சிறகடிக்க ஆசை: விஜயாவை சிக்க வைத்த முத்து.. வில்லத்தனத்தை காட்டிய ரோகிணி.. வித்யா சொன்ன ரகசியம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மே மூன்றாம் தேதிக்கான எபிசோட்டில் விஜயா செய்த செயலை குடும்பத்தினர் எல்லோரிடமும் முத்து போட்டுக் கொடுக்கிறார். அதே நேரத்தில் விஜயாவிற்கு எதிராக ரோகிணியும் முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் வித்யா வீட்டிற்கு வந்த ரோகிணி எதுக்காக மீனா இங்கே வந்துட்டு போறா என்று கேட்க, வித்யா நான்தான் போன் பண்ணி வர சொன்னேன். நாளைக்கு என்னுடைய காதலரை அவரிடம் அறிமுகப்படுத்த போறேன். என்னுடைய காதலர் எனக்காக ஒரு வீடு வாங்கி இருக்கிறார் அந்த வீட்டை பார்ப்பதற்காகத்தான் மீனாவை வர சொன்னேன் என்று சொன்னதும் ரோகிணி கோபப்படுகிறார்.

ரோகிணி சொன்ன விஷயம்
ஆனாலும் வித்யா அவரை சமாளித்து விடுகிறார். பிறகு ரோகிணி தன்னுடைய வீட்டில் நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லி சாமியாரை பார்க்க போகும் விஷயத்தையும் சொல்கிறார். அப்போது தான் வீடு பார்க்க போகும் விஷயத்தை பற்றி சொல்லி வித்யா ரோகிணியை கூப்பிட, நான் வரவில்லை நீ மட்டும் போயிட்டு வா நாளைக்கு எனக்கு சாமியாரை பார்க்க போக வேண்டிய வேலை இருக்கு என்று சொல்லிவிடுகிறார்.
தப்பித்த புரோக்கர்
மறுபக்கத்தில் முருகன் மனோஜ் ஏமாற்றிய வீட்டு புரோக்கருடன் பைக்கில் வருகிறார். அப்போது புரோக்கர் எங்க போறீங்க என்று கேட்க, என்னுடைய அண்ணனை பார்க்க போகிறோம் என்று முத்துவை வந்து பார்க்க வருகிறார். அந்த நேரத்தில் புரோக்கருக்கு போன் வந்து விடுகிறது. அதனால் அவர் தனியாக நின்று பேசிக் கொண்டிருக்கிறார். முருகன் மட்டும் முத்துவை சந்தித்து தான் வீடு வாங்க போகும் விஷயத்தை சொல்லி நாளைக்கு காலையில் 10:00 மணிக்கு நீங்க வந்துருங்க, நீங்க ஓகே சொன்னா தான் வீடு வாங்குவேன் என்று சொல்ல முத்து சந்தோஷப்படுகிறார்.

முருகன் சொன்ன செய்தி
பிறகு முருகனை வழி அனுப்புவதற்காக முத்து வரும் போது அவருக்கு சவாரிக்கு ஃபோன் வந்துவிடுகிறது. இதனால் புரோக்கரை பார்க்காமல் கிளம்பி விடுகிறார். அடுத்ததாக பார்வதியும் விஜயாவும் சாமியாரை வந்து சந்திக்க அவர் என்ன விஷயம் என்று கேட்கிறார். என்னுடைய பையனுக்கு பணக்கார இடத்தில் பொண்ணு வேணும்னு ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணி வைத்தேன். ஆனா அவ எங்களை ஏமாத்திட்டா.

விஜயா போட்ட பிளான்
அதனால அவளை என் பையன் கிட்ட இருந்து பிரிக்கணும். என் பையனுக்கு வேற ஒரு பணக்கார பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று சொல்ல, சாமியார் ஒரு கயிறு மந்திரிச்சு கொடுத்து கையில் கட்டி விட சொல்கிறார். பிறகு பார்வதியும் விஜயாவும் வெளியே கிளம்பி வரும்போது பார்வதியை ரோகிணிக்கு போன் போட்டு வர சொல்கிறார். இவர்கள் இருவரும் கிளம்பியதும் ரோகிணி அந்த சாமியாரிடம் வந்து என் புருஷனை அவங்க அம்மா கிட்ட இருந்து பிரிக்கணும் என்று சொல்லி கயிறு வாங்குகிறார்.
முத்து செய்த செயல்
அடுத்ததாக விஜயா வீட்டிற்கு வந்து அந்த கயிறை சாமி போட்டோ முன்பு வைத்துவிட்டு ரூமுக்கு போகிறார். அந்த நேரத்தில் முத்து வீட்டிற்கு வந்து தான் கோவில் சவாரிக்கு போனதாகவும் அங்கு தனக்கு பிரசாதம் தந்ததாகவும் சொல்கிறார். மீனா நான் கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் பூஜை ரூமில் வச்சிடுங்க என்று சொல்ல, அங்கு வைத்திருந்த கயிறைப் பார்த்ததும் முத்து அந்த கயிறை எடுத்து அண்ணாமலை கையில் கட்டி விடுகிறார்.

சிக்கிய விஜயா
அண்ணாமலை கையில் கட்டி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் விஜயா வந்து கயிறைப் பார்த்ததும் அதிர்ச்சியாகிறார். எதற்காக இந்த கயிறை கட்டுனீங்க இத கழட்டுங்க என்று சொல்ல, அண்ணாமலை நீ கோவிலில் வாங்கிட்டு வந்ததுதானே என்று கேட்க ஆமாம் என்று சொல்கிறார். ஆனாலும் நீங்க கட்டக்கூடாது இது மனோஜ்க்காக வாங்குனது என்று சொன்னதும் எல்லோரும் எதற்காக இவ்வளவு ஸ்பெஷலா மனோஜ்க்கு வாங்கி கொடுக்குறீங்க என்று கேட்கிறார்கள். விஜயா அது வந்து வேற விஷயத்திற்காக என்று தடுமாறி கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications