போக முடியுமா என்று கேட்க, மீனாவும் சரி என்று அருணின் அம்மாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வருகிறார். அப்போது சீதா அருண் அம்மாவுக்காக காத்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் மீனா அங்கு வந்ததை பார்த்ததும் அப்போது அருண் அம்மா சீதாவிடம் இந்த பொண்ணுதான் என்னை கூட்டிட்டு வந்தாங்க என்று மீனாவை அறிமுகப்படுத்த, சீதாவை பற்றி மீனாவிடமும் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.
சீதா சொன்ன விஷயம்
உடனே சீதா நான் எனக்கு ஒரு அக்கா இருக்காங்கன்னு சொன்னேனே அது இவங்கதான் என்று சொல்ல, உங்க குடும்பத்துல எல்லாருமே மத்தவங்களுக்கு உதவுகிற மனப்பான்மை இருக்கு. உங்க அம்மா அப்பா நல்லா வளர்த்திருக்காங்க என்று சொல்ல, சீதா ஒரு நர்ஸிடம் சொல்லி உள்ளே அழைத்து செல்ல சொல்கிறார். பிறகு மீனாவும் சீதாவும் பேசுகிறார்கள். அப்போது என்ன சீதா ஓவர் அக்கறையாய் இருக்கு என்று மீனா கேட்க, அதற்கு சீதா நான் எனக்கு ஒருத்தங்க வேண்டப்பட்டவங்க இருக்காங்கன்னு சொன்னாங்களே அவங்களோட அம்மா தான் இது என்று சொல்கிறார்.
பீல் பண்ணும் மீனா
இதற்கு மீனா அப்போ இது தான் உன் மாமியாரா? உனக்காவது இது மாதிரி ஒரு மாமியார் கிடைச்சிருக்கு. என்ன மாதிரி இல்லாம இருக்கிறது அதுவே நல்லது. யாரு மேல கோபம் இருந்தாலும் டெய்லி என்னை படிச்சு தான் திட்டிட்டு இருப்பாங்க என்று சொல்லிவிட்டு சரி நீ போய் பாத்துக்கோ நான் கிளம்புறேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
முத்துவின் பிளான்
மறுபக்கத்தில் முத்து ரவி மற்றும் ஸ்ருதியை மாடிக்கு கூப்பிட்டு இருக்கிறார். அவர்கள் வந்தவுடன் என்ன விஷயம் என்று கேட்க செல்வம் வரட்டும் என்று எல்லோரையும் வெயிட் பண்ண வைக்கிறார். பிறகு செல்வமும் வந்ததும் நாளைக்கு நம்ம இன்கம்டாக்ஸ் ஆபிஸரா மாறி ஒரு வீட்டில ஆராய்ச்சி பண்ண போறோம் என்று சொல்ல, ரவி அது கிரைம் டா என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications