சிறகடிக்க ஆசை: கவரிங் நகைகள் பற்றிய ரகசியத்தை உடைத்த ஸ்ருதி அம்மா.. விஜயாவை வெளுத்த பாட்டி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 6ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் முத்து பாட்டியின் பங்க்ஷனுக்கு வராததால் எல்லோரும் மீனாவை அவமானப்படுத்தி பேசுகின்றனர். அதே நேரத்தில் ஸ்ருதியின் அம்மா மீனா போட்டிருக்கும் நகைகளைப் பற்றி பேசி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார். அதை பற்றி பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா டிவி வாங்கியதால் நீ என் கடையிலே வாங்கி இருக்கலாமே வேற கடையில வாங்கி இருக்கியே என்று மனோஜ் கேட்டதும் விஜயா இது பழசு டா என்று உளறி விடுகிறார். பிறகு இது பழைய கடை பார்வதிக்கு தெரிஞ்சவங்க ஆஃபர் போட்டு இருந்ததால அங்க வாங்குனேன். இனி பார்வதிக்கு கொஞ்சம் கொஞ்சமா பணத்தை கொடுத்துருவேன் என்று சொல்லி பாட்டியிடம் அத்தை உங்களுக்கு கிப்ட் புடிச்சிருக்கா என்று கேட்க, அதற்கு பாட்டி எனக்கு நீ வாங்கி தரணும்னு முடிவு பண்ணி அதுவே பெரிய விஷயம் ரொம்ப சந்தோஷம் என்று சொல்லிவிடுகிறார்.

அதைத் தொடர்ந்து மீனாவின் அம்மாவும் தங்கச்சியும் வீட்டிற்கு வருகின்றனர். அவர்களை பார்த்ததும் விஜயா சாப்பாடு போடுறாங்கன்னா உடனே வந்துருவாங்க என்று பார்வதியிடம் முனங்கி கொண்டிருக்கிறார். மீனாவின் அம்மாவிடமும் தங்கச்சியிடமும் பாட்டி பேசிக் கொண்டிருக்கின்றார். அப்போது சீதா காலேஜ் முடித்ததும் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து விட வேண்டும் என்று பாட்டி சொல்ல,
அதற்கு மீனாவின் அம்மா நல்லவனா வந்தா சந்தோசம் என்று சொல்லிக் கொண்டு இருக்க, அதற்கு நீங்க வச்சிருக்கிற காசு பணத்துக்கு உங்களுக்கு நல்லா வரும் வந்துருமா? அப்படி பார்த்தா இன்னொரு முறை யாராவது ட்ரெயினை ஏத்தி கொலை பண்ணினால் தான் நல்ல மாப்பிள்ளை கிடைக்கும் என்று சொல்ல பாட்டியும் அண்ணாமலையும் விஜயாவை திட்டுகின்றனர்.
பிறகு மீனா டிரஸ் மாத்தி விட்டு நகைகளை போட்டுக்கொண்டு வெளியே வர அதை பார்த்து விஜயா மற்றும் மனோஜ் அதிர்ச்சி அடைகின்றனர். நகையைப் பார்த்து கவரிங் என்பதை பாட்டி கண்டுபிடிச்சுருவாங்களோ என்று மனோஜ் சொல்ல விஜயா அப்படி எல்லாம் நடக்காது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதியின் அம்மா வருகிறார்.

அவர் முதலில் எல்லாரிடமும் பேசிவிட்டு மீனாவை பார்த்ததும் என்ன மீனா நீ கவரிங் நகை போட்டு இருக்க என்று கேட்க மீனா அதிர்ச்சியாகிறார். அதுபோல குடும்பத்தில் எல்லோரும் அதிர்ச்சி ஆகின்றனர். அப்போது மீனாவின் அம்மா அது நகை கிடையாது. நாங்க தங்க நகை கொஞ்சம் போட்டோம் என்று சொல்ல, கோபமான பாட்டி உங்ககிட்ட இது தங்க நகை என்று பில்லை காட்டுனா தான் நம்புவீங்களா? விட்டா ஒரசி பாக்கணும்னு சொல்லுவீங்க போல, மீனா தங்க நகை போடக்கூடாதா என்று ஸ்ருதியின் அம்மாவிடம் கேட்கிறார்.
அதற்கு ஸ்ருதியின் அம்மா இது பார்க்க கவரிங் நகை போல இருந்து அதனாலதான் நான் கேட்டேன் என்று சொல்ல உங்களுக்கு தோணுச்சுன்னா உங்க மனசோட வச்சுக்கணும், இத்தனை பேரும் முன்னாடி அந்த பொண்ணை கேவலப்படுத்துற மாதிரி கேக்குறீங்க அவ மனசு எவ்வளவு கஷ்டப்படும் என்று பாட்டி திட்ட ஸ்ருதியின் அம்மா சுதா மீனாவிடம் மன்னிப்பு கேட்கிறார். அப்போது ஸ்ருதி அம்மாவை திட்டி கூட்டி கொண்டு போய் விடுகிறார்.

பிறகு நல்லவேளையாக தப்பிச்சோம் என்று மனோஜ் விஜயாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்த கட்டத்தில் கேக் வைத்து எல்லா வேலைகளையும் செய்து முடித்து விட்டதால் கேக் வெட்டி விடலாம் என்று எல்லோரும் சொல்ல, பாட்டி முத்து வந்து விடட்டும் என்று சொல்ல, அதற்கு விஜயா அவன் எந்த பாரில் எப்படி இருக்கிறானோ யாருக்கு தெரியும்? போனை வேற ஸ்விட்ச் ஆப் பண்ணி வச்சிருக்கான்.
அவன் குடிச்சுட்டு நாலு காலில் நாளைக்கு காலையில தான் வந்து சேருவான். அதுவரைக்கும் கேக் வெட்டாமல் இருக்க முடியுமா? என்று கேட்க, அதற்கு பாட்டி அவன் இதுவரைக்கும் எல்லா பிறந்த நாளில் என் கூடவே இருப்பான். என்னை விட்டு போக மாட்டான். ஆனால் இன்னைக்கு அவன் வெளியில போயிருக்கானா ஏதாவது காரணம் இருக்கும் என்று சொல்ல, விஜயா சரி அவன் வரும்போது கேக் வெட்டி கொள்ளலாம் இப்போ கிப்ட் எல்லாரையும் கொடுக்க சொல்லிடலாம் என்று சொல்ல...,

பாட்டி அதையும் அவன் வந்த பிறகு கொடுக்கலாம் என்று சொல்ல விஜயாவும் மனோஜும் இங்கு இருக்கிறவங்க தானே கிப்ட் கொடுக்கப் போறோம். அவன் எப்படியும் கிப்ட் வாங்கிட்டு வர போறது கிடையாது. அதனால இங்க இருக்கிறவங்க எல்லாரும் வரிசையாக கிப்ட் தரோம் என்று மனோஜ் மற்றும் ரோகினி சேர்ந்து நவரத்தின மாலையை கொடுக்க பாட்டி சந்தோஷப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
நாளைக்கு என்று வெளியான வீடியோவில் எல்லோரும் கிப்ட் தந்தாச்சு. அதனால உங்களோட ஸ்பெஷல் கிப்ட் யாருக்கு பாட்டி என்று மனோஜ் கேட்க, அதற்கு பாட்டி என் பேரன் முத்து வரட்டும் என்று சொல்ல அதற்கு மனோஜ், அவன் நாளைக்கு காலையில் தான் குடிச்சிட்டு வருவான் என்று சொல்ல, வாசலில் முத்து வந்து நின்று டேய் தொழிலதிபர் உன்னோட ஆசை நிறைவேறாது என்று சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications