சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம்! கிரிஷை கடத்திய பிஏ! ரோகிணி பற்றிய உண்மையை சொல்லும் மீனா! மனோஜ் பாவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணியின் மகன் கிரிஷை ரோகினியின் பழைய பிஏ கடத்தி இரண்டு லட்சம் பணம் கேட்கிறார். ஆனால் ரோகினி தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி மனோஜிடம் பணம் கேட்டு மிரட்ட சொல்லி பிரச்சனையில் சிக்குகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மைகள் மீனாவிற்கு மட்டும் தெரிந்து இருக்கிறது. ரோகிணியின் நிஜப்பெயர் கல்யாணி என்றும் கிரிஷ் அவருடைய பையன் தான் என்ற உண்மையையும் தெரிந்தது. நான் இந்த உண்மையை வீட்டில் சொல்லப் போகிறேன் என்று மீனா கிளம்பினார். ஆனால் ரோகிணி நீங்க உண்மைய சொன்னா நாங்க தற்கொலை செஞ்சுக்குவோம் என்று தன்னுடைய மகனோடு மிரட்டி இருந்தார்.

Siragadikka aasai serial vijay tv

இதனால் வேறு வழி இல்லாமல் மீனாவும் உண்மையை சொல்லாமல் மறைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மீனா உண்மையை மறைக்க மறைக்க தினமும் குடும்பத்திற்கு பிரச்சினைதான் வந்திருக்கிறது. வீட்டிற்குள் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது முத்துவுக்கு சந்தேகம் வருகிறது. இதுவரைக்கும் முத்து மற்றும் மீனா மீது பாசமாக இருந்த கிரிஷ் இப்போ மனோஜ் தான் என்னுடைய டாடி என்று மனோஜ் பக்கம் சுத்தி கொண்டிருக்க அதை பார்த்து முத்து யோசித்துக் கொண்டிருக்கிறார்.

அதேபோல வீட்டில் நடக்கும் விஷயங்களைப் பற்றி கேட்கும் போது மீனாவும் உண்மையை சொல்லாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இப்படியான சூழ்நிலையில் தான் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவில் ரோகிணியின் பிஏ வழக்கம் போல ரோகிணிக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டுகிறார்.

Singapenne Serial: சிங்க பெண்ணே சீரியல் அன்புக்கு கல்யாணம்! மனைவி யார் தெரியுமா? இந்த விஜய் டிவி நடிகை தான்!
ஆனால் ரோகிணி என்னிடம் பணம் இல்லை என்று சொல்ல, உன்னுடைய மகன் கிரிஷ் எங்கிட்ட தான் இருக்கிறான். அவனை கடத்தி வைத்திருக்கிறேன் நீ பணம் தரவில்லை என்றால் அவனை கொன்னுருவேன் என்று மிரட்டுகிறார். உடனே பயந்து போன ரோகிணி என்கிட்ட பணம் இல்ல ஆனால் நான் ஒரு நம்பர் தருகிறேன் அந்த நம்பருக்கு போன் செய்து பணம் கேளு தருவாங்க என்று மனோஜ் நம்பரை கொடுக்கிறார்.

சிறகடிக்க ஆசை: ரோகிணி தான் கல்யாணி! உண்மையை உளறிய மனோஜ், விஜயா எடுத்த முடிவு! தவிக்கும் மீனா
மனோஜ் நம்பருக்கு போன் செய்து உங்க வீட்டில் இருக்கிற கிரிஷை நான் கடத்தி வைத்திருக்கிறேன் இரண்டு லட்சம் பணம் வேண்டும் என்று பிஏ மிரட்டுகிறார். அப்போது முத்துவும் பக்கத்தில் இருக்க இதை ஸ்பீக்கரில் போட்டு முத்துவும் கேட்கிறார். இந்த விஷயத்தை கேட்டு மீனா அதிர்ச்சியில் இருக்கிறார்.

இதனால் அடுத்த வாரம் கிரிஷை காப்பாற்றுவதற்காக முத்து முயற்சிகள் எடுப்பாரா? அப்போதுதான் ரோகிணி பற்றிய உண்மைகள் தெரியவர இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேலை மீனாவே இந்த உண்மையை சொல்லப் போகிறாரா? அல்லது வழக்கம்போல மீனா மறைக்க அதை முத்துவே கண்டுபிடிக்கிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+