சிறகடிக்க ஆசை: கோலாகலமாக நடக்கும் சீதாவின் திருமண ஏற்பாடு.. பிரச்சனை செய்யும் மனோஜ்.. முத்து செய்த செயல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூலை 5ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி மற்றும் அருண் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அதில் மனோஜ் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். அப்போது முத்து என்ன முடிவு செய்தார் என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜை திருடன் என்று நினைத்து மீனாவும் ஸ்ருதியும் போட்டு அடிக்கின்றனர் .அப்போது விஜயா வந்து அவரும் அவர் பங்குக்கு வெளுத்து வாங்குகிறார். அந்த நேரத்தில் ரோகிணி வந்து பிஏ என நினைத்து அவரும் போட்டு அடிக்கிறார். பிறகு அண்ணாமலை மற்றும் முத்து வர அவர்களிடம் விஷயத்தை சொன்னதும் முத்து என் வீட்டிலே திருட உனக்கு அவ்வளவு தைரியமா? என்று கையை முறுக்க அம்மா என்று மனோஜ் சத்தம் போட்டதும், விஜயா முத்துவிடம் விடு விடு என்று சொல்கிறார்.

பிறகு இந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு என்று மனோஜ் முகத்தில் இருக்கும் முகமூடியை எடுக்க, அங்கு மனோஜை பார்த்ததும் டேய் நீ தான் திருட வந்தியா? என்று கேட்க டேய் நான் திருட வரல தடுத்து நிறுத்துனேன். ஆனால் என்னை போட்டு அடிச்சிட்டாங்க, அவன் என் கண்ணாடியை கழட்டிட்டு எனக்கு முகமூடி போட்டு விட்டுட்டான் என்று சொன்னதும் குடும்பத்தினர் எல்லாருக்கும் உண்மை தெரிகிறது.
மறுபக்கத்தில் பிஏ கட்டுடன் உட்கார்ந்திருக்க, சிட்டி நாங்க ஆள் அனுப்புகிறோம் என்று சொன்னதுக்கு நீ தானே வீராப்பா போன உனக்கு இது தேவைதான் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ரோகிணிக்கு வேணும்னே பழி வாங்கிட்டா அவளை சும்மா விடமாட்டேன் என்று ரோகிணிக்கு போன் போட்டு என்னை மாட்டிவிட்டியே என்று கோபப்பட, உனக்கு சொன்ன வேலையே செய்ய துப்பில்லை என்று ரோகிணி திட்டுகிறார்.
அப்போ உன்னுடைய கொழுந்தனாரு முத்து கிட்ட நான் சொல்லப்போறேன் என்று சொன்னதும் சொல்லு அவனுக்கு தெரிஞ்சா பரவாயில்லை. இந்த ஒரு உண்மையை தெரிந்துவிட்டால் இனியாவது நான் நிம்மதியா இருப்பேன் என்று சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார். அதற்கு சிட்டி இப்போதைக்கு இந்த விஷயத்தை கொஞ்சம் ஆற போடு என்று சொல்கிறார். மறுபக்கத்தில் சீதாவின் கல்யாண வேலைகள் பரபரப்பாக மண்டபத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ரோகிணி சீதாவுக்கு மேக்கப் போட்டு ரெடி பண்ணுகிறார்.
அப்போது முத்து கல்யாண வேலைகளை முன் நின்று செய்து கொண்டிருக்கிறார். சீதா சோகமாக இருக்கிறார். அதை பார்த்த மீனா என்னவென்று கேட்க இவ்வளவு விஷயம் நடந்திருக்கு இந்த நேரத்தில் கூட நான் உண்மையை சொல்லவில்லையே என்று எனக்கு ஒரு மாதிரி வருத்தமா இருக்கு, மாமாவை கூப்பிட்டு உண்மையை சொல்லிடலாமா? என்று கேட்க, இந்த நேரத்தில் சொன்னால் சரிப்பட்டு வராது என்று சீதா சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது ஸ்ருதி வந்து சீதாவுக்கு நகையை போடுகிறார். மறுபக்கத்தில் திருமண பந்தியில் யாரோ பிரச்சனை செய்வதாக முத்துக்கு தகவல் வந்ததும் அங்கு போய் பார்க்க, அங்கு மனோஜ் தனக்கு வடை வரலன்னு சண்டை போட்டு கொண்டு இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications