சிறகடிக்க ஆசை: கையெழுத்தால் சிக்கும் மீனா.. முத்து கேட்ட கேள்வி! ரவி எடுத்த முடிவு, சந்தோஷத்தில் அண்ணாமலை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் 7ஆம் தேதிக்கான எபிசோடில் மீனா சொன்ன சந்தோஷமான விஷயத்தை கேட்டு அண்ணாமலை மகிழ்ச்சியில் வாழ்த்துகிறார். அதே நேரத்தில் முத்து சொன்ன வார்த்தையை கேட்டு ரவி முக்கிய முடிவு எடுக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து, மனோஜ், ரவி மூன்று பேரும் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மனோஜ் ரவியிடம் முத்து சொல்வதைக் கேட்காத, உன் மாமியார் கொடுக்கிற காசில் ரெஸ்டாரெண்ட் ஓபன் பண்ணிடு எவ்வளவு நாள் தான் நீ சமையல்காரனா இருப்ப என்று கேட்க, அதற்கு ரவி கோபப்படுகிறார் நான் செஃப் தான்.

மனோஜ் அட்வைஸ்
எனக்கு என் பொண்டாட்டி வீட்ல இருந்து வர்ற காசுல தான் முன்னேறனும்னு அவசியம் இல்ல என்று சொல்ல, அதற்கு முத்து சூப்பர் டா என்று பாராட்டுகிறார். அப்போது முத்து நல்லது சொன்னா கூட யோசித்து இருக்கலாம் ஆனா அவங்க பேசுறதை பார்க்கும்போது குடும்பத்தை பிரித்து உன்னையும் பல குரலையும் இங்கிருந்து கூட்டிட்டு போயிடுவாங்க என்று சொல்கிறார்.
அதற்கு மனோஜ் மாமியார் வீட்டில் இருந்து அவனுக்கு எந்த காசும் வரல அதனாலதான் அவன் இப்படி சொல்றான் என்று சொல்ல, அதற்கு ரவி முத்து உன்னை மாதிரி இல்லை என்று பதிலடி கொடுக்கிறார். உடனே மனோஜ் அப்போ நான் என் மாமியார் வீட்டு காசுக்காக எதிர்பார்த்து இருக்கிறேனா? என்று கேட்க, ஆமா அதுல என்ன சந்தேகம் என்று சொன்னதும், உனக்கு போய் அட்வைஸ் பண்ண வந்தேன் பாரு நான் என்று திட்டிவிட்டு போகிறார்.
ரவி எடுத்த முடிவு
மறுபக்கத்தில் மீனா, ஸ்ருதி மற்றும் ரோகிணி 3 பேரும் கிச்சனில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மனோஜை போலவே ரோகிணியும் ஸ்ருதியிடம் பேசுகிறார். அதிலும் ரவி கிட்ட நீங்க பேசுனது தான் சரி, ரவி உங்க அம்மா பண்ணுற ஹெல்ப்பை ஏற்றுக்கொள்ள ஏன் தயங்குறாரு? நீங்க அவர் மேல கோபப்பட்டதுல தப்பே இல்ல என்று சொல்ல, மீனா நீங்க ஏன் இப்படி பேசுறீங்க என்று கேட்கிறார்.
மீனா கொடுத்த பதிலடி
பிறகு நீங்க மாமாவோட காசை ஜீவா கொடுத்ததா சொல்லி ஷோரும் ஓபன் பண்ணுனீங்களே என்று மீனா பழைய கதையை பேச உடனே ரோகிணி கோபப்படுகிறார். அதற்கு ஸ்ருதி என்னால் உங்களுக்குள் சண்டை வேண்டாம் என்று சமாதானப்படுத்துகிறார். அப்போது மீனா ரவிக்கு சொந்தமா உழைச்சி முன்னேறி ரெஸ்டாரண்ட் வைக்கணும்னு ஆசை இருக்கு. அதனால இன்னும் நிறைய தெரிஞ்சுக்கணும் நினைக்கிறாரு.

ஸ்ருதி கேட்ட கேள்வி
அவருக்குன்னு ஒரு சுயமரியாதை இருக்கும்ல என்று சொல்ல, எங்க அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு. அவங்களுக்கு அப்புறம் எல்லா சொத்தும் எனக்கு மட்டும்தான். அப்படி இருக்கும் போது ரெஸ்டாரெண்ட் தொடங்குவதில் எந்த சுயமரியாதை குறைஞ்சிட போகுது? இப்போ ரவியோட அப்பா, அம்மா எனக்கு ஏதாவது கொடுத்தாங்கன்னா நான் வாங்கிட்டா அப்போ என்னோட சுய மரியாதை போயிடுமா என்று மீனாவிடம் கோபமாக பேசிவிட்டு போகிறார்.
மீனாவுக்கு பெரிய ஆர்டர்
மறுநாள் காலையில் மீனா மண்டபத்துக்கு டெக்கரேஷன் ஆர்டர் எடுக்க போக, அங்கிருக்கும் மேனேஜர் நீங்க அனுப்புன டெக்கரேஷன் அவங்களுக்கு புடிச்சிருக்கு என்று சொல்கிறார். அதோடு உங்களுக்கு தான் இந்த மண்டபத்தில் மொத்த ஆர்டரும் கொடுத்திருக்காங்க. பட்ஜெட் எவ்வளவு ஆகும் என்று கேட்க, இரண்டு லட்சம் ஆகும் என்று மீனா சொல்கிறார்.

கையெழுத்தில் சிக்கும் மீனா
முதலில் அவர் அதற்கு மறுத்தாலும் பிறகு சரி நான் அவங்க கிட்ட ரெண்டு லட்சம் என்று சொல்கிறேன் ஏன்னா எங்களுக்கும் கமிஷன் வேணும் என்று சொல்கிறார். அதற்கு மீனாவும் சரி என்று சம்மதிக்கிறார். அப்போது மேனேஜரிடம் அட்வான்ஸ் வாங்க போக அவர் மீனாவிடம் ஒரு பத்திரத்தில் கையெழுத்து வாங்குகிறார்.

சிந்தாமணியின் பிளான்
பிறகு மீனா போனதும் அங்கே சிந்தாமணி வர அவர் நீங்க சொன்ன மாதிரியே நான் கையெழுத்து வாங்கிட்டேன் என்று சொல்கிறார். நீங்க தானே இந்த ஆர்டர் எடுப்பீங்க எதுக்கு அந்த பொண்ணு கிட்ட கொடுக்க சொன்னீங்க? இது மட்டும் இல்லாம அந்த பொண்ணு உங்களுக்கு எதிரா வளர்ந்துட்டு வருது என்று சொல்ல, நல்லா பூத்து குலுங்கட்டும் அப்போதானே புடுங்கி போட முடியும் என்று திட்டம் போடுகிறார். மறுபக்கத்தில் மீனா வீட்டிற்கு சந்தோஷமாக வந்து முத்துவிடம் சொல்ல முத்து மீனாவிற்கு வாழ்த்துக்கள் சொல்லி மீனாவை தூக்கி சுற்றி சந்தோஷப்படுகிறார்.
கோபப்படும் விஜயா
பிறகு வீட்டிலேயே எல்லோரிடமும் மீனாவிற்கு இரண்டு லட்சத்திற்கு ஆர்டர் கிடைத்திருக்கு அதில் சிறப்பாக செய்தால் ஐம்பதாயிரம் லாபம் கிடைக்கும் என்று சொன்னதும் எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் விஜயா மட்டும் அதிர்ச்சியில் கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications